Monday, 28 January 2013

கர்பப்பை கட்டி அறுவைச்சிகிச்சைக்காக மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _27012013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 27.01.2013 அன்று திருப்பூர் M.K.M. ரைஸ் மில் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த சகோதரி. ஆரிப் நிஷா  அவர்களின்  கர்பப்பை கட்டி அறுவைச்சிகிச்சைக்காக
ரூ.5000 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

பிறமத சகோதரருக்கு மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _27.01.2013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 27.01.2013 அன்று பெருமாநல்லூர் தாலுகா நெருப்பெருச்சல் பகுதியை சேர்ந்த பிறமதசகோதரர். ரங்கசாமி  அவர்களின் இருதய கட்டி அறுவை சிகிச்சைக்காக
ரூ.5000 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

பேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர் மாவட்டம் _28.01.2013

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம்   சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் திருப்பூர் கோம்பைதோட்டம் 
மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில் பிரதி ஞாயிறு ஞாயிறு காலை 10:00 மணிமுதல்1:00 மணி வரை   நடைபெற்றுவருகிறது .
27.01.2013 அன்று   10 ஆவது வாரம்  பேச்சாளர்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை கண்டன பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு _உடுமலை _27.01.2013



 திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை அலுவலகத்தில் 27.01.2013 அன்று இஸ்லாத்தினையும் இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்த
விஸ்வரூபம் சினிமா வை கண்டித்தும் மற்றும் இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக கருத்து வெளியிட்ட பத்திரிக்கைகளை   கண்டித்தும் நடந்த  சென்னை கண்டன
பொதுக்கூட்டத்தை   நேரடி ஒளிபரப்பு    செய்யப்பட்டது . இதில்  சகோதர,சகோதரிகள்  ஏராளமான   கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

"சாதித்துகாட்டுவோம்" மாணவ மாணவியர்களுக்காக தன்னம்பிக்கைநிகழ்ச்சி _கோம்பைதோட்டம் _27.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
கோம்பைதோட்டம் கிளை சார்பில்
27.01.2013 ஞாயிறுஅன்று
காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை
     
திருப்பூர்நொய்யல்வீதி
M.K.M.ரைஸ்மில்காம்பவுண்ட்இல் சாதித்துகாட்டுவோம் எனும் நிகழ்ச்சி 10, +2 படிக்கும் மாணவ மாணவியர்களுக்காக பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?...
போன்ற மேலும் பல சந்தேகங்களுக்கு விடை அளித்து


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி சகோ.சமீம் , சகோ.சாஹிதுஒலி மற்றும் திருப்பூர் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமைஆசிரியர் .சகோதரி.உஷா தேவிஆகியோர்
தன்னம்பிக்கை ஊட்டி மாணவ மாணவியர் படிப்பில் வெற்றி பெற
ஊக்கம் அளிக்க நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இஸ்லாத்தின் பார்வையில் அணுமதி பெறுதல் _காலேஜ்ரோடு _27.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
காலேஜ்ரோடு  கிளை சார்பாக  27.01.2013 அன்று மாலை  
காலேஜ்ரோடு G.K.கார்டன்பகுதியில் 
பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.குர்ஷித்பானு  அவர்கள்
"இஸ்லாத்தின் பார்வையில் அணுமதி பெறுதல் "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

Sunday, 27 January 2013

உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில்"இதுதான் இஸ்லாம்" _உடுமலை _012013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 
உடுமலை கிளை சார்பில்  உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில் தினமும் (இரவு 9.00முதல் 10.00 வரை) 1மணி நேரம்  தூய இஸ்லாமிய மார்க்கவிளக்கநிகழ்ச்சிகள் "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்படுகிறது.
இதன்முலம் உடுமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள அணைத்து சமுதாய மக்களும்  பயன் பெரும் வகையில் சத்தியத்தை கொண்டு செல்லப்படுகிறது.
அல்ஹம்துலில்லாஹ்.

தர்கா போட்டோ அகற்றம் _தாவா _ M.S.நகர் _27012013

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 27.01.2013அன்று
M.S.நகர் பகுதி வீடுகளில் இருந்த இணைவைப்பு பொருள்கள்
குறித்து தாவாசெய்து, தர்கா போட்டோ போன்றவை அகற்றப்பட்டது

"நபிவழி தொழுகைமுறை " தர்பியா _M.S.நகர் _27012013

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 27.01.2013அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
"நபிவழி தொழுகைமுறை " தர்பியா , சகோ.அப்துல்லாஹ்M.I.SC.,அவர்கள் நடத்தினார்.
கலந்துகொண்ட சகோதரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் வழங்கினார்

பிறசமய சகோதரர்.சுந்தர் .அவர்களுக்கு ”இஸ்லாமிய மார்க்க விளக்கநூல் வழங்கி தஃவா _திருப்பூர் மாவட்டம் _26012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
26.01.2013 அன்று
இஸ்லாமிய அடிப்படையை அறிய விரும்பிய
திருப்பூரில் வசிக்கும் சேலம் மாவட்ட பிறசமய சகோதரர்.சுந்தர் .அவர்களுக்கு ”இஸ்லாமிய மார்க்க விளக்கநூல்
மற்றும் DVD க்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது

கேள்வி- பதில்நிகழ்ச்சி _தாராபுரம் -25012013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தமது மார்க்க  அறிவை வளர்த்துக்கொள்ள அல்குரான்- ஹதிஸ்  
கேள்வி- பதில்  நிகழ்ச்சி நடைபெற்றது.
25.01.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி வளாகத்தில்
சரியான பதில் அளித்த 5 நபர்களுக்கு  பரிசளிப்பு விழா நடைபெற்றது

மாணவர்களுக்கு தர்பியா _பெரிய தோட்டம் _27012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில்  27.01.2013அன்று  மதரஸா மாணவர்களுக்கு தர்பியா 
நிகழ்ச்சி யில் சகோதரர். பஷீர் அவர்கள் "பேய் பிசாசு உண்டா" என்ற தலைப்பில் உரையாற்றி,மாணவர்களின் மார்க்க சம்மந்தமாக கேள்விகளுக்கு பதில் வழங்கினார்.

Friday, 25 January 2013

பிறசமய சகோதரர்.க்கு இஸ்லாமிய மார்க்க விளக்க நூல் DVD _தாராபுரம் _24012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை சார்பில் 
24.01.2013 அன்று பிறசமய சகோதரர்.க்கு ”இஸ்லாமிய மார்க்க விளக்க நூல் மற்றும்  DVD க்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது

"விஸ்வரூபம் திரைப்படம் தமிழகமெங்கும் ஓடாது ". _கண்டன போஸ்டர்கள் _தாராபுரம் _24012013





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 
தாராபுரம்கிளை சார்பில் 24.01.2013 அன்று முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள  
"விஸ்வரூபம் திரைப்படம் தமிழகமெங்கும் ஓடாது ".
எனும் கண்டன போஸ்டர்கள் தாராபுரம் நகரெங்கும்

முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.

ஒட்டஞ்சத்திரம் கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக நிதியுதவி _,உடுமலை _25012013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 25.01.2013 அன்று
திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டஞ்சத்திரம் கிளை பள்ளிவாசல்
உருவாக்கும் பணிக்காக,உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ரூ.2700 /=
ஜும்மாஹ் வசூல் செய்து வழங்கப்பட்டது

"விஸ்வரூபம் திரைப்படம் தமிழகமெங்கும் ஓடாது " _உடுமலை _24012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 
உடுமலை கிளை
சார்பில் 24.01.2013 அன்று 

முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள  
"விஸ்வரூபம் திரைப்படம் தமிழகமெங்கும் ஓடாது ".
எனும் கண்டன போஸ்டர்கள் உடுமலை நகரெங்கும் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.

Thursday, 24 January 2013

பகிரங்க விவாத அறைகூவல் _கண்டன போஸ்டர்கள் _தாராபுரம் _23012013

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பாக 23.01.2013 அன்று ,குற்றங்களுக்கு இஸ்லாம் வழங்கும் தண்டனைகள் பிற்போக்கானவை என உண்மைக்கு புறம்பாக கட்டுரை எழுதிய மனுஷ புத்திரன்,மற்றும் கட்டுரை வெளியிட்ட நக்கீரன்,ஆனந்த விகடன் ஆகியவை தமது கருத்தில் உண்மையாளர்களாக இருந்தால் விவாதம் செய்ய வாருங்கள் என TNTJ பகிரங்கஅறைகூவல் என்ற  கண்டன போஸ்டர்கள் தாராபுரம் நகர் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.

குர்ஆன் கிளாஸ் _மங்கலம் _20012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை
மாணவர் அணியின் சார்பாக 20-01-2013 அன்று குர்ஆன் கிளாஸ் நடைபெற்றது. தலைப்பு : ஜின்கள் ஓர் ஆய்வு

சுன்னத் வல் ஜமாத் கபர்ஸ்தானுக்கு நிதியுதவி _18012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளையின் சார்பாக 18-01-2013 அன்று திருப்பூரில் உள்ள அனுபர்பாளையம் என்ற ஊரில் உள்ள சுன்னத் வல் ஜமாத்துக்கு சொந்தமான கபர்ஸ்தானில் சுற்று சுவர் கட்ட ரூபாய் 2600 நிதியுதவியை அந்த பள்ளி நிர்வாகியிடம் கொடுக்கப்பட்டது
(வாங்குபவர் வலது)  

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் _20012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 20-01-2013 அன்று காலை 08:00 மணி முதல் 09:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் சமீர் அவர்கள் பெற்றோரை பேணுவோம் என்ற தலைப்பிலும்,  இத்ரீஸ் அவர்கள் வெற்றியாளர்கள் யார்? உரையாற்றினார்கள்.

மவ்லித் ஓதினால் நிரந்தர நரகமே _மங்கலம் _17012013


   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக  17-01-2013 அன்று மவ்லித் ஓதினால் நிரந்தர நரகமே என்ற துண்டு பிரசுரம் ஆயிரம் பிரதிகள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. 


Wednesday, 23 January 2013

வட்டி இல்லா கடன் உதவி _உடுமலை _22.01.2013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
22.01.2013
அன்று  
வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில் 
பழனி  சகோதரர். மாமன்ன மைதீன்
அவர்களுக்கு ரூ.10,000/=
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது

வட்டி இல்லா கடன் உதவி _உடுமலை _21.01.2013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
21.01.2013
அன்று  
வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில்
தாராபுரம் சகோதரர்.
ஜாகிர் ஹுசைன்
அவர்களுக்கு ரூ.10,000/=
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

TNTJ பகிரங்கஅறைகூவல் என்ற கண்டன போஸ்டர்கள் _உடுமலை _22012013


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 22.01.2013 அன்று ,

குற்றங்களுக்கு இஸ்லாம் வழங்கும் தண்டனைகள் பிற்போக்கானவை என உண்மைக்கு புறம்பாக கட்டுரை எழுதிய மனுஷ புத்திரன்,மற்றும் கட்டுரை வெளியிட்ட நக்கீரன்,ஆனந்த விகடன் ஆகியவை தமது கருத்தில் உண்மையாளர்களாக இருந்தால் விவாதம் செய்ய வாருங்கள் என TNTJ பகிரங்கஅறைகூவல் என்ற  கண்டன போஸ்டர்கள் உடுமலை நகர் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.

Tuesday, 22 January 2013

சாதித்துகாட்டுவோம் _கோம்பைதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில் இன்ஷா அல்லாஹ் வருகிற 27.01.2013 ஞாயிறுஅன்று  காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை  
                  திருப்பூர் நொய்யல்வீதி M.K.M. ரைஸ்மில்காம்பவுண்ட் இல்
                        சாதித்துகாட்டுவோம்
              எனும் நிகழ்ச்சி 10, +2 படிக்கும் மாணவ மாணவியர்களுக்காக
பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?...
போன்ற மேலும் பல சந்தேகங்களுக்கு விடை அளித்து
தன்னம்பிக்கை ஊட்டி மாணவ மாணவியர் படிப்பில் வெற்றி பெற
ஊக்கம் அளிக்க நடைபெற உள்ளது.