Sunday, 6 January 2013

அவசர இரத்ததானம் _உடுமலை _05.01.2013

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசுமருத்துவமனையில்
சிகிச்சைபெற்று வரும் மடத்துக்குளம்,சோழமாதேவி
சகோதரி. ஜன்னத்துல் பிர்தௌஸ் அவர்களின்அவசர இரத்ததேவைக்கு   05.01.2013 அன்று  உடுமலை TNTJ மருத்துவ சேவை மையம் மூலமாக சகோதரர்.ஆசிக்ரஹ்மான்அவர்களின்  
B+ இரத்தம் ஒரு யூனிட்
உடுமலை அரசுமருத்துவமனை இரத்த வங்கியில்
அவருக்கு இரத்ததானம் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 5 January 2013

ஏழைபெண்ணுக்கு தையல்எந்திரம் _மங்கலம்கிளை _04012013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளையின்சார்பாக 04-01-2013அன்று மங்கலத்தில்வசிக்கும் கணவரைஇழந்த மசூதாஎன்றஏழைபெண்ணுக்கு வாழ்வாதாரஉதவியாக ரூபாய்7000மதிப்புள்ள தையல்எந்திரம் அந்தபெண்மணியிடம்வழங்கப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

கேசவன் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம்"_உடுமலை _04012013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 04.01.2013 அன்று உடுமலை சகோதரர்.கேசவன் என்ற பிறசமய சகோதரருக்கு "திருகுர்ஆன்தமிழாக்கம்" வழங்கி தாவா செய்யப்பட்டது.

Thursday, 3 January 2013

மருத்துவ உதவி _10000 _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த சகோதரி.ஜுலைகா அவர்களுக்கு 
மருத்துவ  உதவியாக ரூ. 10000
மாநில நிர்வாகம் முலம் வழங்கிய நிதியில் வழங்கப்பட்டது.

முருகேஸ்வரி,ஆயிஷாவாக இஸ்லாத்தினைவாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

29.12.2012 அன்று திருப்பூர் மாவட்டம் குமரன் நகர் பகுதியை சேர்ந்த சகோதரி.முருகேஸ்வரி அவர்கள் சகோதரி.ஆயிஷாவாக
தூயஇஸ்லாத்தினை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ் !

Wednesday, 2 January 2013

கிருத்துவ மத சகோதரர்.மில்டன் அவர்களுக்கு "திருக்குர்ஆன் தமிழாக்கம்” _உடுமலை _020122013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
02.01.2013 அன்று உடுமலை கிருத்துவ மத சகோதரர்.மில்டன் அவர்களுக்கு
"திருக்குர்ஆன் தமிழாக்கம்” மற்றும் "மாமனிதர் நபிகள்நாயகம்"
புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

Tuesday, 1 January 2013

உடுமலைபாரதி அவர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” 01012013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக  
01.01.2013 அன்று
உடுமலை சகோதரர்.பாரதி  அவர்களுக்கு "திருக்குர் ஆன் தமிழாக்கம்” மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.


உடுமலைதினேஷ் குமார்அவர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” 01012013


01.01.2013 அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக
உடுமலை சகோதரர்.தினேஷ் குமார் அவர்களுக்கு திருகுரான் தமிழாக்கம்
,மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

அவசர செயற்குழு கூட்டம் _திருப்பூர் _ தாராபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக 
31.12.2012 அன்று  தாராபுரம்  கிளை மர்கஸில்
அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது, கிளை நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் கலந்துகொண்டு
 வருகிற ஜனவரி 3 அன்று சென்னையில் நடைபெறும்
மாபெரும் சிறை நிரப்பும்
போராட்டத்தில்,
தாராபுரம்
கிளை
சார்பில் பெருவாரியான மக்களை
அழைத்து செல்வது  என்றுமுடிவெடுத்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் எனும் தீமைக்கு எதிரான நேரடி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
கலாச்சார சிரழிவான புத்தாண்டு கொண்டாட்டம் எனும் தீமைக்கு எதிரான நேரடி தாவா
31.12.2012 அன்று முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாழும் பகுதிகளில்
நமது இளைஞர்கள் அறியாமையால் புத்தாண்டு கொண்டாட்டம் எனும் பெயரில்
ஆட்டம் பாட்டம்கொண்டாட்டம் நிகழ்த்த ஏற்பாடுகள் செய்தவர்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள்
மற்றும் மாநில பேச்சாளர் நேரில் சென்று சந்தித்து
இந்த தீமையின் விளைவை விளக்கினர்.
அல்லாஹுவின் மாபெரும் அருளால் உடனடியாக அந்த மக்கள்

புத்தாண்டு கொண்டாட்டம் எனும் தீமையின் விளைவை அறிந்து
பலூன்கள்  ,ஆடியோ சாதனங்கள் உட்பட ஏற்பாடுகளை அப்புறப்படுத்தினர்.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 31 December 2012

பெண்கள் பயான் _நல்லூர் _30.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 30.12.2012 அன்று  மாலை 6.30. மணி முதல்
நல்லூர் V.S.A. நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர்.ரசூல் மைதீன் அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன?"
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி நடைபெற்றது.

Sunday, 30 December 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _பெரியகடை வீதி _28122012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர்மாவட்டம் பெரியகடை வீதி கிளை 
சார்பாக  28.12.2012 அன்று
பெரியகடை வீதி புதிய மர்கஸில்  

 "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சகோதரர்.M.S.சுலைமான்
அவர்கள் சகோதர சகோதரிகளின்
இஸ்லாம் சம்பந்தமான  பல்வேறு சந்தேகங்களுக்கு ,கேள்விகளுக்கு குரான்ஹதிஸ் அடிப்படையில் தெளிவான  பதில் வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ் !

புதிய ஜும்மா _பெரியகடை வீதி _28.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   பெரியகடை வீதி கிளை  சார்பாக  28.12.2012 அன்று பெரியகடை வீதி புதிய மர்கஸில்  சகோதரர்.M.S.சுலைமான் ஜும்மா உரையுடன் ஜும்மாதொழுகை ஆரம்பம்செய்யப்பட்டது .


சிறை நிரப்பும் போராட்ட அவசர செயற்குழு _30.12.2012



 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 
30.12.2012 அன்று  உடுமலை கிளை அலுவலகத்தில்
அவசர செயற்குழு நடைபெற்றது, கிளை நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் கலந்துகொண்டு
 வருகிற ஜனவரி 3 அன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் சிறை நிரப்பும் 
போராட்டத்தில், உடுமலை கிளை சார்பில் 
பெருவாரியான மக்களை 
அழைத்து செல்வது  
என்றுமுடிவெடுத்தனர்.

சிறை நிரப்பும் போராட்ட_ மாவட்டசெயற்குழு _30.12.2012



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருப்பூர் மாவட்டம் சார்பாக   30.12.2012 அன்று 
திருப்பூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில்
அவசர மாவட்ட செயற்குழு நடைபெற்றது,
மாவட்டத்தின் அனைத்துகிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னையில் சமூக விழிப்புணர்வு பிரசுரம் விநியோகித்த நிர்வாகிகளை 
நள்ளிரவில் வீடு பூந்து கைது செய்த காவல் கயவர்களையும்,

கைது செய்ததை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்த சென்றவர்கள் மீது
காட்டுமிராண்டி தனமாக தடியடி தாக்குதல் நடத்திய
காவல் துறை அதிகாரிகளையும்  கண்டித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் 
என்றும் ,இல்லையெனில் வருகிற ஜனவரி 3 அன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தில்,
திருப்பூர் மாவட்டம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது .

நேரடி ஒளிபரப்பு _உடுமலை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை அலுவலகத்தில் 29.12.2012 அன்று
காவல் துறையை  கண்டித்து சென்னை மண்ணடி கண்டன
பொதுக்கூட்டத்தை   நேரடி ஒளிபரப்பு    செய்யப்பட்டது . இதில்  சகோதரர்கள் ஏராளமான   கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

சென்னை மண்ணடி பொதுக்கூட்டத்தைநேரடி ஒளிபரப்பு

காவல் துறைய கண்டித்து கண்டன சென்னை மண்ணடி பொதுக்கூட்டத்தை 
திருப்பூர் மாவட்ட தலைமை  அலுவலகத்தில்  நேரடி ஒளிபரப்பு   29.12.2012 அன்று செய்யப்பட்டது . இதில்  சகோதரர்கள் ஏராளமான   கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

Friday, 28 December 2012

மருத்துவ உதவி _உடுமலை _27122012

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 
உடுமலை சகோதரர்.சதாம் ஹுசைன் அவர்களின்
அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட காலுக்கு , 27.12.2012  அன்று
உடுமலை கிளை மருத்துவ சேவை அணி சார்பில் ரூ. 6600 /=  செலவில் செயற்கைகால் பொருத்தப்பட்டது.

ICE என்பது In Case of Emergency.

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.
நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது.அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.


ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம்
சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும் மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்தஎண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது. ஆனால் “ICE” என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு,  

உங்களை காப்பாற்றி
உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.


ICE என்பது In Case of Emergency. இதன் முக்கிய நோக்கம் அவசர நேரங்களில்
மக்களை காப்பாற்றுவதாகும்.இன்று ஏறத்தால அனைவரிடமும் கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும்.

இந்த முறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல்
கொண்டுவரப்பட்டது இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை
அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்தை பார்த்து
அதிர்ச்சியடைந்தனர். இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள்
குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை அமல்படுத்தினர். இது நாடுமுழுதும் அங்கீகரிக்கப்பட்டதாகும்.



ஒன்றுக்கு மேற்ப்பட்ட எண்களை ICE1 , ICE2 , ICE3………….etc எனவும் பதிவு
செய்துகொள்ள்ளாம்.

இன்றே, உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்த முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.

தகவல் : https://www.facebook.com/vavudeen

Thursday, 27 December 2012

காவல் துறையை கண்டித்து கண்டன போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   தாராபுரம்கிளை  சார்பாக   25.12.2012 அன்று  தாராபுரம் நகரின் பிரதான பகுதிகளில்
 "காவல் துறையை கண்டித்து கண்டன போஸ்டர்கள் " ஒட்டப்பட்டது.

இஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா!

 
விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். [அல்குர்-ஆன் 24 : 2]

திருமணம் முடித்த ஒரு நபர் விபச்சாரம் செய்ததற்காக அவருக்கு மரண தண்டணை வழங்கச் சொல்லி நபிகளார் உத்தரவிட்டார்கள் 
(புகாரி : 6828 ஹதீஸின் கருத்து)

குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினால்தான் குற்றங்கள் குறையும் என்பதும், அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சரியான நீதி கிடைக்கும் என்பதும்தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

குற்றச் செயல்களுக்கு திருக்குர்-ஆன் கூறும் தண்டனைகளை அதிமேதாவிகளும், அறிவுஜீவிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்வோரும் விமர்சனம் செய்து வந்தனர். திருடியவர்களுக்கு கையை வெட்டுதல், விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு கசையடி மற்றும் கல்லால் எறிந்து அவர்களை கொலை செய்யும் சட்டங்கள், கொலைக்குக் கொலை, கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல் என்று இஸ்லாம் கூறும் தீர்வுகள் காட்டுமிராண்டித்தனமானவை.

அவைகள் மனித நேயத்திற்கு எதிரானவை. இஸ்லாம் வழங்கச் சொல்லும் தண்டனைகள் மனிதத்தன்மை அற்றவை. இந்தச் சட்டங்களை பின்பற்றச் சொல்லிவரும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஈவுஇரக்கமற்றவர்கள்; பழமைவாதிகள்; அடிப்படைவாதிகள்; பிற்போக்குவாதிகள் என்று குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசினர் இந்த அதிமேதாவிகள்.

எந்த நாவினால் இஸ்லாத்தைக் குறைகூறினார்களோ! எந்த நாவு இந்த சட்டங்களெல்லாம் மனிததன்மையற்ற செயல்கள் என்று சொன்னதோ அதே நாவுகள் இப்போது இஸ்லாம் கூறும் இத்தகைய சட்டங்கள்தான் தற்போது வேண்டும் என்று சொல்கின்றன. வல்ல இறைவன் அவர்களை அவ்வாறு சொல்லவைத்துள்ளான்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம்:


கடந்த 16.12.12 அன்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் தனது ஆண் நண்பருடன் நள்ளிரவில் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு திரும்பினார். அவர்கள் இருவரும் கதவுகள் மூடப்பட்ட சொகுசுப்பேருந்தில் பயணித்தனர்.

அப்போது அந்த 23 வயது மருத்துவக்கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை தாக்கிய ஐந்து பேர் கொண்ட கும்பல் அதே பேருந்தில் இருந்த அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது. இதைத் தடுக்க முயன்ற அவரது நண்பரை அந்தக் கும்பல் அடித்து தூக்கி வெளியே வீசி விட்டது.

பின்னர் அந்தப் பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றுள்ளது. அப்பெண் தற்போது அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் அடக்கம்.


தற்போது இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் போடவேண்டும் என இந்தியா முழுவதுமுள்ள அனைவரும் ஒருமித்து குரல் எழுப்பியுள்ளார்கள். போராட்டங்கள் வெடித்துள்ளன.

அந்தப் பெண்ணை கற்பழித்த கயவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று மாதர் சங்க அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும் இவ்வாறு அவர்களுக்கு வழங்கப்படும் தூக்குதண்டனையை அனைவரும் காணும் வகையில் நிகழ்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டத்தில் குதித்த மாணவிகள் வைத்துள்ளனர்.

இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வரச் சொல்லும் பா.ஜ.க:

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சம்பவத்தைப்பற்றி நீண்ட நேரம் விவாதம் நடந்துள்ளது. நாடாளுமன்ற அவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவராக உள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ், மாணவியை பலாத்காரம் செய்த இளைஞர்களை தூக்கிலிட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார். அதே கோரிக்கையை அ.தி.மு.க சார்பில் மைத்ரேயன் வைத்துள்ளார்.

எந்தவிதமான எதிர்ப்புமின்றி அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்தக் கோரிக்கையை வரவேற்றுள்ளனர். உள்துறை அமைச்சர் ஷிண்டேவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்று இஸ்லாம் கூறிய சட்டம் காட்டுமிராண்டித்தனம் என்று கூறியவர்கள்தான் தற்போது இஸ்லாம் கூறும் தீர்வை அரசியலமைப்புச் சட்டமாக வடிவமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் இஸ்லாம் கூறும் தீர்வை நோக்கி திரும்பியுள்ளது. இஸ்லாம் கூறும் தீர்வுதான் அனைத்து பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வாக அமையும் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் சேர்ந்து தற்போது நிரூபித்துக் கொண்டுள்ளது.

கற்பழிப்பு என்பது பெண்ணின் சம்மதம் இல்லாமல் நிகழ்த்தப்படும் கொடூரச் செயல். விபச்சாரம் என்பது ஆண் பெண் இருவரும் இணைந்து இருவரும் சம்மதித்துச் செய்யும் ஈனச்செயல். கற்பழிப்புக்கு மரணதண்டனை வழங்கச் சொல்லும் இவர்கள் வெகுவிரைவில் விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண் பெண் ஆகிய அனைவருக்கும் பாகுபாடின்றி மரணதண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இதுமட்டுமே தீர்வாகுமா?:

கற்பழிப்பு நிகழ்த்தியவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது மட்டுமே இந்த சம்பவங்களுக்கு முழுமையான தீர்வாக அமையாது. மாறாக பாலியல் ரீதியான குற்றச் செயல்களை தூண்டிவிடக்கூடிய வகையில் அமைந்துள்ள அனைத்து மானங்கெட்ட செயல்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிறுத்தப்பட்டால்தான் இதுபோன்ற குற்றச்செயல்கள் குறையும். இஸ்லாம் அதற்கான வழிகாட்டுதல்களையும் தெளிவாக வழங்குகின்றது.

இஸ்லாம் காட்டும் வழிமுறைகள்:

ஆண்களும் பெண்களும் தங்களது பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்

பெண்கள் ஆண்களுடன் குழைந்து பேசக்கூடாது

அந்நிய ஆண்களுடன் பெண்கள் தனித்திருக்கக் கூடாது

பெண்கள் தங்களுக்கு மணம் முடிக்கத்தடை செய்யப்பட்ட ஆண்களைத்தவிர மற்றவர்கள் முன்னிலையில் தங்களது உடல் அழகை வெளிக்காட்டக்கூடாது. பர்தாவைப் பேண வேண்டும்.
இதையும் மீறி யாரேனும் விபச்சாரம் செய்து பிடிபட்டு, அது தகுந்த 4 சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டால் அவர் திருமணம் முடிக்காதவராக இருந்தால் அவரை நூறு கசையடி அடிக்க வேண்டும்.

திருமணம் முடித்தவராக இருந்தால் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். அதை ஒருசாரார் பார்க்க வேண்டும்.

மேற்கண்ட விஷயங்களை சரியாக கடைப்பிடித்தாலே பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு பெண்கள் ஆளாவதை தடுத்துவிடலாம். எய்ட்ஸ் நோயும் பரவாது. எய்ட்ஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கலாம்.

ஆனால் நம் நாட்டில் விபச்சாரத்தை தூண்டிவிடக்கூடிய அத்தனை விஷயங்களுக்கும் லைசென்ஸ் கொடுத்து அவிழ்த்துவிட்டுவிட்டு, இவர்களே பெட்ரோலை ஊற்றி நெருப்பையும் பற்ற வைத்துவிட்டு அய்யகோ! எரிகின்றதே! என்று கூப்பாடு போடும் நிலைதான் தற்போது நிலவி வருகின்றது. அதற்குரிய ஆதாரத்தை வேறெங்கும் தேடத்தேவையில்லை. இந்த கற்பழிப்பு செய்தியை கண்டித்த போது பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்வே இதற்குச் சான்று பகர்கின்றது.

வேதம் ஓதும் சாத்தான்கள்:

மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டது குறித்து ஹிந்தி நடிகையும், கூத்தாடி அமிதாப்பச்சனின் மனைவியுமான ஜெயாபச்சன் எம்.பி பேசும்போது கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், இந்த நாடாளுமன்றத்தில் உட்கார எனக்கு அவமானமாக உள்ளது. அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையைச் சேர்ந்தவள் என்பதால் இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.

எல்லோரும் ஓரிரு நாளில் இந்த சம்பவத்தை மறந்து விடுவார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் துரத்தி வரும், ஆறாத வடுவாக அது கூடவே இருக்கும்.

மனதளவில் அந்தப் பெண் எவ்வளவு துயரத்தை அனுபவிப்பார். இதற்கெல்லாம் எப்படி ஈடு செய்ய முடியும் என்று கூறியபடி அவர் அழுதுள்ளார் என்று மீடியாக்கள் மிகவும் சோகத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுபோன்ற மானக்கேடான விஷயங்கள் பரவுவதற்கும், மக்களில் பெரும்பாலானோர் காமவெறி பிடித்த மிருகங்களாக மாறுவதற்கும் ஜெயா பச்சன் போன்ற நடிகைகள் தங்களது சதையை வெளிக்காட்டி ஆட்டம் போடுவதுதான் காரணம் என்பதை யாராலும் மறுக்க இயலுமா? எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஆட்டோ டிரைவரோடு ஓடக்கூடிய அவலங்களுக்குக் காரணம் இது போன்ற நடிகைகள் தங்களது கல்லாவை நிரப்பிக்கொள்வதற்காக ஆபாசமாக நடிக்கும் திரைப்படங்களும், மெகா சீரியல்களும்தான் என்பதை யாராவது மறுப்பார்களா?

விபச்சாரத்தை தூண்டக்கூடிய வகையில் சதை வியாபாரம் நடத்தும் இத்தகைய சதை வியாபாரிகள்தான் நாட்டில் நடக்கும் கற்பழிப்புகள் உள்ளிட்ட அனைத்துவிதமான பாலியல் ரீதியான குற்றங்களுக்கும் காரணம் எனும்போது காரியத்திற்குக் காரணமான அடிப்படைக் காரணத்தைக் களையாமல் காரியத்தை மட்டும் கண்டித்து எந்தப்பலனும் இல்லை.

எனவே இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டுமெனில் விபச்சாரத்திற்கு இஸ்லாம் கூறும் தண்டனைகளை வழங்குவதுடன் அதைத்தடுக்க இஸ்லாம் காட்டும் வழிமுறைகளையும் அனைவரும் கையாள்வதே சரியான தீர்வாக அமையும்.

source:http://www.onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/islamiya-satathai-nokki-india/


தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் _26122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 26.12.2012 அன்று மாலை
வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.ரசூல் மைதீன்  அவர்கள்
"புது வருட கலாச்சார சீரழிவு   "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

மருத்துவஉதவி _ தாராபுரம் _26122012

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பாக26.12.2012 அன்று  பெருச்சிபாளையம் சகோதரி.கைருன் நிஷா 
அவர்களுக்கு மருத்துவ செலவினக்களுக்காக  ரூ.5200/=
மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

சிறுவர் ,சிறுமியர் முதியோர் இல்லஉதவி _உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடத்தப்பட்டு வரும்
சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம்
மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 
உண்டியல் மூலம் வசூல் செய்த தொகை ரூ.10100/= ஐ  27.12.2012 அன்று
சகோ.கோவை சஹாபுதீன் வசம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

விழிப்புணர்வு நோட்டிஸ் வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 21//12//2012  அன்று  உலகம்  அழியாது   என்று திருப்பூர் மாவட்டம் முழுவதுமாக   10000 
நோட்டிஸ்  வினியோகம்  செய்து விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது.