Thursday, 20 June 2013

நல்லூர் முரளி க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் _நல்லூர் கிளை 19062013



தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 19.06.2013 அன்று  பிறமத சகோதரர். முரளி  அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்கம் ,வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

நல்லூர் சபரீஸ்வரன் க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் _நல்லூர் கிளை 18062013


தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  நல்லூர் கிளை சார்பில் 18.06.2013 அன்று  பிறமத சகோதரர். சபரீஸ்வரன் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்குதிருக்குர்ஆன்தமிழாக்கம் ,வழங்கி இஸ்லாம் குறித்த தாவாசெய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

"வரதட்சணை ஓர் வன்கொடுமை " _காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம் _19062013


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 19.06.2013 அன்று காலேஜ்ரோடு சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்.ராஜா அவர்கள் "வரதட்சணை ஓர் வன்கொடுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"அன்றாட வாழ்வில் அல்குர்ஆன் " காலேஜ்ரோடு கிளை குர்ஆன் வகுப்பு _19062013


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 19.06.2013 அன்று காலேஜ்ரோடு மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் குர்ஆன் வகுப்புநடைபெற்றது. சகோதரி.கோவை சமீனா  அவர்கள் "அன்றாட வாழ்வில் அல்குர்ஆன் " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு பாடம் நடத்தினார்கள்.

Wednesday, 19 June 2013

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 17.06.2013 அன்று ஒரு சகோதரருக்கு ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து, அவரின் இணைவைப்பு  கயிறுகள் கழற்றி எரியப்பட்டது….

ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி _தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 17.06.2013 அன்று தாராபுரம் பகுதியில் வசிக்கும் ஏழை சகோதரர். சுக்கூர் அவர்களின் குடும்பத்தாருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.3000/= மதிப்புள்ள மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _தாராபுரம் கிளை _17062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 17.06.2013 அன்று தாராபுரம் பகுதியில் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து, ஒரு வீட்டில் இருந்த தகடு,தர்கா போட்டோ உட்பட இணை வைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

வரதட்சணை _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம் _18062013


TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 18.06.2013அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்.ரசூல்மைதீன் அவர்கள் "வரதட்சணை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நல்லூர் கிளை பள்ளிகட்டுமான பணிகளுக்காக ரூ.2135/= நிதியுதவி _தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 14.06.2013 அன்று திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை  பள்ளிகட்டுமானபணிகளுக்காக ரூ.2135/= நிதியுதவி செய்யப்பட்டது.

Tuesday, 18 June 2013

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _திருப்பூர் மாவட்டம் _17062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 17.06.2013 அன்று ஒரு சகோதரருக்கு ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து, அவரின் தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது….....

"தாவா பணிகளை வீரியப்படுத்துவது எப்படி? திருப்பூர் மாவட்ட தர்பியா _16062013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 16.06.2013 அன்று திருப்பூர் பெரியகடைவீதி மதரசதுல்தவ்ஹீத்  வளாகத்தில் கிளை நிர்வாகிகளுக்கான மாவட்ட தர்பியா நடைபெற்றது.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர்.சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் "தாவா பணிகளை வீரியப்படுத்துவது எப்படி?" எனும் தலைப்பில் கலந்துகொண்ட 140 க்கும் மேற்பட்ட கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கினார்.


















இந்த மாவட்ட தர்பியா பயிற்சி முகாம் கலந்து கொண்ட ஜமாஅத் நிர்வாகிகளுக்கு, தாவா பணியை வீரியமாக செய்யும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வழங்குவதாக அமைந்தது.




அல்ஹம்துலில்லாஹ்

வரதட்சணை _கோம்பை தோட்டம்கிளை தெருமுனைப்பிரச்சாரம்_17062013



TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்கிளை யின் சார்பாக 17.06.2013அன்று திருப்பூர்  கோம்பை தோட்டம் லைப்ரரி வீதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் சதாம் அவர்கள் "வரதட்சணை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Monday, 17 June 2013

பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு

இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு பெண்கருத்து!



 உடலை மறைத்தால்தான் ஆண்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முடியும். ஆண்களிடம் குலைந்து பேசக்கூடாது. அப்போதுதான் பாதுகாப்பாக ஒரு பெண் இருக்க முடியும் என இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. 

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நவீன கால பெண்களின் ஆடை முறைகளே. பெண்கள் தங்களின் உடலை இஸ்லாம் சொல்லும் முறைப்படி மறைத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்களை பெருமளவில் குறைக்க முடியும். 

அதேபோல் பெண்கள் ஆண்களிடம் குழைந்து பேசுவதை தவிற்பதன் மூலம் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் என குர்ஆன் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றது.

 "நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்" அல்குர் ஆன் (33.32) 

குர்ஆனின் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணமாக இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுப் பெண்கள் இந்திய வாலிபர்களின் தொல்லை தாங்க முடியாமல் உடலை மறைப்பதன் மூலமும், குழைந்து பேசுவதை தவிற்பதன் மூலமும் எங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர். 

இந்திய வாலிபர்களால் தொல்லைக்கு ஆளான வெளிநாட்டுப் பெண்களை சந்தித்து அவர்கள் பட்ட தொல்லைகள், அதை தவிற்க அவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகளை பேட்டி எடுத்து தி வீக் (The Week) பத்திரிக்கை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. 

அதில்... 

நெதர்லாந்தைச் சேர்ந்த 26 வயது பெண் அன்னிமிகி ஸ்பிட்சி, டெல்லியில் படித்துக்கொண்டு இருகின்றார். அவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்... நான் மேற்கத்திய பாணியில் (அறைகுறை) ஆடைகள் அணிந்து செல்லும்போது ஆண்களின் தொல்லைக்கு ஆளானேன். ஒரு முறை பழைய டெல்லியில் சாலையை கடக்க முயன்றபோது ஒருவன் என்னை தொட்டு சில்மிஷம் செய்தான். நான் பேருந்தில் பயணிக்கும்போது வேண்டும் என்றே என்னை உரசுவது, பிறகு, “சாரி” சொல்வது ஆண்களுக்கு வாடிக்கையாய் போய்விட்டது. இதைத் தடுக்க நான் இப்போதெல்லாம் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிகின்றேன். வெளியில் போகும்போது ஸ்கார்ப்ஃபை அணிந்து செல்கின்றேன். இப்போது என்மீதான ஆண்களின் பார்வையை தடுக்க முடிகின்றது. ஓரளவிற்கு பாதுகாப்பை உணரமுடிகின்றது எனத் தெரிவித்துள்ளார். 

இவரைப்போல் பாதிக்கப்பட்ட லிஸ் கிரீன் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்மனி கூறுகையில்... 

ஆண்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க நான் இபோது ஆண்களிடம் குழைந்து பேசுவது இல்லை. கடுமையாகவே நடந்துகொள்கின்றேன். ஆண்களைப் பார்த்து புன்னகை புரிவதில்லை. இதன் மூலம் நாம் பாதுகாப்பாக இருந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். 

இஸ்லாம் மனித குலத்திற்கு நடைமுறைப்படுத்த கூடிய சிறந்த நடைமுறையையே வழங்குகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையிலிருந்து தீர்வை வழங்குகின்றது. பாதிக்கப்பட்ட இந்த பெண்கள் முஸ்லிம்கள் இல்லை. 

இவர்கள் ஆண்களின் தொல்லைகளை அனுபவித்து அதில் இருந்து தப்பிக்க இஸ்லாம் சொல்லும் தீர்வைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். 

இப்படி பிரச்சனைகளை சந்திக்காத, அல்லது இதுபோன்ற கேவலத்தை விரும்புபவர்கள்தான் இஸ்லாம் சொல்லும் தீர்வை எதிர்க்கின்றனர். ஆண்களின் பாலியல் தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்ள மானம் உள்ள எவரும் இஸ்லாம் சொல்லும் உடலை மறைத்தல், ஆண்களிடம் கண்டிப்புடன் பேசுதல் போன்ற தீர்வைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அனைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் சொல்லக்கூடிய தீர்வுகள்தான் சரியானவை என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் உண்மைப்படுத்திக் கொண்டுள்ளன. 

முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் பெண்களை ஒரு காமப் பொருளாக பார்க்கவே இவர்கள் பெண்களின் மானத்தைக் காக்கும் பர்தா முறையை எதிர்க்கின்றார்கள். 

பர்தா எதிர்ப்பு என்பது ஆண்களின் காம இச்சையின் வெளிப்பாடே தவிர ஒழுக்கமுள்ள மனிதனின் பண்பாகாது. எனவே பெண்கள் பர்தா அணிவதை வலியுறுத்துவோம். பெண்களின் மானம் காக்கும் பண்பாளர்களாவோம்.

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/partha-than-pangalukku-pathukappu/
Copyright © www.onlinepj.com

"அல்லாஹுவிற்க்கு மாறுசெய்தவர் நிரந்தர நரகவாசிகள் " மங்கலம் கிளை பயான் 17062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "அல்லாஹுவிற்க்கு மாறுசெய்தவர் நிரந்தர நரகவாசிகள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

"சத்தியம் எது அசத்தியம் எது " மங்கலம் கிளை மார்க்க விளக்க பொதுகூட்டம் _16062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 16-06-2013 அன்று இ.பி ஆபிஸ் அருகில் மாலை 07:00 மணி முதல் 10:00 மணி வரை மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.  



இதில் மாநில பேச்சாளர் சகோ.அஹமத் கபீர் அவர்கள் "சத்தியம் எது? அசத்தியம் எது ?" என்ற தலைப்பிலும் சகோ. ஆஜம்M.I.Sc., அவர்கள் "வரதட்சனை" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.பெருவாரியான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




கோம்பைதோட்டம் கிளையில் இஸ்லாத்தைஏற்ற முத்துலக்ஷ்மி _கதீஜா ஆக _14062013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில் 14.06.2013 அன்று தஞ்சாவூர் மாவட்டம் நாடங்காடு பகுதியை சேர்ந்த தற்போது திருப்பூர் கோல்டன் நகரில் வசிக்கும் பிறமத சகோதரி.முத்துலக்ஷ்மி அவர்கள்  தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை  கதீஜா என மாற்றிக்கொண்டார். அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் மற்றும் இஸ்லாமிய கொள்கை விளக்க புத்தகங்கள் கோம்பைதோட்டம் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது..

நயவஞ்சகர்கள் நிரந்தர நரகவாசிகள் _மங்கலம் கிளை பயான் _16062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "நயவஞ்சகர்கள் நிரந்தர நரகவாசிகள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

உறவினருக்கு செலவு செய்வதும் தர்மம் _மங்கலம் கிளை பயான் _15062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15.06.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "உறவினருக்கு செலவு செய்வதும் தர்மம்என்ற தலைப்பில் மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது.

"வரதட்சணை" _கோம்பைதோட்டம்கிளை பெண்கள் பயான் _16062013






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளையின் சார்பாக 16.06.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சாஹிது ஒலி அவர்கள் "வரதட்சணை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

மேட்டுப்பாளையம் கிளை பள்ளிகட்டுமான பணிகளுக்காக ரூ.4340/= நிதியுதவி _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14.06.2013 அன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கிளை  பள்ளிகட்டுமான பணிகளுக்காக ரூ.4340/= நிதியுதவி செய்யப்பட்டது

ஜனாஸா தொழுகையின் சிறப்பு _மங்கலம் கிளை பயான்_13062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 13.06.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஜனாஸா தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பில் மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது.

Saturday, 15 June 2013

S.V.காலனி கிளை பள்ளிகட்டுமான பணிகளுக்காக ரூ.8411/= நிதியுதவி _திருப்பூர் மாவட்டம் 14062013





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 14.06.2013 அன்று திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  பள்ளிகட்டுமான பணிகளுக்காக ரூ.8411/= நிதியுதவி செய்யப்பட்டது

"கொள்கை உறுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்" _நல்லூர் கிளை தெருமுனைப்பிரச்சாரம் _13062013


TNTJ திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 13.06.2013அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் பசீர் அவர்கள் "கொள்கை உறுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

உடுமலை கிளையில் இஸ்லாத்தைஏற்ற பிரேம் குமார் ..பாஸில் ஆக _14062013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 14.06.2013 அன்று சகோதரர்.பிரேம் குமார் அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை  பாஸில் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் மற்றும் இஸ்லாமிய கொள்கை விளக்க புத்தகங்கள் உடுமலை  கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

வட்டி இல்லா கடன் உதவி 82 உடுமலைகிளை 13062013


TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 13.06.2013 அன்று வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில் தாராபுரம் சகோதரர். ஷாஜஹான் அவர்களுக்கு ரூ.15,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.