Tuesday, 4 October 2016
சமுதாயப்பணி -நிலவேம்பு கசாயம் - ஹவுசிங் யூனிட் கிளை

ஹவுசிங் யூனிட் ரேஷன் கடை அருகே சாமியானா போடப்பட்டு வழங்கப்பட்டது.
பிறகு வீதிகளில் சென்று வீடு வீடாகவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் மூலம் ஏறத்தாழ 2000 முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத பொது மக்கள் பயன்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்ச்சியின் போது நடந்த சில சம்பவங்கள் ....
அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஓட்டுனர் நம் அழைப்பை ஏற்று பேருந்தை நிறுத்தி அவரும் நடத்துனரும் நிலவேம்பு கசாயம் அருந்தியதோடு அல்லாமல் பயணிகள் அருந்தும் வரை வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தால்...... அந்நேரம் சிலரது உள்ளத்தில் எழுந்து வார்த்தையாக வெளியே வந்த சிந்தனை....
"இந்து முன்னணி அமைப்பினர் பேருந்தை நிறுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பேருந்தை கொளுத்தினர். ஆனால் நீங்கள் (முஸ்லீம்கள்) பேருந்தை நிறுத்தி மக்களுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றீர்கள்"
வீதிகளில் சென்று வீடு வீடாக நிலவேம்பு கசாயம் வழங்கும் போது ஒரு முஸ்லீம் அல்லாத பெரியவர் அவரது கருத்தாக பதிவு செய்தார்.
"நீங்கள் நிறைய நல்ல பணிகள் செய்கிறீர்கள். ஆனால் வெளியே தெரிவதில்லை. உங்கள் பணிகளை லோகத்துல தெரிவிக்க வேண்டும் "என்று கூறி தனது செல்போனில் புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் மற்றும் வாட்ஸ் அப்பீல் பகிர்ந்து கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்.
தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளை சார்பாக டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு 26-09-16-அன்று ஜாக் பள்ளி அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது . சகோ.முஹம்மது பிலால் அவர்கள் இறைத்தூதர் வழியா? முன்னோர்கள் வழியா? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அலஹ்மதுலில்லாஹ்..
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர்

**ஹவுசிங் யூனிட் ** புதிய கிளை உருவாக்கம் - திருப்பூர் மாவட்டம்

இந்நிலையில் அந்த பகுதியில் ஒரு கிளை அமைத்து விடலாம் என்ற சூழல் ஏற்பட்டதாலும்,அப்பகுதியில் திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாட்டு பணிகளை வீரிய படுத்தும் முகமாகவும்...
இன்று (27/09/2016) காலை பஜ்ர் தொழுகைக்கு பின்
மாவட்ட செயலாளர் சகோ. முஹம்மது ஹுசைன் மாவட்ட துணை செயலாளர்
சகோ. அலாவுதீன் மற்றும் மாவட்ட துணை தலைவர்
சகோ. ஷாஹிது ஒலி ஆகியோர் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள சகோதரர்களை ஒருங்கிணைத்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாக வழிமுறைகளையும்,தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும் பணிகளை குறித்தும் ஏகத்துவத்தில் நிலைத்து இருக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கி புதிய கிளையாக ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
முதற்கட்டமாக 3 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கிளை கண்காணிக்கப்படும் இன்ஷா அல்லாஹ் பிறகு முழுமையான நிர்வாகம் போடப்படும் என்றும், மாநாட்டு பணிகளில் வீரியம் காட்ட வேண்டும் என்றும், நம்மை பன்படுத்தும் தர்பியாக்கள் அதிகமாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தபட்டது.
ஹவுசிங் யூனிட் கிளை பொறுப்பாளர்கள்
1.ஹுஸைன்
2.ஹாரிஸ்
3.முஹம்மது யூசுப்
-திருப்பூர் மாவட்டம்
முஹம்மது ரசூல்லாஹ் மாநாடு - கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

Subscribe to:
Posts (Atom)