Saturday, 26 October 2013
புதிய கிளைகளுக்கு நூலகம் அமைக்க புத்தகங்கள் _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.10.2013 அன்று திருப்பூர் மாவட்டதில் புதிதாக உருவாகிய அலங்கியம், தாராபுரம்6வதுவார்டு, மங்கலம்R.P நகர் ஆகிய 3கிளைகளுக்கு நூலகம் அமைக்கும் வகையில் ஜமாஅத் சார்பில் வெளியான அனைத்து புத்தகங்களையும் மாநில நிர்வாகம் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது...
திருமண நிலைப்பாடு_ மாவட்ட செயற்குழு _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 25.10.2013 அன்று திருப்பூர் பெரியகடை வீதி கிளை மர்கஸில் "அவசர மாவட்ட செயற்குழு" நடைபெற்றது.

மாநில துணை பொது செயலாளர். சகோ.முஹம்மது யூசுப் மற்றும் மாநில தணிக்கைக்குழு உறுப்பினர்.சகோ.தவ்பீக் அவர்கள் முன்னிலை யில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத்தின் அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஜமாஅத் -ன் திருமண நிலைப்பாடுகள் குறித்து மாநில நிர்வாகிகள் விரிவான விளக்கங்கள் வழங்கினர்...
Thursday, 24 October 2013
பா.ஜ.க.வுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவா?
பா.ஜ.க.வுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவா?ரியாதிலிருந்து பொதுச்செயலாளர்
ரஹ்மத்துல்லாஹ் அறிக்கை.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தால் பா.ஜ.க.வை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும் என்ற கருத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து அல்ல.
பா.ஜ.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடஒதுக்கீடு அல்லாத அதை விட முக்கியமான பிரச்சினைகள் உள்ளன.
பாபர் மஸ்ஜித் இடிப்பு, பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்தது, பொது சிவில் சட்டம், முஸ்லிம்கள் மீது போலி என்கவுண்டர், முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப் போடுதல் உள்ளிட்ட கொடுஞ்செயல்களைச் செய்துள்ள பா.ஜ.க. முஸ்லிம்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளித்தாலும் பா.ஜ.க.வை ஆதரிக்க மாட்டோம் என்பது தான் தவ்ஹீத் ஜமாத்தின் கருத்தாகும்.
ஏற்காடு இடைத்தேர்தலில் கலைஞர் எங்களின் இயக்கத்தின் ஆதரவைக் கேட்டு கடிதம் எழுதிய போது பா.ஜ.க.வுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கும் திமுகவை ஆதரிப்பதை எங்கள் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நாங்கள் பதில் அளித்தோம்.
பா.ஜ.க.வுடன் நெருக்கம் காட்டுவோரையே ஆதரிக்காத எங்கள் ஜமாஅத் எந்தக்காலத்திலும் பா.ஜ.க.வை ஆதரிக்காது. இது எங்கள் பல்வேறு செயற்குழு, பொதுக்குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவாகும்.
- இப்படிக்கு,
ரியாதிலிருந்து பொதுச்செயலாளர்
ரஹ்மத்துல்லாஹ்
பா.ஜ.க.விற்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவா? - video
ரியாதிலிருந்து மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் விளக்க வீடியோ
குறிப்பு : இது குறித்து சத்தியம் டிவியில் இன்ஷா அல்லாஹ் இன்று 24.1.2013 இரவு 8மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாநில துணைப்பொதுச் செயலாளர் அம்பத்தூர் யூசுப் அவர்கள் விளக்கமளிக்க உள்ளார்.
ரியாதிலிருந்து மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் விளக்க வீடியோ
குறிப்பு : இது குறித்து சத்தியம் டிவியில் இன்ஷா அல்லாஹ் இன்று 24.1.2013 இரவு 8மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாநில துணைப்பொதுச் செயலாளர் அம்பத்தூர் யூசுப் அவர்கள் விளக்கமளிக்க உள்ளார்.
Wednesday, 23 October 2013
Subscribe to:
Posts (Atom)

































