Thursday, 31 January 2013

திருப்பூர்.ராஜேஷ் _சலீம் ஆகதூயஇஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டார் _திருப்பூர் மாவட்டம் _30012013

திருப்பூர் மாவட்டம் சார்பாக  30.01.2013அன்று திருப்பூர் மாவட்டம் பூண்டி  பகுதியை சேர்ந்த சகோதரர்.ராஜேஷ்  அவர்கள் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை சலீம் என்று மாற்றி கொண்டார்.
அவருக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் அவர்கள் இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 30 January 2013

பிறசமய சகோதரர்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள்நாயகம்" DVD வழங்கி தஃவா _திருப்பூர் மாவட்டம் _30012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
30.01.2013 அன்று இஸ்லாமிய அடிப்படையை அறிய விரும்பிய திருப்பூர் மாவட்டம் ,ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த பிறசமய சகோதரர்.ராதாகிருஷ்ணன். அவர்களுக்கு "மாமனிதர் நபிகள்நாயகம்" உட்பட  இஸ்லாமிய மார்க்க விளக்கநூல்கள் மற்றும் DVD க்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது

"பெற்றோரை பேணுதல் " _பெண்கள்பயான் _வெங்கடேஸ்வரா நகர் _27012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 27.01.2013 அன்று மாலை பெண்கள்பயான் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.பஷீர்அவர்கள் "பெற்றோரை பேணுதல்  "
என்ற தலைப்பில்  உரையாற்றினார்.

ஏராளமான பெண்கள் தமது குழந்தைகளுடன்
இந்த மார்க்க விளக்க சொற்பொழிவில் கலந்து கொண்டனர்.

"மவ்லித் ஒரு வழிகேடு" _தெருமுனை பிரச்சாரம் _ V.K.P. _27012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை யின் சார்பாக

27.01.2013 ஞாயிறு அன்று மாலை வடுககாளிபாளையம் பகுதியில்  
.சகோதரர்.பஷீர் அவர்கள் "மவ்லித் ஒரு வழிகேடு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

Tuesday, 29 January 2013

வரதட்சணைக்கு எதிராக தொடர் தெருமுனை பிரச்சாரம் _திருப்பூர் மாவட்டம் _27012013

 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  சமூக தீமையான வரதட்சணைக்கு எதிராக 27.01.2013 அன்று 

  
மாலை 4.30 முதல்   8.30 வரை  திருப்பூர் நகரின் முக்கிய பகுதிகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. 








இதில் மாநில பேச்சாளர் சகோ.அஹமது கபீர்,
மாவட்ட பேச்சாளர்கள் சகோ.முஹமது சலீம் , சகோ.சேக் பரீத், சகோ.ரசூல் மைதீன் மற்றும் சகோ.சேக் அப்துல்லாஹ் ஆகியோர் 


 
வரதட்சணையின் தீமைகள்,  
இஸ்லாத்தின் பார்வையில் வரதட்சணை, 
வரதட்சணையால் இம்மையிலும் மறுமையிலும் ஏற்படும் நஷ்டங்கள், மற்றும் 


 

வரதட்சணைக்கு ஆதரவாக செயல்படும் இஸ்லாமிய கூட்டமைப்பிற்கு கண்டனம் ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்.






திருப்பூர் பிற மத சகோதரி. உஷாதேவி அவர்களுக்கு "மாமனிதர்"புத்தகம் _கோம்பைதோட்டம் _27.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில் 27.01.2013 ஞாயிறு அன்று பிற மத சகோதரி. உஷா தேவி (திருப்பூர் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமைஆசிரியர்) அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் ,இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் DVD வழங்கப்பட்டது.

வயிற்றுப்புண் சிகிச்சைக்காக ரூ.3823 மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம் _25.01.2013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.01.2013 அன்று திருப்பூர் S.V. காலனி பகுதியை சேர்ந்த சகோதரர்.அப்துல்லாஹ்   அவர்களின்  வயிற்றுப்புண் சிகிச்சைக்காக
ரூ.3823 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

Monday, 28 January 2013

இணை வைப்பின் தீமைகள் குறித்து தஃவா _தாராபுரம் _28012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை சார்பில் 28.01.2013 அன்று தாராபுரம் பகுதி பெரியவர் ஒருவரிடம் இணை வைப்பின் தீமைகள் குறித்து தஃவா செய்து தாயத்து கயறு அறுத்து எடுக்கப்பட்டது.

"பகிரங்க அறைகூவல் " போஸ்டர் _மங்கலம் _23012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 23-01-2013 அன்று பகிரங்க அறைகூவல் என்ற போஸ்டர் மங்கலம் பகுதியில் ஒட்டப்பட்டது

மவ்லித் ஓர் ஆய்வு _தெருமுனை பயான் _மங்கலம் _24012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 24-01-2013 அன்று R.P.நகர்
பகுதியில் மாலை 07:00 மணி08:00 முதல் மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபிக் அவர்கள் மவ்லித் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்

மவ்லித் ஓர் ஆய்வு _பெண்கள் பயான் _மங்கலம் _25012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 25-01-2013 அன்று 05:00 மாலை  மணி 06:00 முதல் மணி வரை R.P. நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இந்த பயானில் சகோதரி ஃபாஜிலா இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பிலும் சகோதரி சுமையா மவ்லித் ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்

முஸ்லிம் பெண்களின் நிலை _பெண்கள் பயான் _மங்கலம்கோல்டன் டவர் _26012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 26-01-2013 அன்று 05:00 மாலை  மணி 06:00 முதல் மணி வரை கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இந்த பயானில் சகோதரி மும்தாஜ் அவர்கள் "முஸ்லிம் பெண்களின் நிலை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

வாகன விபத்துகள் அதிகம் ஏற்படுவதை தடுக்க மாவட்ட மேயரை சந்தித்து மனு _திருப்பூர் மாவட்டம் _28.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்   
28.01.2013 திங்கள் அன்று   திருப்பூர் மாவட்ட மேயர் சகோதரி .விசாலாட்சி அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து திருப்பூர்மாவட்டத்தின் பெரிய தோட்டம், காங்கேயம்ரோடு  உட்பட பல பகுதிகளில் , வாகன விபத்துகள் அதிகம் ஏற்படுவதை தடுக்க வேகதடை அமைக்கவும் ,மற்றும் போக்குவரத்து காவலர்களை கொண்டுசாலை போக்குவரத்தை சீரமைக்கஉடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

கர்பப்பை கட்டி அறுவைச்சிகிச்சைக்காக மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _27012013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 27.01.2013 அன்று திருப்பூர் M.K.M. ரைஸ் மில் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த சகோதரி. ஆரிப் நிஷா  அவர்களின்  கர்பப்பை கட்டி அறுவைச்சிகிச்சைக்காக
ரூ.5000 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

பிறமத சகோதரருக்கு மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _27.01.2013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 27.01.2013 அன்று பெருமாநல்லூர் தாலுகா நெருப்பெருச்சல் பகுதியை சேர்ந்த பிறமதசகோதரர். ரங்கசாமி  அவர்களின் இருதய கட்டி அறுவை சிகிச்சைக்காக
ரூ.5000 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

பேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர் மாவட்டம் _28.01.2013

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம்   சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் திருப்பூர் கோம்பைதோட்டம் 
மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில் பிரதி ஞாயிறு ஞாயிறு காலை 10:00 மணிமுதல்1:00 மணி வரை   நடைபெற்றுவருகிறது .
27.01.2013 அன்று   10 ஆவது வாரம்  பேச்சாளர்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை கண்டன பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு _உடுமலை _27.01.2013



 திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை அலுவலகத்தில் 27.01.2013 அன்று இஸ்லாத்தினையும் இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்த
விஸ்வரூபம் சினிமா வை கண்டித்தும் மற்றும் இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக கருத்து வெளியிட்ட பத்திரிக்கைகளை   கண்டித்தும் நடந்த  சென்னை கண்டன
பொதுக்கூட்டத்தை   நேரடி ஒளிபரப்பு    செய்யப்பட்டது . இதில்  சகோதர,சகோதரிகள்  ஏராளமான   கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

"சாதித்துகாட்டுவோம்" மாணவ மாணவியர்களுக்காக தன்னம்பிக்கைநிகழ்ச்சி _கோம்பைதோட்டம் _27.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
கோம்பைதோட்டம் கிளை சார்பில்
27.01.2013 ஞாயிறுஅன்று
காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை
     
திருப்பூர்நொய்யல்வீதி
M.K.M.ரைஸ்மில்காம்பவுண்ட்இல் சாதித்துகாட்டுவோம் எனும் நிகழ்ச்சி 10, +2 படிக்கும் மாணவ மாணவியர்களுக்காக பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?...
போன்ற மேலும் பல சந்தேகங்களுக்கு விடை அளித்து


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி சகோ.சமீம் , சகோ.சாஹிதுஒலி மற்றும் திருப்பூர் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமைஆசிரியர் .சகோதரி.உஷா தேவிஆகியோர்
தன்னம்பிக்கை ஊட்டி மாணவ மாணவியர் படிப்பில் வெற்றி பெற
ஊக்கம் அளிக்க நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இஸ்லாத்தின் பார்வையில் அணுமதி பெறுதல் _காலேஜ்ரோடு _27.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
காலேஜ்ரோடு  கிளை சார்பாக  27.01.2013 அன்று மாலை  
காலேஜ்ரோடு G.K.கார்டன்பகுதியில் 
பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.குர்ஷித்பானு  அவர்கள்
"இஸ்லாத்தின் பார்வையில் அணுமதி பெறுதல் "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

Sunday, 27 January 2013

உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில்"இதுதான் இஸ்லாம்" _உடுமலை _012013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 
உடுமலை கிளை சார்பில்  உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில் தினமும் (இரவு 9.00முதல் 10.00 வரை) 1மணி நேரம்  தூய இஸ்லாமிய மார்க்கவிளக்கநிகழ்ச்சிகள் "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்படுகிறது.
இதன்முலம் உடுமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள அணைத்து சமுதாய மக்களும்  பயன் பெரும் வகையில் சத்தியத்தை கொண்டு செல்லப்படுகிறது.
அல்ஹம்துலில்லாஹ்.

தர்கா போட்டோ அகற்றம் _தாவா _ M.S.நகர் _27012013

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 27.01.2013அன்று
M.S.நகர் பகுதி வீடுகளில் இருந்த இணைவைப்பு பொருள்கள்
குறித்து தாவாசெய்து, தர்கா போட்டோ போன்றவை அகற்றப்பட்டது

"நபிவழி தொழுகைமுறை " தர்பியா _M.S.நகர் _27012013

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 27.01.2013அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
"நபிவழி தொழுகைமுறை " தர்பியா , சகோ.அப்துல்லாஹ்M.I.SC.,அவர்கள் நடத்தினார்.
கலந்துகொண்ட சகோதரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் வழங்கினார்

பிறசமய சகோதரர்.சுந்தர் .அவர்களுக்கு ”இஸ்லாமிய மார்க்க விளக்கநூல் வழங்கி தஃவா _திருப்பூர் மாவட்டம் _26012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
26.01.2013 அன்று
இஸ்லாமிய அடிப்படையை அறிய விரும்பிய
திருப்பூரில் வசிக்கும் சேலம் மாவட்ட பிறசமய சகோதரர்.சுந்தர் .அவர்களுக்கு ”இஸ்லாமிய மார்க்க விளக்கநூல்
மற்றும் DVD க்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது

கேள்வி- பதில்நிகழ்ச்சி _தாராபுரம் -25012013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தமது மார்க்க  அறிவை வளர்த்துக்கொள்ள அல்குரான்- ஹதிஸ்  
கேள்வி- பதில்  நிகழ்ச்சி நடைபெற்றது.
25.01.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி வளாகத்தில்
சரியான பதில் அளித்த 5 நபர்களுக்கு  பரிசளிப்பு விழா நடைபெற்றது

மாணவர்களுக்கு தர்பியா _பெரிய தோட்டம் _27012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில்  27.01.2013அன்று  மதரஸா மாணவர்களுக்கு தர்பியா 
நிகழ்ச்சி யில் சகோதரர். பஷீர் அவர்கள் "பேய் பிசாசு உண்டா" என்ற தலைப்பில் உரையாற்றி,மாணவர்களின் மார்க்க சம்மந்தமாக கேள்விகளுக்கு பதில் வழங்கினார்.