Saturday, 26 August 2017
குழு தாவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/08/17அன்று காலை 7-30 மணிக்கு காலேஜ்ரோடு மற்றும் சாதிக்பாட்சா நகர் பகுதிகளில் வசித்து வரும் சுன்னத் ஜமாஅத் சகோதரர்களை சந்தித்து மத்ஹப் ஓர் வழிகேடு என்றும் மக்களின் அறியாமையினால் மலிந்து விட்ட பித்அத் குறித்தும் விளக்கி தூய்மையான ஏகத்துவ கொள்கையின் பக்கம் அழைப்பு விடுக்கப்பட்டு நூல்கள் கொள்கை விளக்கம் 10 நபர்களுக்கும் உணர்வு இதழ் 25 நபர்களுக்கும் வழங்கப்பட்டது மற்றும் பலர் கைகளிலும் கழுத்துகளிலும் கட்டியிருந்த தாயத்து கயிறு அகற்றப்பட்டது ,
அல்ஹம்துலில்லாஹ்...
டெங்கு விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் - ஹவுசிங் யூனிட் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 17.08.2017 அன்று டெங்கு விழிப்புணர்வு பிளக்ஸ் 3 மக்கள் அதிகமாக கூடும் பகுதியில் வைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...
செயல்வீரர்கள் கூட்டம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளையின் சார்பாக 18/08/17 அன்று இரவு 9:40மணிக்கு கிளைத்தலைவர் சகோ.அர்சத் அவர்கள் தலைமையில் கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் தாவா பணிகள் பற்றி ஆலோசனையும்,கருத்தும் கேட்கபட்டது. இதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினர்.அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( இறைதூதர் நபி (ஸல்)அவர்களின் உள்ளத்தில் அல் குர்ஆன் வசனங்கள் இறைவன் பதிய வைத்தான்) என்பதனை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)



























