Thursday, 12 June 2014

"பராஅத் ஓர் பித்அத்" _கோம்பைத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்  கிளை சார்பாக 10.06.2014 அன்று ஜம்ஜம்நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. தவ்பீக் அவர்கள் "பராஅத் ஓர் பித்அத்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

O+ இரத்தம் 1யூனிட்அவரச இரத்த தான உதவி _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 11.06.2014  அன்று திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவைப்பட்ட O+ இரத்தம் 1யூனிட் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி  வழங்கப்பட்டது.

எழுத்துவடிவில் திருகுர்ஆன் _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 12.06.2014 அன்று சகோ.ஜின்னா  அவர்கள் "எழுத்துவடிவில் திருகுர்ஆன்"எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை
இவ்வசனங்கள் (2:97, 4:153,. 6:7, 7:157, 7:158, 20:114, 25:5, 26: 195, 29:48, 75:16, 75:18, 87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுத்து வடிவில் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்று கூறுவோருக்கு மறுப்பாக அமைந்துள்ளன.
"எழுத்து வடிவில் தந்திருந்தாலும் இவர்கள் ஏற்க மாட்டார்கள்' என்று 6:7வசனத்தில் கூறப்படுவதில் "எழுத்து வடிவில் அருளப்படவில்லை' என்ற கருத்து அடங்கியுள்ளதை அறியலாம்.
வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர் என்று 4:’153 வசனம் கூறுகிறது. எழுத்து வடிவமாக ஒரு நூல் வானிலிருந்து இறங்க வேண்டும் என அன்றைய மக்கள் கேட்டதிலிருந்து அவ்வாறு அருளப்படவில்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி அறியலாம்.
இவ்வேதம் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. மாறாக ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் பதிவு செய்யப்பட்டது என்று திருக்குர்ஆன் (2:97, 26:194) கூறுகிறது.
உமது நாவை இதற்காக அவசரப்பட்டு அசைக்காதீர். அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது என்று  திருக்குர்ஆன் (75:16-19) கூறுகிறது.
ஜிப்ரீல் (அலை) அவர்கள், குர்ஆனை எழுத்து வடிவில் கொடுத்திருந்தால் அவசரம் அவசரமாக நபிகள் நாயகம் (ஸல்) மனனம் செய்ய முயற்சிக்க வேண்டியதில்லை. ஜிப்ரீல் போன பிறகு எழுதியதை வாசிக்கச் செய்து மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியும்.
எழுத்து வடிவில் இல்லாததால் மறந்து விடுமோ என்று பயந்து தமது நாவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேகவேகமாக அசைக்கிறார்கள். "அவ்வாறு அசைக்கத் தேவையில்லை. உள்ளத்தில் பதிவு செய்ய வைப்பது என்னுடைய வேலை' என்று இறைவன் பொறுப்பேற்கிறான்.
எழுத்து வடிவில் திருக்குர்ஆன் அருளப்படவே இல்லை என்பதற்கு இதுவும் மிகத் தெளிவான சான்று.
உமக்கு நாம் ஓதிக்காட்டுவோம். நீர் மறக்க மாட்டீர். அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான் என்று திருக்குர்ஆன் (87 : 6, 7) கூறுகிறது.
நாம் உமக்கு ஓதிக் காட்டுவோம் என்ற வாசகம் திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்பதைக் கூறுகிறது. அதை நீர் மறக்க மாட்டீர் என்பது மேலும் இதை வலுப்படுத்துகிறது. மறக்க முடியாத நினைவாற்றல் வழங்கப்பட்டிருப்பதால் எழுத்து வடிவம் அவர்களுக்குத் தேவையில்லை என்பதும் இதனுள் அடங்கியுள்ளது.
எனவே திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவே இல்லை என்பது சந்தேகமற நிரூபணமாகிறது.
நபிகள் நாயகத்திற்கு எழுதவும், படிக்கவும் தெரியாது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் தெளிவுபடுத்துகின்றது. இது குறித்து அறிய 312வது குறிப்பைக் காண்க!
எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகத்திற்கு எழுத்து வடிவில் திருக்குர்ஆன் அருளப்பட்டிருக்க முடியாது என்பதும் தெளிவாகின்றது.

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்று இவ்வசனங்கள் (6:312, 7:157, 7:158, 25:5, 29:48) கூறுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப்படிக்க அறிந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியும்'' என்று படித்தவர்கள் தங்கள் பங்குக்கு இட்டுக்கட்டிக் கூறி வருகின்றனர்.
படிப்பறிவைக் கொண்டே மனிதர்களின் தகுதிகள் வரையறை செய்யப்படும் காலத்தில் இவர்கள் வாழ்வதால், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படிக்காதவர்கள்'' என்று சொல்ல இவர்கள் கூச்சப்படுகிறார்கள்.
இவ்வாறு கூறினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமோ என்று கருதிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியும் என்று வாதிட்டு வருகின்றனர்.
அல்லது படிக்காத ஒருவரை தங்களின் வழிகாட்டி என்று சொல்ல வெட்கப்படுகிறார்களோ என்னவோ?
இதற்கு ஆதரவாகச் சில சான்றுகளையும் எடுத்து வைக்கின்றனர். இந்தச் சான்றுகள் சரியானவையா என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாமல் இருப்பது உண்மையில் தகுதிக் குறைவு தானா? என்பதை ஆராய்வோம்.
படிப்பறிவு இல்லாதிருப்பது பொதுவாக தகுதிக் குறைவாகக் கருதப்பட்டாலும் நபிகள் நாயகத்துக்கு இது தகுதிக் குறைவை ஏற்படுத்தாது. ஏனெனில், தகுதிக் குறைவாகக் கருதப்படும் சில விஷயங்கள் சில இடங்களில் தகுதியை அதிகப்படுத்துவதாக அமைந்து விடும்.
படிப்பறிவு மனிதர்களுக்கு கூடுதல் தகுதியை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாமல் இருப்பது தான் சிறப்பாகும்.
எனக்கு இறைவனிடமிருந்து தூதுச்செய்தி வருகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அந்தச் செய்தி மிகவும் உயர்ந்த இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தது. இதுபோல் யாராலும் இயற்ற முடியாது என்று அறைகூவல் விடும் அளவுக்கு அதன் தரம் இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படித்தவராக இருந்திருந்தால் தமது படிப்புத் திறமையினால் இதை இயற்றியுள்ளார் என்று மக்கள் நினைத்திருப்பார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திறமைசாலி என்பது நிரூபணமாகுமே தவிர அல்லாஹ்வின் தூதர் என்பது நிரூபணமாகாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபுமொழிப் பண்டிதர் என்பதை விட அல்லாஹ்வின் தூதர் என்பதுதான் பல்லாயிரம் மடங்கு சிறந்த தகுதியாகும்.
அவர்கள் எழுதவோ, படிக்கவோ தெரிந்திருந்தால் அவர்களை நேரடியாகக் கண்ட மக்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்க மாட்டார்கள். அவர்கள் கூறிய தூதுச் செய்தியை அல்லாஹ்வின் வேதம் என்றும் ஏற்றிருக்க மாட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் என்பதை நிரூபிக்க அல்லாஹ் ஏற்படுத்திய நிலைதான் இந்தத் தகுதிக் குறைவு.
"எழுதப் படிக்கத் தெரியாதவர் இவ்வளவு உயர்ந்த தரத்தில் செய்திகளைக் கூறுகிறாரே! நிச்சயமாக இவரது திறமையால் இது உருவாக்கப்பட்டிருக்கவே முடியாது. இவர் கூறுவது போல் இது இறைவனது செய்தியாகத்தான் இருக்க முடியும்'' என்று அன்றைய மக்கள் நம்பியதற்கு நபிகள் நாயகத்தின் படிப்பறிவின்மையே முக்கியக் காரணமாக இருந்தது.
இதை நாம் கற்பனை செய்து கூறவில்லை. திருக்குர்ஆன் 29:48 வசனத்தில் அல்லாஹ்வே இவ்வாறுதான் கூறுகிறான். "உமக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்'' என்ற வாசகத்தைச் சிந்திப்பவர்கள் இதைச் சந்தேகமற அறியலாம்.
வேறொரு சிறப்பை அவர்களுக்கு அளிப்பதற்காக இதை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கவில்லை என்று இவ்வசனம் (29:48) இரண்டாவது கருத்துக்கு இடமின்றி அறிவித்து விடுகிறது.
நபிகள் நாயகத்துக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியாது என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகவும் பல இடங்களில் குறிப்பிடுகிறது.
திருக்குர்ஆன் 7:157,158 வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை "உம்மீ' என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
உம்மு என்றால் தாய் என்பது பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது பொருள். கைக்குழந்தைகள் தாயையே சார்ந்திருப்பதால் கைக்குழந்தைகள் உம்மீ எனக் குறிப்பிடப்பட்டனர். பின்னர் எழுதவும், வாசிக்கவும் தெரியாதவர்கள் இந்த விஷயத்தில் கைக்குழந்தைகளின் நிலையில் இருப்பதால் உம்மீ எனப்பட்டனர்.
இது முன்னோர்களின் கட்டுக்கதை. இதை இவர் எழுதச் செய்து கொண்டார். காலையிலும், மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது எனவும் கூறுகின்றனர். (திருக்குர்ஆன் 25:4,5)
இந்தக் குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இட்டுக்கட்டியதாக அவர்கள் கூறினார்கள். மேலும், பலர் இதற்கு உதவியாக இருந்ததாகவும் கூறினார்கள். அப்படிக் கூறும் போது கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக எழுதிக் கொண்டார்கள் எனக் கூறாமல் மற்றவர்களை வைத்து எழுதிக் கொண்டார்கள் எனக் குறிப்பிட்டனர். நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரியாது என்பது அந்த மக்களுக்கும் நன்றாகத் தெரிந்த காரணத்தினால்தான் எழுதத் தெரிந்தவர்களை வைத்து எழுதிக் கொண்டார் என்று கூறினார்கள்.
"கதப' என்றால் எழுதினான் என்பது பொருள். "இக்ததப' என்றால் ஒருவரிடம் சொல்லி எழுத வைத்தான் என்பது பொருள். மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்தில் "இக்ததப' என்ற வார்த்தை தான் இடம் பெற்றுள்ளது.
இவை அனைத்துக்கும் மேலாக 29:48 வசனம் அமைந்துள்ளது.
இதற்கு முன்னரும் எந்த நூலில் இருந்தும் நீர் வாசித்ததில்லை; இனியும் உமது வலக்கரத்தால் எழுத மாட்டீர் என்று திட்டவட்டமாக இவ்வசனம் அறிவிக்கிறது.
உமது வலக்கரத்தால் எழுதிக் கொண்டும் இருந்ததில்லை என்று சிலர் தமிழாக்கம் செய்திருப்பது தவறாகும். "வலாதஹுத்து' என்பது எதிர்கால வினைச் சொல்லாகும். இனியும் எழுத மாட்டீர் என்பதே இதன் நேரடியான சரியான மொழிபெயர்ப்பாகும்.
நபியாக ஆவதற்கு முன்பும் எழுதவில்லை. இனியும் எழுத மாட்டீர் என்று அல்லாஹ் அறிவித்து விட்டதால் "நபியாக ஆன பின்பு எழுதப்படிக்க அறிந்திருக்கக் கூடும்'' என்று சிலர் வாதம் செய்வது தவறு என்பது நிரூபணமாகின்றது.
நபிகள் நாயகத்திற்கு எழுதப் படிக்கத் தெரியும் எனக் கூறுவோர் பின்வரும் நிகழ்ச்சியைச் சான்றாகக் காட்டுவார்கள்.
ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது "அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்' என்று எழுதப்பட்டதை எதிரிகள் மறுத்தனர். அல்லாஹ்வின் தூதர் என்று நாங்கள் ஏற்றுக் கொண்டால் தான் நமக்கிடையே எந்த விவகாரமும் இல்லையே எனக் கூறினார்கள். இதை ஏற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்'' என்பதை அழித்து விட்டு "அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத்'' என்று எழுதச் சொன்னார்கள். நபித்தோழர்கள் யாரும் நபிகள் நாயகத்தின் பெயரை அழிக்க முன்வரவில்லை. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட தமது பெயரை அழித்தார்கள். (பார்க்க: புகாரி 2500, 2501, 2947, 3920)
நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரிந்திருந்தால் தான் தமது பெயரைக் கண்டு பிடித்து அழித்திருக்க முடியும் என்றும் வாதிடுகின்றனர். எழுதத் தெரியாது என்று தெளிவான சான்றுகள் இவ்வளவு இருக்கும் போது சுற்றி வளைத்துக் கொண்டு சான்று காட்டுகின்றனர்.
இவர்களின் வாதம் தவறு என்று புகாரி 3184வது ஹதீஸ் மறுக்கின்றது. "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்ததால் "அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்'' என்பதை அழித்து விட்டு "அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத்'' என்று எழுதுமாறு அலீ (ரலீ) அவர்களுக்குக் கட்டளையிட்டனர்; அலீ (ரலீ) அவர்கள் அழிக்க மறுத்து விட்டார்; "அப்படியானால் அந்தச் சொல் இருக்கும் இடத்தை எனக்குக் காட்டுங்கள்'' என்று அலீ (ரலீ) அவர்களிடம் கேட்டனர். அலீ (ரலீ) அவர்கள் அந்த இடத்தைக் காட்டினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தமது கையால் அழித்தனர்'' என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகிறது.
எழுதத் தெரியாமல் இருப்பது பொதுவாக தகுதிக் குறைவு என்றாலும் அதுவே நபிகள் நாயகத்திற்கு மட்டும் சிறப்பான தகுதியாகும் என்பதில் சந்தேகமில்லை.

"மகத்தான மாமனிதர்" _கோம்பைத்தோட்டம் கிளை பொதுக்கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்  கிளை சார்பாக 08.06.2014 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

  சகோதரர். H.M அஹ்மது கபீர் அவர்கள் "தற்கொலைகளும் ஜனாசா தொழுகையும்"எனும் தலைப்பிலும்,
சகோதரர். K.S.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி  அவர்கள் "மகத்தான மாமனிதர்"எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Wednesday, 11 June 2014

"இஸ்லாத்தில் இல்லாத பராஅத்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 11.06.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. சதாம்உசேன் அவர்கள் "இஸ்லாத்தில் இல்லாத  பராஅத்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

பிறமத சகோதரர்.சபரீஸ் க்கு புத்தகங்கள் வழங்கி தஃவா _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 10.06.2014 அன்று பிறமத சகோதரர்.சபரீஸ் அவர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி தஃவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம்,மாமனிதர் நபிகள் நாயகம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"மறுமை சிந்தனை" _யாஸின் பாபு நகர்கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாஸின் பாபு நகர்  கிளையின் சார்பாக 08.06.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் "மறுமை சிந்தனை"  என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...

"பராஅத் ஓர் வழிகேடு " _செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 10.06.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சதாம்உசேன் அவர்கள் "பராஅத் ஓர்  வழிகேடு " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பில் 08.06.2014 அன்று சகோ.ஆஜம்  அவர்கள் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

1யூனிட்அவரச இரத்த தான உதவி _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 10.06.2014  அன்று திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவைப்பட்ட O+ இரத்தம் 1யூனிட் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி  வழங்கப்பட்டது.

"ஆழ்கடலிலும்அலைகள் உள்ளன" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 11.06.2014 அன்று சகோ.ஜின்னா  அவர்கள் "ஆழ்கடலிலும்அலைகள் உள்ளன"   எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன

24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ்கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன.
(இருள்களைப் பற்றி 303வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.)
கடலின் ஆழத்தில் அலைகள் இருப்பதாகக் கூறப்படுவதில் அறிவியல் உண்மை இருக்கின்றது. இந்த வசனம் அருளப்பட்ட காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை ஆழ்கடலுக்கு உள்ளே அலைகள் இருப்பதை மனிதன் கண்டறியவில்லை.
சுனாமியால் ஜப்பான் போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டபோது, ஒரு பனைமரத்தின் உயரத்திற்கு அலைகள் எழும்புவதைக் கண்டனர். பூமியின் மேற்பரப்பில் உள்ள அலைகள் அதிக தூரத்திற்குச் செல்ல முடியுமே தவிர பனைமர உயரத்திற்கு மேலே செல்ல முடியாது என்பதால் இது குறித்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கடலுக்கு மேற்புறம் இருந்து பார்த்தால் தெரியாதவாறு கடலுக்கு அடியில் அலைகள் ஏற்படுகின்றன. மணிக்கு 500 மைல்கள் வேகத்தில் பயணிக்கும் சக்தி படைத்த இந்த அலைகள் கடற்கரைப் பகுதிகளை நெருங்கியதும் மோதி பயங்கரமாக ஆர்ப்பரித்து அப்பகுதியில் உள்ளவற்றை அழிக்கின்றன.
சுனாமி அலைகள் சுமார் 50 அடி உயரம் வரை எழும்பி கடற்கரையைக் ஒட்டியுள்ள நிலப்பரப்பில் சுமார் ஒரு மைல் தொலைவு வரை கடல் நீரை வீசி அடிக்கும் சக்தி படைத்தவை. தற்போது நம் நாட்டுக் கடற்கரையைத் தாக்கிய சுனாமி அலைகள் சுமார் 25 அடி உயரம் எழும்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
கடற்கரைக்கு அருகில் கடலில் பூகம்பங்கள் நிகழ்ந்தால் சுனாமி அலைகள் சுமார் 10 நிமிடம் கரையைத் தாக்கும் அபாயம் உள்ளது.
கடலின் ஆழத்திலும் பிரமாண்டமான அலைகள் உள்ளன. அந்த அலைகள், தரையிலிருந்து விமானம் கிளம்புவது போல் சீறிக் கிளம்புவதால் தான் பனைமர உயரத்திற்கு அது மேல் நோக்கி வர முடிகின்றது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
ஆழ்கடலுக்கு உள்ளேயும் பேரலைகள் உள்ளன என்ற இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது மேலும் நிரூபணமாகின்றது.

"பித்அத்தும் பராஅத்தும்" _வெங்கடேஸ்வரா நகர் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 10.06.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ. யாசர் அவர்கள்  "பித்அத்தும் பராஅத்தும்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....

பித்அத்தும் பராஅத்தும் _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 09.06.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ. தவ்பீக் அவர்கள்  "பித்அத்தும் பராஅத்தும்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....

Tuesday, 10 June 2014

"மனிதன் வளர்வதும் தேய்வதும் " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 09.06.2014 அன்று சகோ.செய்யதுஅலி  அவர்கள்   "மனிதன் வளர்வதும் தேய்வதும் " -333 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

 333. மனிதன் வளர்வதும் தேய்வதும்
அதிக காலம் மனிதன் வாழும் போது இறங்குமுகத்தை நோக்கிப் பயணிக்கிறான் என்று இவ்வசனத்தில் (36:68) கூறப்படுகிறது.
16:70, 22:5 வசனங்களிலும் அல்லாஹ் இது பற்றி கூறுகிறான்.
மனிதன் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே செல்கிறான். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பின் திரும்பவும் தேய்ந்து கொண்டே வந்து பற்களை இழந்து, நடையை இழந்து படுக்கையில் விழுகிறான். நடக்க முடியாமல், பேச முடியாமல், சிறு குழந்தை போன்று ஆகி விடுகிறான்.
மனிதன் நடுத்தர வயது வரை ஏறுமுகமாக சிறிது சிறிதாக வளர்ந்து வருகிறான். நடுத்தர வயதை அடைந்த உடன் இறங்குமுகமாகத் தேய்ந்து இறுதியில் பச்சிளம் குழந்தை படுக்கையில் மலஜம் கழித்தது போன்ற நிலையை அடைகிறான். இதைத்தான் இவ்வசனம் படைப்பில் இறங்குமுகம் என்று கூறுகிறது.

"பலவீனங்களை விட்டும் தூய்மையானவன் " உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 10.06.2014 அன்று சகோ.ஜின்னா  அவர்கள் "பலவீனங்களை விட்டும் தூய்மையானவன் "  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இறைவன் தூயவன் என்பதன் பொருள்

தூய்மையானவன் எனத் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த இடத்தில் ஸுப்ஹான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸுப்ஹான் என்றால் தூய்மை என்பது பொருள். நாம் தமிழில் பயன்படுத்தும் தூய்மை எனும் சொல், அழுக்கு, அசுத்தம் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதைக் குறிக்கும். ஆனால் ஸுப்ஹான் என்பது அதை விட ஆழமான அர்த்தம் கொண்ட சொல்லாகும்.
"கடவுள் தன்மைக்குப் பங்கம் விளைவிக்கும் எல்லாத் தன்மைகளை விட்டும் தூய்மையானவன்'' என்பதே ஸுப்ஹான் என்பதன் பொருளாகும்.
"தூக்கம், இயலாமை, பலவீனம், தோல்வி, இயற்கை உபாதை, மனைவி, மக்கள், தாய் தந்தை, பசி, தாகம் போன்ற அனைத்திலிருந்தும் நீங்கியிருத்தல்'' என்பது இதன் பொருளாகும். இந்தச் சொல்லை அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் பயன்படுத்தக் கூடாது.
அழுக்கு, அசுத்தம் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதைக் குறிக்க அரபியில் வேறு சொற்கள் உள்ளன.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:32, 2:116, 3:191, 4:171, 5:116, 6:100, 7:143, 9:31, 10:10, 10:18, 10:68, 12:108, 16:1, 16:57, 17:1, 17:43, 17:93, 17:108, 19:35, 21:22, 21:26, 21:87, 23:91, 24:16, 25:18, 27:8, 28:68, 30:40, 34:41, 36:36, 36:83, 37:159, 37:180, 39:4, 39:67, 43:13, 43:82, 52:43, 59:23, 68:29)

ஷபே பராஅத்

நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. 
அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான்
ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.
இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)
மற்றொரு ஹதீஸில் வருகிறது
நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி) நூல் : புகாரி (7280)
நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் ” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,
மேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.
மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால் , காட்ட முடியுமா?நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. 
ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்
وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)
மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)
ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)
(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)
பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
.

Monday, 9 June 2014

ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளையின் சார்பாக 09.06.2014 அன்று  ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம் நடைபெற்றது. பெற்றோரிடத்தில் தஃவா செய்து குழந்தையிடம் இருந்த கயறு அகற்றப்பட்டது.

"பராஅத் இரவு எனும் பித்அத்" _அலங்கியம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 01-06-2014 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்.ஷாருக்கான் அவர்கள் "பராஅத் இரவு எனும் பித்அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரரின் சிகிச்சைக்கு 1 யூனிட் அவரச இரத்த தான உதவி _நல்லூர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 09.06.2014  அன்று திருப்பூர் ரேவதி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்   பிறமத சகோதரரின் இதய அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட A+ இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி  வழங்கப்பட்டது.

நல்லூர் கிளை செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 08.06.2014 அன்று செயற்குழு  மாவட்ட செயலாளர். சகோ. ஜாகிர்அப்பாஸ் தலைமையில், மாவட்ட பொறுளாளர் சகோ.முஹம்மதுசலீம், மற்றும் மாவட்ட மருத்துவசேவை அணி செயலாளர் அன்வர் பாஷா முன்னிலையில்  கிளை உறுப்பினர்கள் கலந்துகொள்ள  நடைபெற்றது. 
இதில் கீழ்க்கண்டமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
1.கிளையின் புதிய மர்கஸ் இடம் கிரயம் செய்ய அனைவரும் ஒத்துழைப்பது.
2.பெண்கள் தாவா குழுவை ஒருங்கினைப்பது,
3.தாவா பேனர், 
4.விசிட்டிங் கார்டு அடிப்பது 


உள்ளிட்ட விஷயங்கள் முடிவு செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்..... 

"இப்ராஹிம் நபியின் பிரார்த்தனை" _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 08.06.2014 அன்று  சகோ.இஸ்மாயில்  அவர்கள் "இப்ராஹிம் நபியின் பிரார்த்தனை"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஏழைசகோதரர்க்கு ரூபாய் 500/= வாழ்வாதார உதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  நல்லூர் கிளை சார்பில் 08.06.2014  அன்று ஒரு ஏழைசகோதரர்க்கு ரூபாய் 500/=  வாழ்வாதார உதவி செய்யப்பட்டது.

"கஅபா" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக09.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "கஅபா" எனும் தலைப்பில்  குர்ஆன்வகுப்பு  நடத்தினார்கள். 
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

கஅபா


முதல் மனிதர் படைக்கப்பட்டவுடன் அவர் இறைவனை வணங்குவதற்காக எழுப்பிய ஆலயம் தான் கஅபா. (திருக்குர்ஆன் 3:96)
ஆதம் (அலை) இங்கு தான் வசித்தார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.
செவ்வகமான அக்கட்டடம் ஆதமும், அவரது பிள்ளைகளும் உள்ளே சென்று தொழப் போதுமானதாகும். ஆனால் இன்று அனைவரும் உள்ளே தொழ முடியாது என்பதால் அதைச் சுற்றி அதற்கு வெளியே தொழுகிறார்கள். அதைச் சுற்றியுள்ள வளாகமும், கட்டடமும் தான் மஸ்ஜிதுல் ஹராம் - புனிதப் பள்ளி எனப்படுகிறது.
ஆதமுக்குப் பின் கஅபா சிதிலமடைந்தது. பின்னர் இப்ராஹீம் நபியவர்கள் இறைக்கட்டளைப்படி அந்தப் பாலைவனத்தைக் கண்டுபிடித்து தமது மனைவியையும், மகன் இஸ்மாயீலையும் குடியமர்த்தினார்கள்.
இறைவனின் அற்புதமாக வற்றாத ஸம்ஸம் கிணறு ஏற்படுத்தப்பட்ட பின் 30 லட்சம் மக்களுக்கு அது தினமும் பயன்படுகிறது.
அந்தத் தண்ணீர் காரணமாக அந்தப் பாலைவனம் ஊராக ஆனது. எனவே அங்கே முதல் ஆலயத்தை தந்தையும், மகனுமாக மறுபடியும் கட்டினார்கள்.
(கஅபா பற்றி மேலும் விவரம் அறிய பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் இடங்கள் எனும் உள் தலைப்பிலும், நபிமார்கள் (இப்ராஹீம்) எனும் உள் தலைப்பிலும் காண்க! )
கஅபாவை மறு நிர்மாணம் செய்தார் - 2:127, 14:35, 22:26
இறை உத்தரவுப் படி மனைவியையும் பச்சிளம் பாலகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டார். இவ்விருவர் மூலமே மக்கா நகரம் உருவானது-14:37
இவர் கஅபா ஆலயத்தைக் கட்டுவதற்காக தங்கியிருந்த இடம் மகாமே இப்ராஹீம் எனப்படுகிறது - 2:125, 3:97

"எளிய திருமணமே இஸ்லாமிய திருமணம்" _மங்கலம் R.P.நகர் கிளை நோட்டீசுகள் 100 விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 08.06.14 அன்று, மங்கலத்தில் நடைபெற்ற நபிவழி திருமணத்தில் "எளிய திருமணமே இஸ்லாமிய திருமணம்"  எனும்  நோட்டீசுகள் 100  விநியோகம் செய்யப்பட்டது ... அல்ஹம்துலில்லாஹ்.

"பராஅத் இரவு" _பெரியகடை வீதி கிளை பெண்கள் பயான்

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளையின் சார்பாக 08.06.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.குர்ஷித்பானு ஆலிமா அவர்கள் "பராஅத் இரவு"  என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...