Tuesday, 18 December 2012

பேச்சாளர் பயிற்சி _மங்கலம் _16122012



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை 
மாணவர் அணியின் சார்பாக 16-12-2012 அன்று காலை 08:00 மணி முதல்09:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
இதில் இத்ரீஸ் அவர்கள் இலக்கை மறந்த இஸ்லாமியர்கள் என்ற தலைப்பிலும், 
சமீர் அவர்கள் மரணத்திற்கு பின் என்ற தலைப்பிலும், 
நவ்சாத் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும், 
சம்சுதீன் அவர்கள் துஆக்களின் சிறப்பு என்ற தலைப்பிலும், உரையாற்றினார்கள் 
(அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனை பயான் _மங்கலம் _16122012



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 
16-12-2012 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை மங்கலம் ஜக்கரியா காம்பவுன்ட் பகுதியில் தெருமுனைபயான் நடைபெற்றது 

இதில் சகோதரர் இத்ரீஸ் (மாணவர் அணி) அவர்கள் 
"இலக்கை மறந்த இஸ்லாமியர்கள்" என்ற தலைப்பிலும் 
சகோதரர் தவ்ஃபீக் (இமாம்)அவர்கள் 

நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்   

பெண்கள் பயான் _வெங்கடேஸ்வரா நகர் _ 16.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 16.12.2012 அன்று மாலை பெண்கள் பயான்
நடைபெற்றது.இதில் சகோ.பசீர்   அவர்கள்
"பெண்களின் நற்பண்புகள் " என்ற தலைப்பில்  உரையாற்றினார்.

Friday, 14 December 2012

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் _13122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 13.12.2012 அன்று மாலை 08:00முதல் சத்யா நகர்  பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.பசீர்   அவர்கள்
"பேய் பிசாசு உண்டா ? " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

Wednesday, 12 December 2012

வட்டி இல்லா கடன் உதவி _ உடுமலை _09122012


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
09.12.2012 அன்று  
வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில்பழனி  சகோதரர். யாசர் அஹமது
அவர்களுக்கு ரூ.6000/= 
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _11.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 11.12.2012 அன்று மாலை 08:00முதல் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.சதாம் அவர்கள்
"இறை அச்சம் " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

தெருமுனைபிரச்சாரம் _செரங்காடு _11.12.2012

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடுகிளைசார்பாக 11.12.2012அன்றுமாலை08:00முதல் 
தெருமுனை பிரச்சாரம்நடைபெற்றது.
இதில்சகோ.பசீர்அவர்கள் " இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Tuesday, 11 December 2012

பெண்கள் பயான் _09122012 _காலேஜ்ரோடு

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு   கிளை சார்பாக
G.K.நகர் பகுதி யில் 09.12.2012 அன்று மாலை  பெண்கள் பயான் நடைபெற்றது
  சகோதரி.மதீனா அவர்கள் "இஸ்லாம் கூறும் வழிமுறைகள்  "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அந்த பகுதி பெண்கள் தமது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

Sunday, 9 December 2012

பெண்கள் பயான் _09.12.2012 _வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக
வெங்கடேஸ்வரா நகர் மதரஸதுல்தக்வா வில்
09.12.2012 அன்று மாலை 5 மணிமுதல் பெண்கள் பயான் நடைபெற்றது
மாவட்ட பேச்சாளர்
சகோ.பசீர் அவர்கள்
 "இறை அச்சம் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம்   
சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால்
திருப்பூர் கோம்பை தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்
பள்ளியில் பிரதி ஞாயிறு காலை 7.00மணி முதல் 9.30மணி வரை (முதல்வகுப்பு) உள்ளூர்வாசிகளுக்கும் ,
 பிரதி ஞாயிறு காலை 10:00 மணி முதல்  1:00 மணி வரை 

(இரண்டாம் வகுப்பு) வெளியூர்வாசிகளுக்கும் நடைபெற்றுவருகிறது .
09-12-2012 அன்று   5 ஆவது வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது

தர்பியா_ 09122012 _தாராபுரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 09-12-2012 அன்று காலை 10:00 மணி முதல்  1:00 மணி வரை மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது
சகோ.அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் "கொள்கை உறுதி" எனும் தலைப்பில், நல்லொழுக்கபயிற்சி வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் சகோ.சேக்பரீத் சகோ.பசீர்,
கிளைநிர்வாகிகள் ,மற்றும் கிளைஉறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
அல்ஹம்துலில்லாஹ் 

Saturday, 8 December 2012

தர்பியா_04122012_மங்கலம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 04-12-2012 அன்று காலை 08:00 மணி முதல்  10:00 மணி வரை மஸ்ஜிதுல்மாலிகுல்முல்க் பள்ளியில் சகோ இமாம் தவ்ஃபீக் அவர்கள் "கொள்கை உறுதி" எனும் தலைப்பில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

Friday, 7 December 2012

தாவா பணிகளுக்காக அன்பளிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடுமலை கிளையின் தாவா பணிகளுக்காக
கேரளா மாநிலம் புதுநகரம் பகுதியை சேர்ந்த சகோதரர்.அப்துல்ஜமால் அவர்கள்
வீடியோ ப்ரொஜெக்டர், DVD பிளேயர், ஸ்க்ரீன் உட்பட
ரூ.38500 மதிப்பிலான பொருட்களை வழங்கினார்
இதனை உடுமலை கிளை நிர்வாகிகள் சகோ.பஜுலுல்லாஹ்,
சகோ.அப்துர்ரசீத் மற்றும்  சகோ.அப்துர்ரஹ்மான் ஆகியோர்
 30.11.2012 அன்று நேரில் சென்று பெற்றுக்கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - மாவட்ட நிர்வாகிகள் -ஆலோசனை


7.12.2012 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ,
திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் நேரில் வந்து
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 23.12.2012 அன்று
உடுமலையில் நடைபெற உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் "
நிகழ்ச்சி பற்றி செயல்படுத்த வேண்டிய செயல்முறைகள்,
பணிகள் குறித்து கலந்தாலோசனை செய்து ,
   கிளை நிர்வாகிகளுக்கு  ஆலோசனை வழங்கினர்.