Showing posts with label விழிப்புணர்வு பிரச்சாரம். Show all posts
Showing posts with label விழிப்புணர்வு பிரச்சாரம். Show all posts

Saturday, 16 December 2017

மாபெரும் கன்டன ஆர்ப்பாட்டம் ஏன் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 13/12/2017  அன்று லுஹர் தொழுகைக்குபின்  Ms நகர் சுன்னத் ஜமாஅத் பள்ளிமுன்பு   13 ம்தேதி   திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற இருக்கும் மாபெரும்  கன்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை நிகழ்த்தப்பட்டது

இதில் சகோ. சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 13 December 2017

கண்டன ஆர்பாட்டம் ஏன் விழிப்புணர்வு பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு  இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய   13-12-2017 அன்று நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக மக்களை அழைக்கும் முகமாக வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் "  அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம் " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

(மொத்தம்  - 7 இடங்களில் மெகா போன் பிரசாரம் நடைபெற்றது )
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 9 November 2017

தெருமுனைப்பிரச்சாரம் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி - SV காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக   05/10/17 அன்று S.v காலனி,கோல்டன் நகர் இரு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் 400 பேர் பயனடைந்தனர், அல்ஹம்துலில்லாஹ்

மெகா போன் பிராச்சாராம்,நோட்டீஸ் வினியோகம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/11/2017/ அன்று மஃரிப் தொழுகைக்கு பின்நவம்பர் 05 தேதி ஞாயிற்று கிழமை நடைபெற இருக்கும் தெருமுனை கூட்டம்  சம்பந்தமாக வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் வீதி வீதியாக சென்று  50 இடங்களில்  மெகா போன் பிராச்சாராம்  மற்றும் நோட்டீஸ் வினியோகம் செய்ப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Monday, 30 October 2017

இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் : காங்கயம் கிளை

இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் :
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 08:00மணி முதல் காங்கேயம்   பகுதியில்       1.பெரியார் நகர்.              2.அய்யசாமி நகர் காலணி.3.முஸ்லிம் வீதி.மூன்று இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது இந்த முகாமில்  கிட்டதட்ட 800 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!!!!

2.டெங்கு ஒருமாத கால பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 08:00மணி முதல் காங்கேயம்   பகுதியில்       1.பெரியார் நகர்.              2.அய்யசாமி நகர் காலணி.3.முஸ்லிம் வீதி.மூன்று இடங்களில் 1.டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு. 2.டெங்கு வராமல் தடுக்கும் வழிமுறைகள். 3.நிலவேம்பு கசாயத்தின் முக்கியத்துவம்.போன்ற விசயங்கள் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்கள் 500 விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

Saturday, 26 August 2017

டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி-மங்கலம், மங்கலம்R.P.நகர், கிளை

1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 20/08/17 அன்று டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் 5/ ஐந்து இடங்களில் நடைபெற்றது அதில் டெங்குக் காய்ச்சல் தடுக்கும் முறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 20/08/17 அன்று  டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி மங்கலம் கிளை மதரஸா மாணவர்கள் மாணவியர்கள் வைத்து பேரணி நடைபெற்றது இதில் 100/ நூறு மாணவ மாணவிகள் பங்கேற்றனர் அல்ஹம்துலில்லாஹ் அதில் RPநகர் கிளை மாணவிகள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்









Thursday, 24 August 2017

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 16/08/2017 அன்று  சமூதாயபணியாக குமரன் காலனி பகுதியில்" டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தின்  மூன்றாம் கட்டமாக நிலவேம்பு கசாயம் கொடுத்து வாகனத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 9 August 2017

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் - SV காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 5-8-2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம்  நடைப்பெற்றது ,இதில் சகோ பஷிர் அலி ஈஷா பாய் உரையாற்றினார்கள் 5இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்நடைப்பெற்றது ,மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் காய்ச்சி வழங்கப்பட்டது,இதனை அதிகமான மக்கள் வாங்கி பருகி பயனடைந்தனர்,அல்ஹம்துலில்லாஹ்.



Monday, 7 August 2017

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 02-08-17- அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் 300 நோட்டீஸ்கள் வீடுவீடாக கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 1 August 2017

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நோட்டிஸ் வினியோகம் - பல்லடம் கிளை

Tntj திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 30:7:17  காலை  10 மணிமுதல் 12 மணிவரை  
   டெங்கு விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது. மற்றும்டெங்கு விழிப்புணர்வு
 நோட்டீஸ் வீடு வீடாக  சென்று விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.






Saturday, 15 April 2017

முஹம்மதுர்ரசூலுல்லாஹ் மாவட்ட மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்-SV காலனி

திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 9-4-2017 அன்று முஹம்மதுர்ரசூலுல்லாஹ் மாவட்ட மாநாடை முன்னிட்டு  மதரஸா மாணவ மாணவிகளின்  விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது , இதில் மதரஸா மாணவன்  இம்ரான் அவர்கள்  "இஸ்லாம் மனிதநேய மார்க்கம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், மேலும் மதரஸா மாணவன்  முபாரக் அவர்கள்  "இஸ்லாம் கூறும் சகோரத்துவம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,அல்ஹம்துலில்லாஹ்



Saturday, 11 February 2017

ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் - M.S.நகர்

ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம்:


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 05-02-17 அன்று ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு தெருமுனைப்பிரச்சாரம் 8 இடங்களில் நடைபெற்றது.இதில்  KS தியேட்டர்,Msநகர் சுன்னத் ஜமாஅத் பள்ளி,பண்டியன் டீ கடை ஆகிய இடங்களில் சகோ.சதாம் அவர்களும்,ராதா நகர்,TMS நகர்,கோல்டன் நகர் ஆகிய பகுதிகளில் சகோ .சிராஜ் அவர்களும் ,செல்வலட்சுமி நகர்,ராகவேந்திரா ஸ்கூல் ஆகிய இடங்களில் சகோ.ஈஷா அவர்களும் உரையாற்றினார்கள்.ஆம்புலன்ஸ் சம்பந்தமான 1000 மேற்பட்ட நோட்டீஸ்களும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...


Wednesday, 25 May 2016

ஆம்புலன்ஸ் சேவை மற்றும் விபத்து விழிப்புணர்வு நாடகம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 22-05-2016 அன்று   அனைத்து சமுதாய மக்களும் குறைந்த சலுகை கட்டணத்தில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில்" ஆம்புலன்ஸ் " அர்ப்பணிப்பு நிகழ்ச்சியும், அதோடு்" ... இந்த பிரச்சாரம் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் உட்பட கிட்டத்தட்ட 7 முக்கிய இடங்களில் நடைபெற்றது. ஏராளமான மக்கள் இந்த பிரச்சாரத்தை பார்த்து பயன்பெற்றனர் ... மாவட்ட பேச்சாளர்கள் அப்துர்ரஹ்மான் மற்றும் பஷீர் அலி ஆகியோர் பிரச்சாரத்தின் போது உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்........ 

Monday, 28 December 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 20-12-15 ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு வாகனத்தில் தர்காவை அமைத்து விழிப்புனர்வு பிரச்சாரமும், மாநாட்டு அறிவிப்பும், 5 நிமிடம் உரையாக ஷிர்க்கை விளக்கி  தெருமுனைப்பிரச்சாரம் 23  இடங்களிளும், தாயத்தை அகற்றும் தாவாவும் செய்யப்பட்டது. .....அல்ஹம்துலில்லாஹ்......

Monday, 9 November 2015

விழிப்புணர்வு பிரச்சாரம் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 06-11-15 அன்று  பெண்கள் தாவா குழு  சார்பாக" ஷிர்க் ஒழிப்பு மாநாடு" சம்பந்தமாக வீடு வீடாக பிரச்சாரம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ....

Saturday, 12 September 2015

இரத்த தானம் விழிப்புணர்வு பிரச்சாரம் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 06-09-15 அன்று  ”’இரத்த தானம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின்”’ தொடர்ச்சியாக 35 க்கும் மேற்பட்ட  பிறமத சகோதரர்களுக்கு ”’இரத்ததானம் செய்வதின்  நன்மைகள்,அவசியம்”’ குறித்தும் மேலும் இஸ்லாம் இதை ஏன் வலியுறுத்துகிறது என்பது குறித்தும் தனித்தனியாக தாவா செய்யப்பட்டது.. அவர்களுக்கு இரத்த தானத்தை வலியுறுத்தும் நோட்டீஸ்களும் , அவசர இரத்ததான தேவைக்கான கிளையுடைய மருத்துவரணி விசிட்டி கார்டும் விநியோகிக்கப்பட்டது... மேலும் பல நபர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

Monday, 7 September 2015

”’வட்டி ஒழிப்பு”’ விழிப்புணர்வு பிரச்சாரம் - G. k .கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G. k .கார்டன் கிளையின் சார்பாக 01-09-15 அன்று  வட்டிக்கு எதிராக  வட்டி ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது ”" வட்டி ஒரு சாபக்கேடு””என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்......



Saturday, 5 September 2015

வட்டிக்கு எதிராக தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் - ,G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.K.கார்டன் கிளையின் சார்பாக 30-08-15அன்று வட்டிக்கு எதிராக தீவிரஆட்டோ பிரச்சாரம்  (( 7 )) இடங்களில்நடைபெற்றது,நோட்டிஸ் வினியோகமும் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

Thursday, 3 September 2015

"'இரத்த தானம் விழிப்புணர்வு பிரச்சாரம் ''' - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  ,Ms நகர் கிளை சார்பாக 30-08-15 அன்று  "'இரத்த தானம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் '''தொடக்கமாக 30 க்கும் மேற்பட்ட  பிறமத சகோதரர்களுக்கு இரத்ததானம் செய்வதின் அவசியம் குறித்தும் ,மேலும் இஸ்லாம் இதை ஏன் வலியுறுத்துகிறது என்பது குறித்தும் ,தனித்தனியாக தாவா செய்யப்பட்டது.. அவர்களுக்கு இரத்த தானத்தை வலியுறுத்தும் நோட்டீஸ்களும் , அவசர இரத்ததான தேவைக்கான கிளையுடைய மருத்துவரணி விசிட்டிங் கார்டும் விநியோகிக்கப்பட்டது... மேலும் பல நபர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.....

"' இரத்த தானம் விழிப்புணர்வு"'பிரச்சாரம் - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 30-08-15 அன்று "' இரத்த தானம் விழிப்புணர்வு"' பிரச்சாரத்தின் தொடக்கமாக 20 க்கும் மேற்பட்ட  பிறமத சகோதரர்களுக்கு ”இரத்ததானம் செய்வதின் நன்மைகள்”,அவசியம் குறித்தும் மேலும் இஸ்லாம் இதை ஏன் வலியுறுத்துகிறது என்பது குறித்தும் ,தனித்தனியாக தாவா செய்யப்பட்டது.. அவர்களுக்கு இரத்த தானத்தை வலியுறுத்தும் நோட்டீஸ்களும் , அவசர இரத்ததான தேவைக்கான கிளையுடைய மருத்துவரணி விசிட்டிங் கார்டும் விநியோகிக்கப்பட்டது... மேலும் பல நபர்களுக்கு நோட்டீஸ் விநியோகமும் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...