Sunday, 1 April 2018

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/03/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல் குர்ஆன் :  பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது,

 அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் முரண்பாடற்ற இறைவேதம் நோட்டீஸ் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-25-03-18- அன்று திருக்குர்ஆன் முரண்பாடற்ற இறைவேதம் நோட்டீஸ்வீடுகளிலும் கடைகளிலும் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட குடும்பம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 25-03-2018 அன்று Ms நகர் பள்ளியில் பிற மதத்தினை சேர்ந்த குடும்பத்திற்கு இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டது.  
1- தமிழ் குர்ஆன் 
2- தொழுகை சட்டங்கள் 
3- துவாக்களின் தொகுப்பு 4- மனனம் செய்வோம் 
ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. 
அவர்கள் இஸ்லாத்தினை தங்கள் வாழ்க்கை நெறியாக மாற்றிக்கொண்டார்கள்.
அவர்கள் தங்கள் பெயரினை
சுந்தர்-சுல்தான்
உமா-மர்யம்
பவஸ்ரீ-பாத்திமா
மாற்றிக்கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத், பல்லடம்"கிளையிவ் 25:3:18 மஃரிப் தொழுகைக்குப்பிறகு மர்கஸ்  பயான்"நடைபெற்றது.

  சகோ -ராஜா அவர்கள் சுலைமான் நபியின் வரலாறு எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்.   அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 25:3:18ஞாயிறு  மஃரிப் தொழுகைக்குப்பின் ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ: யாசர் அரபாத் அவர்கள் " மார்க்க பணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் " எனும்  தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளை வாராந்திர. பெண்கள் பயான்  25/3/2018. ஞாயிறு மாலை 5.15 மணிக்கு கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்

தலைப்பு. மூமின்களின் பண்பு
உரை சகோ. சிஹாபுதீன்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 25-03-2018 இன்று மக்ரிபிற்குப் பிறகு     தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் 

உரை: VKP சையது இப்ராஹிம், 
தலைப்பு: திருக்குர்ஆன் ஓர் அற்புதம்

பெண்கள் பயான் - செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளை சார்பாக  25/03/18 அன்று மாலை 07:00 மணிக்கு PAP நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் "நாவைப் பேணுவோம் " எனும் தலைப்பில் சகோதரி சுமையா உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்,கிளை சார்பில் 25-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு பேப்பர் விற்பனை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 25-3-2018அன்று 40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மேலும் 40 உணர்வு பேப்பர் போலீஸ் ஸ்டேஷன், கட்சி அலுவலகங்கள், சலூன் கடைகள் போன்ற இடங்களுக்கு இலவசமாக போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

வாராந்திர கிளை மசூரா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 25 / 3 / 2018 , ப ஜருக்குப் பிறகு வாராந்திர கிளை மசூரா நடைப்பெற்றது.

நிர்வாக கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு நிர்வாக கூட்டம் நடந்தது இதில் நிர்வாக பணி குறித்தும் கிளை தாவா பணி குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது 

நாள்.24:3:2018

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,

 தலைப்பு:கெட்ட தங்குமிடம் 
பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.24:3:2018

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது .தலைப்பு:நன்மையின் கூலி சுவர்க்கம் 
பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.25:3:2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளையில் 25/3/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 17, வசனம் 28 முதல் 40 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  23/03/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 61லிருந்து 72 வரைக்கும் ஓதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையில்24-3-18 சனி அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது ,உரை  சகோ உடுமலை அப்துல்லாஹ், தலைப்பு மனித குல வழிகாட்டி திருக்குரான், அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-24-03-18- அன்று பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி ஆபிதா அவர்கள் அண்டை வீட்டாரின் உரிமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். பிரபு திருக்குர்ஆன் அன்பளிப்பு - உடுமலை கிளை


மனித குல வழிகாட்டி திருகுர்ஆன் ஐ படிக்க ஆர்வமாக உள்ளது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையை தொடர்பு கொண்டு கேட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை சகோதரர். பிரபு அவர்களை 24-03-18- அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடுமலை கிளையின் சார்பில் நிர்வாகிகள் அவரின் அலுவலகம் சென்று சந்தித்து அவரின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 24:3:18சனி அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் "குர்ஆனும் விஞ்ஞானமும் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளை  சார்பாக 24-03-2018 அன்று 1 யூனிட்   "AB" positive வகை இரத்தம் அக்பர் என்ற சகோதரர் மூலம் வள்ளியம்மாள் என்ற   மாற்று மத  சகோதரிக்கு மூட்டு அறுவை சிகிச்சைக்காக  ரேவதி மருத்துவமனையில் அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 24-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 35 ஆவது வசனத்தில் இருந்து 42 ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம்  விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

இரத்ததானம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  24/3/18 அன்று ஆசிக் என்ற சகோதரர் மூலம் சின்னத்தாய் என்ற சகோதரிக்கு B+ ஒரு யூனிட் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  24/3/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 24-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 5 : 90 ),அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 24-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாறு  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார்.

வசனம்: அல்-யூஸுஃப் (12) : 24-29, அல்ஹம்துலில்லாஹ்