Wednesday, 13 November 2013

"ஆசுரா நோன்பின் சிறப்பு" _மங்கலம் கிளை பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் "ஆசுரா நோன்பின் சிறப்பு" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.

Tuesday, 12 November 2013

"தனிநபர் ஒழுக்கம்" _செரங்காடுகிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை சார்பில் 12.11.2013 அன்று  பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். ஜபருல்லாஹ்  அவர்கள் "தனிநபர் ஒழுக்கம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

"முஹர்ரம் மாதமும் மூட நம்பிக்கையும் " பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பில் 12.11.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். பசீர் அவர்கள் "முஹர்ரம் மாதமும் மூட நம்பிக்கையும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

"இஸ்லாமும் நவீன கலாச்சாரமும் " _மங்கலம் R.P.நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 12.11.2013 அன்றுகாயிதே மில்லத் நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். சிராஜ் அவர்கள் "இஸ்லாமும் நவீன கலாச்சாரமும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

"மூட நம்பிக்கை" _மங்கலம் R.P.நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 12.11.2013 அன்று ரோஸ்கார்டன் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். யாசர் அரபாத் அவர்கள் "மூட நம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.  






கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

தாவா பணிகளுக்கு மக்களை அழைக்கும் நோட்டீஸ் வினியோகம் _S.V. காலனி கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 08.11.2013 அன்று 10.11.2013 நடைபெற உள்ள பெண்கள் பயான் மற்றும் தெருமுனை பிரச்சாரத்திற்கு மக்களை அழைக்கும் நோட்டீஸ்
110 வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்

இஸ்லாமிய குடும்பம் _S.V.காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 10.11.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. 
சகோதரரி ஷபா அவர்கள் இஸ்லாமிய குடும்பம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  





சகோதரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

பயானிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியான விடையளித்த சகோதரிகளுக்கு  "நபிகளாரின் நற்போதனைகள் " புத்தகம் பரிசாக வழங்கப்பட்டன.


"சினிமாவில் சீறழியும் சமுதாயம்" _S.V. காலனி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 10.11.2013 அன்று S.V.காலனி யில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. 
அதில் சகோதரர். பஷீர் அவர்கள் "சினிமாவில் சீறழியும் சமுதாயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 






கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

S.V. காலனி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 10.11.2013 அன்று S.V. காலனி மஸ்ஜிதுல் அக்ஸாபள்ளியில் மஃரீப் க்கு பிறகு குர்ஆன் வகுப்பு திருகுர்ஆன் தமிழாக்கம் படிக்கப்பட்டது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிற மத சகோதரர்.கருப்புசாமி குடும்பத்தாருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 11.12.2013 அன்று  பிற மத சகோதரர்.கருப்புசாமி அவர்களின் குடும்பத்தாருக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி,  திருகுர்ஆன் தமிழாக்கம், அன்பளிப்பாக  வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

"கொள்கை உறுதி " _நல்லூர் கிளைகுர்ஆன் வகுப்பு






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 12-11-2013 அன்று  சகோ.பசீர்  அவர்கள்  "கொள்கை உறுதி " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"முஹர்ரம் மாத மூடநம்பிக்கைகள்" _காலேஜ்ரோடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு   கிளை  சார்பாக 11-11-2013 அன்று  சாதிக்பாட்சா நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ சபியுல்லாஹ் அவர்கள் "முஹர்ரம் மாத மூடநம்பிக்கைகள்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

"சனிக்கிழமை சாபத்திற்கு உரியோர்" மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 11.11.2013 அன்று சகோ.சிராஜுதீன் அவர்கள்  "சனிக்கிழமை சாபத்திற்கு உரியோர்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"தொழுகையின்சிறப்புகள்" நல்லூர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 11-11-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரர்.அப்துர்ரஹ்மான்  அவர்கள் "தொழுகையின்சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

மண்ணறை வாழ்க்கை _மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக 11-11-2013 அன்று  காயிதேமில்லத் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ யாசர் அவர்கள் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

"பள்ளியில்தொழுபவரை தடுப்பது ஒரு பெரும்பாவம்"_மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "பள்ளியில்தொழுபவரை  தடுப்பது ஒரு பெரும்பாவம்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு _மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 11-11-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை காயிதேமில்லத் நகரில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் முஹர்ரம் மாதத்தின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு _மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் முஹர்ரம் மாதத்தின் சிறப்பு என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மஸ்ஜிதுர்ரஹ்மான்" புதிய மக்தப் மதரஸா _வடுகன்காளிபாளையம் கிளை

 
TNTJ திருப்பூர்மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையில்  "மஸ்ஜிதுர்ரஹ்மான்" என்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தினசரி மக்தப் மதரஸா  




 

 01.11.2013 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
  நடைபெறுகிறது...
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாடம் படிக்கின்றனர்..
அல்ஹம்துலில்லாஹ்!

"ஆசுரா நோன்பும் அதன் நன்மைகளும்" _ கோம்பை தோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் 11.11.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
அதில் சகோதரர். சேக் பரீத் அவர்கள் "ஆசுரா நோன்பும் அதன் நன்மைகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

Monday, 11 November 2013

இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு



293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு


அல்-குர்ஆன் 32:5வானத்திலிருந்து பூமி வரை காரியங்களை அவனே நிர்வகிக்கிறான். அது ஒரு நாளில் அவனிடம் மேலேறிச் செல்லும். அது நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் வருடங்கள் அளவுடையது.

அல்-குர்ஆன் 22:47 (முஹம்மதே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது.

 
அல்-குர்ஆன் 70:04 வானவர்களும், ஜிப்ரீலும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான ஒரு நாளில் அவனிடம் ஏறிச் செல்வர்



திருக்குர்ஆன் 22:47, 32:5ஆகிய வசனங்களில் இறைவனின் ஒரு நாள் என்பது உங்கள் நாட்களில் ஆயிரம் வருடங்கள் அளவுடையது எனவும், 70:4 வசனத்தில் ஐம்பதாயிரம் வருடங்கள் அளவுடையது எனவும் கூறப்படுகிறது.
ஒரு நாள் என்பது ஐம்பதாயிரம் வருடங்களுக்கு (1,82,50,000 நாட்களுக்கு) நிகரானது என்று கூறப்படுவதைச் சென்ற நூற்றாண்டுக்கு முன் வரை வாழ்ந்தவர் களால் புரிந்து கொள்ள முடியாது. நாட்கள் என்பது மாறவே மாறாது என்பது தான் உலக மக்களின் நம்பிக்கையாக இருந்தது.
ஆனால் ஒரு நாள் என்பது ஒருவரின் பயண வேகத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதை ஐன்ஸ்டீன் என்பவர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தார். இது ரிலேட்டிவிட்டி எனும் சார்பியல் கோட்பாடு எனப்படுகிறது.
உதாரணமாக, இந்தப் பூமியிலிருந்து ஒருவன் ஒளி வேகத்தில் மேல் நோக்கிப் பயணம் செய்து கொண்டே இருக்கிறான். (ஒளியின் வேகம் வினாடிக்கு சுமார் 3,00,000 கி.மீ). பூமியில் ஐம்பது ஆண்டுகளில் செய்கின்ற காரியங்களைச் செய்து விட்டு அவன் திரும்பி வந்தால் பூமியில் சிறிது நேரமே கழிந்திருக்கும் இது இன்றைய நவீன உலகில் வாழும் மேதைகளில் பலருக்கே புரிந்து கொள்ளச் சிரமமாக இருந்தாலும் உண்மை இது தான்.
இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்வெளிப் பயணம் சென்று விட்டு, பல ஆண்டுகளில் செய்து முடிக்கும் அளவுக்குக் காரியங்களை ஆற்றி விட்டுப் பூமிக்கு வந்தார்கள். ஆனால் பூமியில் சற்று நேரம் தான் கழிந்திருந்தது.
ரிலேட்டிவிட்டி எனும் சார்பியல் கோட்பாட்டை 1905ஆம் ஆண்டு தான் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தார். இதை எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார் என்றால் நிச்சயம் அவர் இதைச் சொந்தமாகக் கூறியிருக்க முடியாது. அது இறைவனின் கூற்றாகவே இருக்க முடியும்.
இங்கே மற்றொரு சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.
32:5 வசனத்தில் ஒரு நாளை ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது எனக் கூறும் திருக்குர்ஆன், 70:4 வசனத்தில் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சம மானது எனக் கூறுவது ஏன்? இரண்டும் முரண்படுகிறதே என்பது தான் அந்தச் சந்தேகம்.
ஆயிரமும், ஐம்பதாயிரமும் ஒன்றுக் கொன்று முரண்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இரண்டும் வெவ்வேறு செய்திகளைக் கூறும் வசனங் கள் என்பதை விளங்கிக் கொண்டால் இதில் எந்த முரண்பாடும் இல்லை.
இவ்விரு வசனங்களில் பயன் படுத்தப்பட்டுள்ள சொற்களைக் கவனிக் கும் எவரும் இரண்டும் தனித்தனியான விஷயங்கள் என்பதை விளங்கிக் கொள்வர்.
70:4 வசனத்தை எடுத்துக் கொண் டால் பூமிக்கு வருகின்ற வானவர்கள் மேலேறிச் செல்வது பற்றிக் கூறப்படுகிறது. ஒளியால் படைக்கப்பட்ட வானவர்கள் பூமியிலிருந்து இறைவனிடம் மேலேறிச் செல்லும் வேகம் ஐம்பதாயிரம் வருடங்களுக்கு நிகரான ஒரு நாளின் வேகம் எனக் கூறப்படுகிறது.
அதாவது ஒரு நாளில் அவர்கள் சென்றடைந்த தூரத்தை நீங்கள் அடைவது என்றால் ஐம்பதாயிரம் ஆண்டுகள் (அதாவது 1,82,50,000 நாட்கள்) தேவைப்படும். அவர்கள் ஒரு விநாடியில் சென்றடையும் தூரத்தை நாம் அடைவது என்றால் 211 நாட்கள் தேவைப்படும். அவ்வளவு வேகமாக அவர்களின் பயணம் அமைந்திருக்கும்.
வானவர்களின் பயண வேகத்தை 70:4 வசனம் கூறுகிறது.
32:5 வசனம் வானவர்களின் வேகத்தைக் கூறவில்லை. இறைவன் பிறப்பிக்கும் கட்டளை பூமியை அடைந்து மீண்டும் திரும்பிச் செல்வதற்கான வேகத்தைக் கூறுகிறது. இறைவன் ஒவ்வொரு விநாடியும் கோடிக்கணக்கான கட்டளைகளைப் பிறப்பிக்கின்றான்.
உலகில் நடக்கும் எந்தக் காரியமா னாலும் அவனது கட்டளைப்படியே நடக்கின்றன.
இவ்வாறு பிறப்பிக்கப்படும் கட்டளை கள் பூமியை அடைந்து மீண்டும் இறைவனைச் சென்றடையும் வேகம் பற்றி இவ்வசனம் கூறுகிறது.
இறைவனின் ஒரு கட்டளை ஒரு நாளில் சென்றடையும் தூரத்தை மனிதன் அடைய 1000 ஆண்டுகள் (3,65,000 நாட்கள்) தேவைப்படும்.
இறைவனின் கட்டளை ஒரு விநாடியில் செல்லும் தூரத்தை நாம் அடைய நான்கு நாட்களுக்கு மேல் தேவைப்படும்.
வானவர்களின் வேகம், கட்டளை களின் வேகத்தை விட 50 மடங்கு அதிகமாகவுள்ளது.
இது போல் 22:47 வசனமும் இறை வனின் கட்டளைகளின் வேகத்தையே குறிப்பிடுகின்றது.
அவசரமாக வேதனையைத் தேடுகின்றனர். அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான். சொன்னபடி வேதனை வந்து சேரும் என்று கூறிவிட்டுத் தான் உங்கள் இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணிக்கின்ற ஆயிரம் வருடங் களைப் போன்றது எனக் கூறுகிறான்.
அதாவது இறைவன் கட்டளை பிறப் பித்து விட்டால் ஆயிரம் ஆண்டுக்கு நிகரான வேகத்தில் அக்கட்டளை வந்து சேரும் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது.
எனவே ஆயிரம் ஆண்டுகள் என்பதும் ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்பதும் வெவ்வேறு விஷயங் களுக்கான கணக்கு என்பதைப் புரிந்து கொண்டால் எந்தக் குழப்பமும் இல்லை

"நபிமார்களில் ஏற்ற தாழ்வு கிடையாது " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 09.11.2013 அன்று சகோ.செய்யது அலி   அவர்கள்  "நபிமார்களில் ஏற்ற தாழ்வு கிடையாது " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மாவட்ட நிர்வாகசெலவினகளுக்காகரூ.500/= நிதியுதவி _வடுககாளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வடுககாளிபாளையம்  கிளை சார்பில்
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் தாவா மற்றும் நிர்வாக செலவினகளுக்காக 08-11-2013 அன்று ஜும்ஆ வசூல் செய்த ரூ.500/= நிதியுதவி வழங்கப்பட்டது.

வாக்குறுதி மீறுவது ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் வாக்குறுதி மீறுவது ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

"இஸ்லாம் கூறும் நற்பண்புகள் " _வடுககாளிபாளையம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வடுககாளிபாளையம்  கிளை சார்பில் 10-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.யாசிர் அரபாத்   அவர்கள்  
"இஸ்லாம் கூறும் நற்பண்புகள் "  என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.
தொடர்ந்து மதரசா மாணவர்கள் கிராத் ஓதினார்கள்