Thursday, 12 September 2019

ஆஷுரா நோன்பாளி களுக்கு இப்தார் _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 11.09.2019 அன்று ஆஷுரா நோன்பின் இரண்டாம் நாள் நோன்பு நோற்ற நோன்பாளி களுக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 24 August 2019

படையப்பா நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 23/08/2019 அன்று படையப்பா நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு மாவட்ட மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

கிளையின் தாவா பணிகள் பற்றியும், நிறை குறைகள் பற்றியும் கருத்துக்கள் கேட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 23/08/2019 அன்று கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

கிளையின் தாவா பணிகள் பற்றியும், நிறை குறைகள் பற்றியும் கருத்துக்கள் கேட்டு வருங்காலத்தில் தாவா பணிகளை வீரியப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

ms நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 23/08/2019 அன்று ms நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.
ஜமாஅத் பற்றிய கிளையின் நிறை குறைகள் பற்றி கருத்துக்கள் கேட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 19 August 2019

மாபெரும் இரத்ததான முகாம் - மங்கலம் கிளை










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக...

18.8.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.

இதில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகவும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மங்கலம் பகுதியில் நடைப்பெற்றது.

இம்முகாமை மாவட்ட மருத்துவணி செயலாளர் ஜாஹிர் துவக்கிவைத்தார். 

மங்கலம் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் 100 க்கும் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உயிர் காக்கும் இரத்ததானம் செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை மங்கலம் கிளை நிர்வாகிகள் சிராஜ், நஜீர், அப்பாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்பதை ஓங்கி ஒலிக்கும் வகையில் இந்த இரத்ததான முகாம் அமைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்..

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _ வடுகன்காளி பாளையம் கிளை

                 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை சார்பாக 

18/08/2019 அன்று மாலை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

            முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி
                    வடுகன்காளிபாளையம் தவ்ஹீத் பள்ளிக்கு அருகில் உள்ள திடலில் நடைபெற்றது.

இதில் சகோ. M.S சுலைமான்  (TNTJ - மேலாண்மைக்  குழு தலைவர்) அவர்கள் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் இஸ்லாம் _ காலனி கிளை தெருமுனைகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SVகாலனி கிளை சார்பாக 



18/08/2019 அன்று மாலை தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

சகோ. இம்ரான் அவர்கள் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் இஸ்லாம் எனும் தலைப்பிலும்,
சகோ.அபூபக்கர் சித்தீக் சஅதி அவர்கள் சுதந்திரபோரில் முஸ்லிம்களின் பங்களிப்பும் தியாகமும் எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.


அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 13 August 2019

ஹஜ் பெருநாள் தொழுகை 2019

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2109 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி மைதானத் திடலில் நடைபெற்றது.



சகோ. தாவூத் கைசர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்







ஏராளமான ஆண்களும் பெண்களும்
 குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்


Monday, 5 August 2019

பல்லடம் - மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 04082049

தீவிரவாதத்திற்கு_எதிராக_முஸ்லிம்களின்_தொடர்_பிரச்சாரம்
\

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

04/08/2019 ஞாயிறு மாலை 7:15 முதல் பல்லடம் அண்ணா நகர் பகுதியில் நடைபெற்றது.



இந்த பொதுக்கூட்டத்தில் சகோதரி: *ரஹ்மத்* அவர்கள் *இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு* எனும் தலைப்பிலும்,

சகோதரர்: *அபூபக்கர் சஅதி* அவர்கள் *வரதட்சணை ஓர் வன்கொடுமை*
எனும் தலைப்பிலும்

சகோதரர்: *நெல்லை N.பைசல்* அவர்கள் *இஸ்லாம் கூறும் மனித நேயம்* எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.



பெருவாரியான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 4 August 2019

பேச்சுப்பயிற்சி முகாம் 04082019

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக இரண்டு இடங்களில்  தொடர் 10 வார பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

அல்ஹம்துலில்லாஹ்

அதில்  04/08/2019 அன்று 5ஆவது வார பேச்சுப்பயிற்சி 
  


S.Vகாலனி கிளை மர்கஸில் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் பயிற்சி வழங்கி நடைபெற்றது.






மாவட்ட மர்கஸ் வளாகத்தில் சகோதரர். அப்துல்லாஹ் MISc., பயிற்சி வழங்கியும் நடைபெற்றது.





அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்..

Saturday, 3 August 2019

மக்தப் மதரஸா ஆசிரியர், நிர்வாகிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி _ திருப்பூர் மாவட்டம்










































தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்தப் மதரஸா ஆசிரியர், நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் 02/08/2019 அன்று மாலை 4:45 முதல் 6:45 வரை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட பேச்சாளர் சகோதரர்.அபூபக்கர் சஆதி அவர்கள் அரபு உச்சரிப்பு மற்றும் அரபி இலக்கண வகுப்பு நடத்தினார்கள்.

TNTJ பேச்சாளர் சகோதரர். அப்துர்ரஹ்மான் misc., அவர்கள் மக்தப் மதரஸாக்களின் அவசியமும், அவற்றை சிறப்பாக நடத்துவதால் கிடைக்கும் ஈருலக பயன்களும் பற்றி விளக்கம் வழங்கினார்கள்.

மாவட்ட துணைத்தலைவர் சகோதரர்.யாஸர் அராபத் அவர்கள் மக்தப் மதரஸா பாடத்திட்ட வழிகாட்டுதல், மதரஸா ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள், மற்றும் கிளை நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டியவைகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.



மேலும் வருங்காலத்தில் மதரஸா செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றியும், மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகளும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்























தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழு  கூட்டம் 02/08/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாலை 5:40 மணி முதல் நடைபெற்றது.


இந்த வாரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் பற்றி ஆலோசித்து, மாவட்ட நிர்வாகிகளின் பணிகள் மற்றும் பொறுப்பாளர்கள் முடிவு செய்யப்பட்டது.
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சார சுவர் விளம்பரங்கள் மாவட்டம் முழுவதும் செய்வது என்றும்  ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 28 July 2019

சின்னவர் தோட்டம் _ திருப்பூர் மாவட்டத்தில் 33வது புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் அருகில் உள்ள சின்னவர் தோட்டம் பகுதியில் புதிய கிளை 


மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில்  மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் சகோ. சேக்பரீத், மற்றும் மாவட்ட துணை செயலாளர் அனீபா அவர்கள்  முன்னிலையில் 28.07.2019 அன்று மாலை 4:05 முதல்   துவங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்


இதில் கலந்து கொண்டவர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-

1.தலைவர் சகோ. அமானுல்லாஹ் 8524031183

2.செயலாளர் சகோ.அலாவுதீன் 7373943311

3.பொருளாளர் சகோ. இர்பான் 9344449116

4.துணை தலைவர் சகோ. நவாஸ் 8344335220

5.துணை செயலாளர் சகோ. இக்பால் 9787245015

அல்ஹம்துலில்லாஹ்

இந்தியன் நகர் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  இந்தியன் நகர் கிளை பொதுக்குழு  


மாவட்டத்தலைவர்  சகோ. நூர்தீன்  தலைமையில், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் சகோ. சேக்பரீத், மற்றும் மாவட்ட துணை செயலாளர் அனீபா அவர்கள்  முன்னிலையில் 28.07.2019 அன்று மாலை 3:15 முதல் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டவர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-


1.தலைவர் : சகோ. ஜெய்னுலாபுதீன் 9042339391


2.செயலாளர் : சகோ.நிஜாம் 9677885970


3.பொருளாளர் : சகோ. தவ்பீக் 9150507968


4.துணை தலைவர்: சகோ. அப்துல் ரஜாக் 9659697781


5.துணை செயலாளர் : சகோ. காசிம் 9994505582


6.மருத்துவரணி : சகோ. முஹம்மது அஸ்லம் 8248934929


அல்ஹம்துலில்லாஹ்.

பேச்சுப்பயிற்சி முகாம் 28072019

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக S.Vகாலனி கிளை மர்கஸில்  தொடர் 10 வார பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெறுகிறது.



அதில்   28/7/2019 அன்று 4ஆவது வார பேச்சுப்பயிற்சி முகாம்  நடைபெற்றது.


மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்..

Saturday, 27 July 2019

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சார செயல்வீரர்கள் கூட்டம் 260719







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம் ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சாரத்தை அறிவித்து, தமிழகம் முழுவதும் மற்றும் அதன் கிளைகள் உள்ள  பகுதிகளில் பலவிதமான பிரச்சாரங்கள் வாயிலாகவும், சமூக நற்பணிகள் மூலமாகவும் தொடர் பிரச்சாரத்தை செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக  திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சார செயல்வீரர்கள் கூட்டம் 26.07.19 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00மணிக்கு திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் இ. முஹம்மது , மாநில செயலாளர்கள் அப்துல் கரீம், மற்றும் கோவை. டி.ஏ. அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலாவதாக மாநில பொதுச் செயலாளர் இ. முஹம்மது அவர்கள் பேசும் போது, அமைதியையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி மக்களிடம் தவறான செய்தியாக பரப்பியும், இஸ்லாம் பற்றிய மக்களின் பார்வையை சிதைக்கும் வண்ணம் பல அவதூறுகளையும் கட்டவிழ்த்து மகிழ்கின்றனர் சில விஷமிகள். இதை உடைத்தெரியும் விதமாக, இஸ்லாம் காட்டும் வாழ்வியல் முறைகளை நாம் ஒவ்வோருவரும் நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ வேண்டும். இஸ்லாம் கூறுவது போல் நன்மையைக் கொண்டு தீமையை அழிக்க வேண்டும் எனவும், இதுபற்றிய விழிப்புணர்வை அனைத்து பகுதியிலுள்ள மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மாநில செயலாளர் அப்துல் கரீம் அவர்கள், இந்த தீவிரவாத எதிர்ப்பு தொடர் பிரச்சாரத்தின் செயல் திட்டங்களை அறிவித்தார். அதில் முக்கியமாக மக்களின் உயிர்காக்கும் இரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் போன்ற சமூக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இஸ்லாமிற்கும் தீவிரவாதத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை விளக்கி நோட்டீஸ், துண்டுப் பிரசுரம், புக்ஸ்டால் அமைத்தல், இலவசமாக திருக்குர்ஆன் வழங்குதல் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். 

மேலும் மாநில செயலாளர் கோவை டி.ஏ.அப்பாஸ் அவர்கள், ஏற்கனவே நாம் செய்துகொண்டிருக்கும் இப்பணிகளை கிளைகள் இன்னும் துரிதமாக செய்து செயல்பட வேண்டும். இச்செயல்கள் குறித்து கண்காணிக்கப்படும் என கூறினார்.

இதில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், பொருளாளர் அப்துல் ரஹ்மான், துணைத் தலைவர் யாசர் அராபத், துணைச் செயலாளர்கள் அப்துல் ரஷீது, ஷேக் பரீத், ரபீக், ஹனிபா மற்றும் மாணவரணிச் செயலாளர் இம்ரான், மருத்துவரணிச் செயலாளர் ஜாகிர், தொண்டரணிச் செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். 
இதில் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் ,பேச்சாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்