Showing posts with label இரத்ததான முகாம். Show all posts
Showing posts with label இரத்ததான முகாம். Show all posts

Monday, 19 August 2019

மாபெரும் இரத்ததான முகாம் - மங்கலம் கிளை










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக...

18.8.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.

இதில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகவும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மங்கலம் பகுதியில் நடைப்பெற்றது.

இம்முகாமை மாவட்ட மருத்துவணி செயலாளர் ஜாஹிர் துவக்கிவைத்தார். 

மங்கலம் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் 100 க்கும் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உயிர் காக்கும் இரத்ததானம் செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை மங்கலம் கிளை நிர்வாகிகள் சிராஜ், நஜீர், அப்பாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்பதை ஓங்கி ஒலிக்கும் வகையில் இந்த இரத்ததான முகாம் அமைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்..

Tuesday, 12 December 2017

இரத்ததான முகாம் **பிறமத தாவா - இந்தியன் நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/12/2017/ அன்று  காலை 11:00 மனிமுதல் 1:00 மனிவரை
இரத்த தான முகாம் நடைபெற்றது,முகாமில் 50 நபர் இரத்த தானம் செய்தனர் 
45 நபர் இரத்த வகை கண்டறிந்தனர், அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/12/2017/ அன்று  நடைபெற்ற  இரத்த தான முகாமில்

64 நபர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான  புத்தகங்கள்

01)பைபிளில் நபிகள் நாயகம்
2) வருமுன் உரைத்த இஸ்லாம்
3) மாமனிதர் நபிகள் நாயகம்
4) மனிதனுக்கேற்ற மார்கம்
இஸ்லாம்
5) அர்த்தமுள்ள இஸ்லாம்
6)அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள்
என்ற இஸ்லாமிய புத்தகங்கள் 
மருத்துவர் களுக்கும்,காவல் துறையினருக்கும் இரத்த தானம் செய்யவந்த டோனர் களுக்கும்  தாஃவா செய்து அன்பளிப்பாக வழங்கப்பட்டது

(அல்ஹம்துலில்லாஹ்)

Wednesday, 26 April 2017

இரத்ததானம் முகாம் - ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை மற்றும் திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருந்துவமனை இணைந்து 23/04/2017 அன்று இரத்ததானம் முகாம் நடத்தியது.

இந்த இரத்த தான முகாமில் தன்னார்வமாக 28 சகோதரர்கள் 28யூனிட் இரத்தம் தானம் வழங்கினர்.
அரசு மருத்துவமனை மருத்துவர் அவர்கள் இரத்ததானம் வழங்கியதற்கான சான்றிதழ்களை திருப்பூர் மாவட்ட செயலாளர் அவர்களிடம் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் கிளை நிர்வாகிகள், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் உட்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட மருத்துவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்...





Saturday, 28 January 2017

இரத்ததான முகாம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/01/2017 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது ,இதில் 75 இரத்ததானம் செய்தனர்,  இரத்தவகை கண்டறியும்  முகாம் நடைபெற்றது இதில் 110 பேர் இரத்த வகையை தெரிந்து கொண்டனர்,

Wednesday, 12 October 2016

இரத்ததான முகாம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 09-10-2016 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்தவகை கண்டறியுதல் முகாம் நடத்தியது. இதில் இரத்ததானம் செய்தவர்கள் 38 நபர்கள்,இரத்தம் வகை கண்டறிந்தவர்கள்.50 நபர்கள்

Wednesday, 27 April 2016

இரத்ததான முகாம் - கோம்பைத்தோட்டம் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 24-04-2016 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது . இதில் 109 பேர் இரத்ததானம் செய்தனர். ....அல்ஹம்துலில்லாஹ்....

Tuesday, 13 October 2015

இரத்ததான முகாம் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 04-10-15 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் பிறமத நண்பர்ளும் கலந்துகொண்டனர்  மொத்தம் 42 நபர்கள் இரத்ததானம் செய்தனர்,அல்ஹம்துலில்லாஹ்....

Tuesday, 22 September 2015

மாபெரும் இரத்ததான முகாம் - குமரன் காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக மாபெரும் 20-9-2015 அன்று இரத்ததானம் முகாம் நடை பெற்றது இதில் பிறமத சகோதரர்களும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார்கள்,மேலும் அவர்களுக்கு இஸ்லாம் குறித்தும்,இரத்ததானத்தை இஸ்லாம் வலியுறுத்துவது பற்றியும் தாவா செய்து  அவர்களுக்கு “”மனிதனுக்கேற்ற மார்க்கம் , அர்த்தமுள்ள இஸ்லாம், இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா, இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்,முஸ்லிம்கள் தீவிரவாதிகள்?”” என்ற நூல்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....