Tuesday, 7 May 2013

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா ?

 கேள்வி நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! 

4356 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "துல் கலஸாவி(ன் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்கள். அது "கஸ்அம்' குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது "யமன் நாட்டு கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது நான் "அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் சென்றேன். "அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர். என்னால் குதிரையில் சரியாக உட்கார முடியவில்லை. ஆகவே நபி (ஸல்) அவர்கள், தம் விரல்கள் பதிந்துள்ள அடையாளத்தை என் நெஞ்சில் நான் காணும் அளவிற்கு அதில் அடித்து, "இறைவா! இவரை உறுதிப்படுத்து! இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான் அங்கு சென்று அதை உடைத்து எரித்து விட்டேன்.

பிறகு, அல்லாஹ்வின் தூதரிடம் (தூதுவர் ஒருவரை) அனுப்பினேன். அவர், "தங்களை சத்திய(மார்க்கத்)துடன் அனுப்பியவன் மீது சத்தியமாக! அந்த ஆலயத்தைச் சிரங்கு பிடித்த ஒட்டகம் போன்ற நிலையில் விட்டுவிட்டுத் தான் நான் உங்களிடம் வந்துள்ளேன்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "(இறைவா!) "அஹ்மஸ்' குலத்தாரின் குதிரைகளிலும் அதன் மக்களிலும் வளர்ச்சியை அருள்வாயாக!'' என்று ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.

387 4357 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், "சரி (விடுவிக்கிறேன்)'' என்று சொன்னேன். அவ்வாறே, "அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் (துல் கலஸாவை நோக்கிப்) புறப்பட்டேன். "அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தார்கள். என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை. அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள் தமது கையை என் நெஞ்சின் மீது அடித்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களது கையின் அடையாளத்தை என் நெஞ்சில் நான் பார்த்தேன். அப்போது அவர்கள், "இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு நான் (ஒரு போதும்) எந்த குதிரையி-ருந்தும் விழுந்ததில்லை. "துல் கலஸா' என்பது யமன் நாட்டி-ருந்த "கஸ்அம்' மற்றும் "பஜீலா' குலத்தாரின் ஆலயமாகும். அதில், வணங்கப்பட்டு வந்த பலிபீடங்கள் இருந்தன. அது "அல் கஅபா' என்று அழைக்கப் பட்டு வந்தது. நான் அங்கு சென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தி உடைத்து விட்டேன். நான் யமன் நாட்டுக்குச் சென்றபோது அங்கு அம்புகளை வைத்துக் குறிகேட்கின்ற மனிதர் ஒருவர் இருந்தார். அப்போது அவரிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கே (அருகில்தான்) இருக்கிறார்கள். அவர்கüடம் நீ சிக்கிக் கொண்டால் உன் கழுத்தைத் துண்டித்து விடுவார்கள்'' என்று கூறப்பட்டது. அந்த மனிதர் அந்த அம்புகளை எறிந்து கொண்டிருந்த போது நான் அவரருகே சென்று நின்றேன். 
நான் நிச்சயம் இந்த ஆலயத்தை உடைக்கப் போகிறேன். " "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று நீ சாட்சியம் சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டி விடுவேன்'' என்று சொன்னேன். பிறகு நான் அதை உடைத்து விட்டேன். அந்த மனிதரும் "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சாட்சியம் கூறினார். 
பிறகு "அஹ்மஸ்' குலத்தவரில் "அபூ அர்தாத்' என்னும் குறிப்புப் பெயர் கொண்ட ஒரு மனிதரை, நபி (ஸல்) அவர்களிடம் இந்த நற்செய்தியைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற போது, "அல்லாஹ்வின் தூதரே! உங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அதை சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று தான் (ஆக்கி) விட்டு வந்துள்ளேன்'' என்று சொன்னார். உடனே, நபி (ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) "அஹ்மஸ்' குலத்தாருக்கும் அவர்களின் குதிரைகளுக்கும் வளர்ச்சியை அüக்கும்படி ஐந்து முறை (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தார்கள். 

முஹம்மது ஷேக், அபுதாபி 

அந்த நாத்திக நண்பர் மேலோட்டமாகப் பார்த்து விட்டு இக்கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து இஸ்லாம் கூறுவது என்ன என்பதை முழுமையாக ஆய்வு செய்ய அவருக்கு வழி இல்லாததால் அவருக்கும் இது போல் நினைத்துக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கும் நாம் விளக்கம் அளித்தால் தெளிவு பெற்று தம்முடைய தவறான கருத்தை மாற்றிக் கொள்வார்கள்.

 மேற்கண்ட ஹதீஸ்கள் குறித்து விளக்குவதற்கு முன்னர் 

பொதுவாக கட்டாய மதமாற்றம் குறித்து இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை முதலில் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். 

 இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். 
திருக்குர்ஆன் 2:256 

இவ்வசனத்தில் இஸ்லாத்தில் வற்புறுத்தல் கிடையாது என்றும் தெளிவான ஆதாரங்களை எடுத்துச் சொல்லி மார்க்கத்துக்கு அழைப்பு விடுப்பது மட்டுமே இஸ்லாத்தின் கொள்கை என்று இவ்வசனம் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது. மார்க்கத்தில் யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கக் கூடாது என்று திருக்குர்ஆனே கூறி விட்ட பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி யாரையும் மத மாற்றம் செய்திருப்பார்கள் என்று கருத நியாயம் இல்லை.

 (முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா? திருக்குர்ஆன் 10:99 

ஒருவர் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தால் அது இறைவனின் நாட்டப்படி தான் நடக்கிறது. நீர் யாரையும் கட்டாயப்படுத்துவ்தோ நிர்பந்தம் செய்வதோ கூடாது என்று இந்த வசனமும் தெள்ளத் தெளிவாக பிரகடனம் செய்கிறது. 

இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். திருக்குர்ஆன் 9:6 

ஏகஇறைவனை) மறுப்பவர்களே!'' நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 109 வது அத்தியாயம்) 

உங்கள் மார்க்கம் உங்களுக்கு; என் மார்க்கம் எனக்கு என்ற பிரகடனத்தின் மூலமும் வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்புதல் இல்லை என்று தெளிவாக அறிவிக்கப்படுகிறது. வேறு மார்க்கத்தில் இருப்பவர்கள் முஸ்லிம்களிடம் அடைக்கலம் தேடி வந்தால் அது தான் மத்த்தை தினிப்பதற்கு சரியான தருனமாகும். ஆனால் அப்படி யாரும் அடைக்கலம் தேடி வந்தால் அவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்பதை எடுத்து கூறுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவருக்கு பாதுகாப்பான ஏற்பாட்டைச் செய்து தர வேண்டும் என்று இவ்வசனமும் தெளிவாகச் சொல்கிறது. 

மேலும் எந்த நற்செயலாக இருந்தாலும் உளப்பூர்வமாக இருந்தால் தான் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. உள்ளத்தில் நம்பிக்கை இல்லாமல் வேண்டாவெறுப்பாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் அதனால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு அழைப்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானது. 

இறைவனை உளப்பூர்வமாக அஞ்சுவோரிடம் இருந்து தான் இறைவன் ஏற்றுக் கொள்கிறான். திருக்குர்ஆன் 5:27 "

முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்'' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னராக இருந்தும் யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தும் அவர்கள் யூதர்களாகவே இஸ்லாமிய ஆட்சியில் இருந்துள்ளார்கள் என்பதும் அவர்கள் முஸ்லிம்களை விட பொருளாதாரத்தை அதிகம் திரட்டும் அளவுக்கு உரிமை படைத்தவர்களாக இருந்தனர் என்பதற்கும் இது ஆதாரமாகும். 

வாள்முனையில் இஸ்லாம் பரப்ப்ப்பட்டிருந்தால் இஸ்லாமிய நாட்டின் தலை நகரத்தில் யூதர்கள் எப்படி இத்தனை செல்வாக்குடன் இருந்திருக்க முடியும்? 

 எங்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. அதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் நின்றோம். "அல்லாஹ்வின் தூதரே! இது யூதருடைய பிரேதம்'' என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "நீங்கள் பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்'' எனக் கூறினார்கள். நூல் : புகாரி 1311 

வாள்முனையில் மதமாற்றம் செய்வது தான் இஸ்லாத்தின் கொள்கை என்றால் எப்படி யூதர்கள் அங்கே இருந்திருப்பார்கள்? எப்படி அவர்கள் முஸ்லிம்களின் பள்ளிவாசல் வழியாக பிரேத்த்தை எடுத்துச் சென்றிருப்பார்கள்? அந்த பிரேதம் கடந்து செல்லும் வரை எழுந்து நின்று மரியாதை செய்த ஒருவர் எப்படி வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்பி இருப்பார்? 

இது போல் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் வாள்முனையில் இஸ்லாம் பரப்ப்ப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. இவ்வளவு ஆதாரங்கள் இருந்த போதும் அந்த நாத்திக நண்பர் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சியில் இருந்து இதற்கு மாற்றமான கருத்து தெரிகிறதே என்ற கேள்விக்கு இப்போது வருவோம். 

துல்கலஸா என்ற ஊரில் உள்ள் ஆலயத்தை தகர்ப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படை அனுப்பியது வாள் முனையில் பிற மதத்தினரை அடக்குவதற்கா என்றால் நிச்சயமாக இல்லை. எந்த மத்த்தினரும் மற்ற மதத்தினரின் ஆலயங்களை தகர்க்கக் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் கட்டளை. "எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன். 
திருக்குர்ஆன் 22:40 

அப்படியானால் அரபு தீபகற்பத்தில் எத்தனையோ வழிபாட்டுத் தலங்கள் இருந்தும் அவை ஒவ்வொன்றையும் தகர்ப்பதற்காக ஆட்களை அனுப்பாமல் இந்த ஒரு ஆலயத்தை மட்டும் தகர்க்க ஆள் அனுப்புகிறார்கள் என்றால் அதற்கு சிறப்பான காரணம் இருக்க வேண்டும். அந்தக் காரணம் என்ன என்பது அவர்கள் எடுத்துக் காட்டும் அந்தச் சம்பவத்திற்கு உள்ளேயே ஒளிந்து இருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு மதத்தினருக்கும் புனிதச் சின்னங்கள் உள்ளன. அவரவர் புனிதச் சின்ன்ங்களை அவரவர் பேணிக் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு மதத்தின் புனிதச் சின்னத்தைக் கேவலப்படுத்தும் வகையில் மற்றொரு மத்த்தினர் நடப்பதை யாரும் அனுமதிக்க மாட்டார்கள். முஸ்லிம்கள் காபா எனும் ஆலயத்தைப் புனிதச் சின்னமாக மதிப்பது அன்றும் இன்றும் உலகுக்கே தெரிந்த ஒன்று தான். முஸ்லிம் அல்லாதவர்கள் அது போல் ஒன்றை எழுப்பி அது தான் கஅபா என அறிவித்துக் கொண்டு அந்த ஆலயத்தில் இஸ்லாம் தடைசெய்துள்ள வழிபாட்டு முறைகளைச் செயல்படுத்தினால் அதில் விஷமத்தனமும் குழப்பம் விளைவித்தலும் தான் அடங்கி இருக்கும். சமீபத்தில் கூட மேற்கத்திய நாடு ஒன்றில் (நாட்டின் பெயர் நினைவில் இல்லை) காபா ஆலயம் போல் அமைக்க முயற்சித்து உலக முஸ்லிம்களின் எதிர்ப்பால அது கைவிடப்பட்ட்து. இது போன்ற வேலையைத் தான் துல்கலசா பகுதியினர் செய்தனர். அவர்கள் ஒரு ஆலயத்தை எழுப்பிக் கொண்டு அதை காபா என்று பெயரிட்டுக் கொண்டு காபாவில் செய்யக் கூடாத காரியங்களை அதில் அரங்கேற்றம் செய்தனர். இதனால் தான் அது நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு கடும் கவலையை ஏற்படுத்தியது. அதை அவ்ர்கள் காபா என்று அழைத்தனர் என்ற விபரம் அந்த செய்தியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது கூட பள்ளிவாசல் வடிவத்தில் கட்டடம் கட்டி அதற்கு பள்ளிவாசல் எனவும் பெயர் சூட்டிக் கொண்டு அதற்குள் சிலை வணக்கம் செய்தால் இந்து ஆட்சியாளர்களே அதை அப்புறப்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். அதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தனர். 

பொதுவாக முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்தில் கட்டாயப்படுத்தி இணைப்பது இஸ்லாத்தில் இல்லை என்பதை முன்னர் கண்டோம். ஆனாலும் பல போர்க்களங்களில் மட்டும் இப்படி சொன்னதாக ஆதாரங்கள் உள்ளன. இந்த சகோதரர் சுட்டிக்காட்டியது அல்லாமல் இன்னும் பல ஆதாரங்களும் உள்ளன. இஸ்லாத்தை ஒழிப்பதற்காக போருக்கு வரும் போதும் போரைத் தினிக்கும் போதும் எதிரிகள் தோற்று விட்டால் அவர்கள் தோற்று விட்ட்தை உறுதி செய்வதற்காக இஸ்லாத்தில் சேர்வதாக கூறினால் அவர்களை எதிரிகளாக பாவிக்காமல் விட்டு விடலாம் என்பதற்காகத் தான் இப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்ட்து. 

கம்யூனிசத்தை எதிர்த்து யுத்தம் நடந்தால் எதிரிகள் தோவியுறும் போது கயூனிசத்தை ஏற்கிறோம் என்று சொல்வது தான் தோல்வியை ஒப்புக் கொள்வதாக ஆகும். தோற்ற எதிரிகளை கொன்று போடாமல் உயிருடன் விட்டு வைப்பதற்காக எதை எதிர்த்து படை திரட்டி வந்து பல உயிர்கள் பலியாகவும் பொருளாதாரம் அழியவும் காரணமாக இருந்தாயோ அதையே ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொள் என்று சொல்ல கட்டளையிடுவதை யாரும் குறை கூற முடியாது. 
மற்ற ஆட்சியாளர்கள் செய்வது போல் கொன்று போடுவதை விட இது எத்தனையோ மடங்கு சிறந்தது. இது அல்லாத சந்தர்ப்பங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்தை ஏற்குமாறு இஸ்லாம் ஒரு போதும் கட்டாயப்படுத்தியது இல்லை. அந்த அடிப்படையில் தான் இஸ்லாத்தின் புனிதச் சின்னம் போல் உருவாக்கி இஸ்லாத்துக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்த அந்த ஊரார் மீது நபிகள் நாயகம் போர் செய்ய படை அனுப்பினார்கள். எதிரிகள் தோற்ற போது கொன்று குவிக்காலம் போர் தர்மப்படி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக சொல்லி விட்டு பிழைத்துப் போ என்று சொல்லப்பட்டது. போர் அல்லாத எந்தச் சந்தர்ப்பத்திலும் இது போல் நபிகள் நாயக நாயகம் நடந்து கொண்டதில்லை. 

இந்தியாவுடன் போர் செய்து ஒரு நாட்டுப்படை தோற்று விட்டால் அந்தப் படையினர் இதுவும் இந்திய நாடு தான் என்று ஒப்புக் கொள்ள வலியுறுத்தினால் அதை எப்படி குறை கூற முடியாதோ அப்படித்தான் இதையும் புரிந்து கொள்ள வேண்டும். இதன் பின்னரும் அந்த நாத்திக நண்பர் புரிந்து கொள்ள மறுத்தால் நாத்திகர்களும் நாத்திகர்களால் மதிக்கப்படும் மன்னர்களும் போர்க்களங்களில் எப்படி நடந்து கொண்டனர் என்ற கொடூர வரலாற்றுப் பக்கங்களை எடுத்துக் காட்டுங்கள். 

Published on: 12.03.2012. 14:39 Views: 584

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/islam_valal_parapapata_markama/
Copyright © www.onlinepj.com

கோடைகால பயிற்சி முகாம் _பல்லடம்






TNTJ திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை யின் சார்பாக பல்லடம்பள்ளி வளாகத்தில் கோடைகால பயிற்சி முகாம் 26.04.2013 முதல் 06.05.2013 வரை நடைபெற்றது.







ஆண்கள் மற்றும் பெண்கள் 62நபர்கள் பயிற்சி பெற்றனர்.





06.05.2013 அன்று தேர்வு நடத்தப்பட்டு அதில் கலந்து கொண்ட 62 நபர்களுக்கு மாநில பேச்சாளர்.சகோ.அஹமது கபீர் ,மற்றும் மாவட்ட துணை செயலாளர் சகோ.சேக் பரீத்  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாநில சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினர்.


கோடைகால பயிற்சி முகாம் -உடுமலை

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை யின் சார்பாக உடுமலை மஸ்ஜிதுத் தக்வா பள்ளி வளாகத்தில் கோடைகால பயிற்சி முகாம் 26.04.2013 முதல் 06.05.2013 வரை நடைபெற்றது.







ஆண்கள் மற்றும் பெண்கள் 68 நபர்கள் பயிற்சி பெற்றனர்.

06.05.2013 அன்று தேர்வு நடத்தப்பட்டு அதில் கலந்து கொண்ட 34 நபர்களுக்கு  மாநில சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.




Monday, 6 May 2013

பரிசுத்த ஆவி மூலம் பேச முடியுமா


வி.பாஸ்கர்

இயேசு சீடர்களுக்குக் காட்சி தந்த போது அவர் கூறியதாக மாற்கு எழுதியதை ஆதாரமாகக் கொண்டு கிறித்தவ போதகர்கள் பிசாசுகளை விரட்டுவதாகவும் நோய்களைப் போக்குவதாகவும் கூறி ஏமாற்றி வருகின்றனர். 

இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் இது தான். 

 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துர்த்துவார்கள்;. நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; 
மாற்கு 16:17 
இதை ஆதாரமாக்க் கொண்டு மனித இயல்புக்கு அப்பாற்பட்ட தொனியிலும் தோரணையிலும் உபதேசம் செய்கிறார்கள். அபோது தான் அதை இவர்கள் பேசாமல் பரிசுத்த ஆவி பேசுகிறது என்று அப்பாவி கிறித்தவர்கள் நம்புவார்களாம். 

இதற்காக இறங்ங்ங்ங்குவீராக என்று நவமான பாஷை பேசுகிறார்கள். ஆனால் இவர்கள் ஆதரமாக காட்டும் மேற்க்ண்ட வசனத்துக்கு அடுத்த வசனத்தில் உள்ளதை பரிசுத்த ஆவி மூலம் செய்து காட்டச் சொன்னால் ஓட்டம் பிடிப்பார்கள். 

இது தான் அடுத்த வசனம். சர்ப்பங்களை
எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். மாற்கு 16:18 

கொஞ்சம் சயனைட் விஷத்தை வாங்கிக் கொண்டு போய் கொடுத்து இதைக் குடித்து விட்டு உயிரோடு இருந்து காட்டுங்கள் என்று கேளுங்கள். மேலும் கட்டு விரியன் பாம்பை கையால் பிடிக்க சொல்லுங்கள். அப்போது பரிசுத்த ஆவி அசுத்த ஆவியாகி விடும். இவர்களைப் பற்றி நாம் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை. இயேசுவே சொன்னதாக பைபிள் கூறுவது தான் நம்முடைய கருத்து. 

தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காண வேண்டுமென்று செய்கிறார்கள். தங்கள் காப்பு நாடாக்களை அகலமாக்கி தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தை வெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள். கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார். நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்! கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். 

மத்தேயு 23:5 

அன்றியும் நீ ஜெபம் பண்ணும் போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம். மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம் பண்ணும் போது உன் அறை வீட்டிற்குள் பிரவேசித்து உன் கதவைப் பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு! அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்! அவர்கள் அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப் போல நீங்கள் செய்யாதிருங்கள்! உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். 

மத்தேயு 6:5-8


மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! மனுஷர் பிரவேசியாதபடி பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப் போடுகிறீர்கள்;. நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை. பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! பார்வைக்காக நீண்ட ஜெபம் பண்ணி விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுகிறீர்கள். இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். 

 மத்தேயு 23:13-15 


உங்கள் கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது வழிக்காகப் பையையாவது இரண்டு அங்கிகளையாவது பாதரட்சைகளையாவது தடியையாவது தேடி வைக்க வேண்டாம்! வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான். மத்தேயு 10:9,10 கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்!; அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள். உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். 

மத்தேயு 7:15 

மேலும் கிறித்தவ கொள்கையின் நிறுவனர் பவுலடிகள் நாங்கள் மத்த்தைப் பரப்ப பொய் சொல்வோம் என்று வாக்கு மூலம் கொடுத்த பின் வேறு என்ன ஆதாரம் வேண்டும்? 

அன்றியும் என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? 

முதலாம் கொரிந்தியர்-9:7

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/parisutha_avi_moolam_pesa_mudiyuma/
Copyright © www.onlinepj.com

"மறுமை" நல்லூர் கிளை பெண்கள் பயான் _05052013

TNTJ திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளைசார்பாக 05.05.2013 அன்று நல்லூர் V.S.A. நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "மறுமை" தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

"இஸ்லாம்" _M.S. நகர்கிளை பெண்கள் பயான் _05052013


 TNTJ திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக 05.05.2013 அன்று M.S. நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.பசீர் அவர்கள் "இஸ்லாம்"தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

M.S. நகர்கிளையில் அல்குர்ஆன்வகுப்பு


TNTJ திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக 05.05.2013 அன்று M.S. நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் குர்ஆன் வகுப்பு பாடம் நடத்தினார்கள்.

பிற மத சகோதரர். நந்தகுமார் அவர்களுக்கு கிருத்துவ விவாத dvd வழங்கி தாவா _04052013





TNTJ திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக 04.05.2013அன்று M.S. நகர்பகுதியை சேர்ந்த பிற மத சகோதரர். நந்தகுமார் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் வழங்கி மாமனிதர் நபிகள்நாயகம், இயேசுஇறைமகனா? புத்தகங்கள், கிருத்துவ விவாத dvd ஆகியவை வழங்கப்பட்டது.

மருத்துவ உதவி _கோம்பைதோட்டம் _04052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக 04.05.2013 அன்று கோம்பைதோட்டம் பகுதியை சார்ந்த சகோதரி.நூர்ஜஹான் அவர்களின் கணவருக்கு ஏற்பட்ட நோய் சிகிச்சை மருத்துவசெலவினங்களுக்கு ரூ.3282/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

Saturday, 4 May 2013

கோம்பைதோட்டம் கிளை சார்பாக புதிய நூலகம் 04052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக 04.05.2013 அன்று இஸ்லாத்தினை அதன் தூய முறையில் அறியவும், தங்களின் உலக மற்றும் மார்க்க அறிவை வளர்க்கவுமான  பல்வேறு இஸ்லாமிய புத்தகங்கள்,பொது அறிவு புத்தகங்கள்  கொண்ட புதிய நூலகம் ஆரம்பிக்கபட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தினர் வஹ்ஹாபிகளா?

தவ்ஹீத் ஜமாஅத்தினர் வஹ்ஹாபிகளா? 

அரஃபாத் 

கேடுகெட்ட துருக்கியர்கள் ஆளுகையின் கீழ் முஸ்லிம் நாடுகள் இருந்த போது மக்கா மதீனா நகரங்களும் துருக்கி ஷைத்தான்களின் ஆதிக்கத்தில் இருந்தன. (துருக்கியர்கள் உலக முஸ்லிம் நாடுகளுக்கு தலைமை வகித்ததால் நம்மையும் துருக்கர் எனச் சொல்லி பின்னர் துலுக்கர் என்று ஆனது.
இவர்கள் ஆட்சியில் இருந்த போது இப்போது நாகூரிலும் அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணைவத்தலும் கணக்கிலடங்காத பித்அத்களும் அறங்கேறின. 
பத்ருப்போர் நடந்த இடத்திலும் உஹதுப் போர் நடந்த இடத்திலும் நூற்றுக்கணக்கான தர்காக்கள் கட்டப்பட்டன. 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ஒட்டி அமைந்துள்ள மஸ்ஜிதுன்னபவியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வாகவே ஆக்கப்பட்டார்கள். அவர்களின் அடக்கத்தலம் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் சுவரிலும் டூம்களிலும் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் கவிதைகள் பதியப்பட்டன. 
எந்த அளவுக்கு மார்க்கத்தை நாசப்படுத்தி இருந்தார்கள் என்றால் கஅபாவைச் சுற்றி நான்கு முஸல்லாக்கள் உருவாக்கப்பட்டன. ஒரே நேரத்தில் ஷாபி, ஹனபி, மாலிகி, ஹன்பலி என நான்கு பிரிவினரும் தனித்தனியாக தொழுகை நட்த்துவார்கள். இதைப் பார்த்தால் உலகமே காரித்துப்பும் அளவுக்கு இருந்தது. இது பற்றிய ஆக்கத்தைக் காண http://onlinepj.com/kelvi_pathil/ithara_sattangal/kabavil_nangu_thozum_thalangal_irunthathaa/ ஹஜ் 

உம்ராவுக்கு வரும் பயணிகளிடம் கொடிய வரி விதிக்கப்பட்டது. 
கப்ரு வணக்கத்தை இஸ்லாத்தில் நுழைத்த இந்தக் கேடுகெட்டவர்களை எதிர்த்து இப்ன் சவூது படைதிரட்டி போரிட்டு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இவர் பெயரைக் குறிக்கும் வகையில் தான் சவூதி அரசாங்கம் எனப் பெயர் சூட்டப்பட்ட்து. 
இவரது போராட்டத்துக்கு பக்கபலமாக இருந்தவர் 
முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் என்ற மார்க்க அறிஞர். இவர் ஒரு பக்கம் அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதை எதிர்த்து பிரச்சாரம் செய்து துடிப்புள்ள இளைஞர்களை உருவாக்கி இருந்தார். 



அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் அநியாயத்தை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற உறுதி மொழியின் அடிப்படையில் துருக்கியர்களிடமிருந்து நாட்டை மீட்கும் படையுடன் இணைந்து செயலாற்றினார். 

துருக்கி ஷைத்தான்கள் விரட்டி அடிக்கப்பட்ட உடன் எல்லா த்ர்காக்களும் உடைத்து எறியப்பட்டன. தாயத்து தட்டு மோசடிக்கார்ர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். 
லாயிலாஹ இல்ல்ல்லாஹ் என்பதைக் கொடியில் பதித்து இனி எல்லாம் தவ்ஹீத் தான் என்று பிரகடனம் செய்யப்பட்ட்து. நான்கு முஸல்லாக்களும் உடைத்து நொறுக்கப்ப்ப்பட்டு ஒரே முஸல்லாவாக ஆக்கப்பட்டது. ஹஜ் உம்ராவுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்து செய்யப்பட்டன. 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தில் மட்டும் இன்னும் சில அனாச்சாரங்கள் மிச்சம் உள்ளன தர்காக்களை உடைத்து எறிந்ததாலும் புரோகிதர்களை ஒழித்துக் கட்டியதாலும் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் போதனை செய்ததாலும் இந்தக் கொள்கையைச் சொன்னவர்கள் வஹ்ஹாபிகள் என்று குறிப்பிடப்படுகின்றனர். ஆனால் இவரது பெயர் வஹ்ஹாப் அல்ல. அப்துல் வஹ்ஹாபும் அல்ல. இவரது தந்தையின் பெயர் தான் அப்துல் வஹ்ஹாப். இவரது பெயர் முஹம்மத் ஆகும். முஹம்மதீ என்று பெயர் சூட்டினால் அது நபிகள் நாயகத்தைக் குறித்து விடும் என்று அஞ்சிய கப்ரு வணங்கிக் கூட்டம் அவ்ரது தந்தையின் பெயரால் வஹ்ஹாபிகள் எனக் கூறி தனிமைப்படுத்த முயன்றனர். 
ஆனால் அவரது தந்தையின் பெயர் அப்துல் வஹ்ஹாப் தானே தவிர வஹ்ஹாப் அல்ல. வஹ்ஹாப் என்பது அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களில் ஒன்றாகும். முஹம்மதிகள் என்று சொன்னால் நபி வழி நடப்பவர்கள் என்று மக்கள் நினைப்பார்கள் என்று அஞ்சினார்கள். ஆனால் வஹ்ஹாபிகள் என்று அதைவிட அழகான பெயரை அவர்கள் வாயாலேயே அல்லாஹ் சொல்லவைத்து விட்டான். 
வஹ்ஹாப் என்றால் அல்லாஹ். வஹ்ஹாபி என்றால் அல்லாஹ்வின் கட்சியைச் சேர்ந்தவர் என்று பொருள். நாங்கள் கப்ரு வணங்கிகள் அல்ல என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது. 

துருக்கி ஷைத்தான்களை எதிர்த்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து மிகப் பெரும் தியாகம் செய்த மாவீர்ர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப். பெருமிதப்படும் வரலாறு சமைத்தவர். அவர் சந்தித்து போன்ற அடக்குமுறைகளையும் எதிர்ப்புகளையும் நாம் சந்தித்து இருந்தால் நம்மில் எத்தனை பேர் கடைசி வரை தாக்கு பிடித்திருப்போம் என்று சொல்ல முடியாது. 
இன்றைய சவூதி ஆட்சியாளர்கள் மீது நமக்கு வெறுப்பு வந்தாலும் இப்னு சவூதையும் இப்னு அப்துல் வஹ்ஹாபயும் ஏகத்துவவாதிகள் வெறுக்க முடியாது. அவர் அன்று துணிச்சலுடன் கப்ரு வணக்கத்தின் தீமைகளை எதிர்த்து தான் நமக்கெல்லாம் உத்வேகத்தை அளித்தது என்பதை மறந்து விட முடியாது. 
நாம் பெரிதும் மதிக்கும் நல்லறிஞர்களில் ஒருவர் தான் முஹ்ஹம்த் பின் அப்துல் வஹ்ஹாப். ஆனால் அவர் சொன்ன அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பது இதற்கு அர்த்தமில்லை. அவரது சில போதனைகள் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக உள்ளன. அதை நாம் சுட்டிக்காட்டி நிராகரித்துள்ளோம். 

 Published on: 03.05.2013. 03:10 Views: 1453

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/nallor_varalaru/thauheed_jamaaathinar_vahhabikala/
Copyright © www.onlinepj.com

பிறமதத்தினர் பள்ளிவாசலுக்குள் வரலாமா?


 ஏன் எங்களை பள்ளிவாசலுக்குள் அனுமதிப்பதில்லை என்று முஸ்லிமல்லாதவர்கள் கேள்வி கேட்கிறார்கள். இதற்கு தக்க பதில் கொடுத்தால் எனக்கு தாஃவா செய்வதற்கு பயன் உள்ளதாக இருக்கும் 

டி.ஆபிதீன் 

பதில் : 
முஸ்லிமல்லாதவர்கள் பள்ளிவாசலுக்குள் வரக்கூடாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் உள்ளது. இது தவறான கருத்தாகும். குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் இதைத் தெளிவாக அனுமதிக்கின்றன நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பள்ளியான மஸ்ஜிதுந் நபவீயில் முஸ்லிமல்லாதவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்க வைத்தார்கள். இதைப் பின்வரும் செய்திகளின் மூலம் அறியலாம்

462حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ سَمِعَ أَبَا هُرَيْرَةَ قَالَ بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ فَخَرَجَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَطْلِقُوا ثُمَامَةَ فَانْطَلَقَ إِلَى نَخْلٍ قَرِيبٍ مِنْ الْمَسْجِدِ فَاغْتَسَلَ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَقَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ رواه البخاري 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கிக் குதிரைப்படை பிரிவொன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த (யமாமா வாசிகளின் தலைவரான) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் (மக்கள்) கட்டிவைத்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்த (நாட்களில் முன்றாம் நாளின்) போது, "ஸுமாவை அவிழ்த்து விட்டு விடுங்கள்'' என்று கூறினார்கள். அவர் பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமானன பேரீச்சந்தோட்டத்திற்குச் சென்று குளித்தார். பிறகு பள்ளீவாசலுக்குள் வந்து "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி மொழிகிறேன்'' என்றார். 

நூல் :புகாரி (462) 

இணைவைப்புக் கொள்கையில் இருந்த ஸுமாமா பின் உஸால் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நாட்கள் பள்ளிவாசலில் தான் தங்க வைத்துள்ளார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது. 

4854حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثُونِي عَنْ الزُّهْرِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ فَلَمَّا بَلَغَ هَذِهِ الْآيَةَ أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمْ الْخَالِقُونَ أَمْ خَلَقُوا السَّمَوَاتِ وَالْأَرْضَ بَلْ لَا يُوقِنُونَ أَمْ عِنْدَهُمْ خَزَائِنُ رَبِّكَ أَمْ هُمْ الْمُسَيْطِرُونَ قَالَ كَادَ قَلْبِي أَنْ يَطِيرَ قَالَ سُفْيَانُ فَأَمَّا أَنَا فَإِنَّمَا سَمِعْتُ الزُّهْرِيَّ يُحَدِّثُ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ وَلَمْ أَسْمَعْهُ زَادَ الَّذِي قَالُوا لِي رواه البخاري 

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் "அத்தூர்' எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். "(படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்து விட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; (உண்மை என்னவெனில்,) இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. உங்கள் இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துபவர்களா?'' எனும் இந்த (52:35-37ஆகிய) வசனங்களை நபி அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்துவிடுமளவுக்குப் போய்விட்டது. 

நூல் : புகாரி (4854) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் மஃக்ரிப் தொழுகை நடத்தியபோது அங்கு அவர்கள் ஓதியதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் செவியேற்றார்கள். இது மேற்கண்ட புகாரியின் அறிவிப்பில் உள்ளது இந்தச் சமயத்தில் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் முஸ்லிமாக இருக்கவில்லை. இணைவைப்புக் கொள்கையில் இருந்தார்கள். இது கூடுதலாக முஸ்னது ஹுமைதி என்ற நூலில் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது 

مسند الحميدي - أحاديث جبير بن مطعم رضي الله عنه حديث : ‏539‏24954 حدثنا الحميدي قال : ثنا سفيان قال سمعت الزهري يحدث عن محمد بن جبير بن مطعم ، عن أبيه أنه " سمع رسول الله صلى الله عليه وسلم يقرأ في المغرب بالطور " قال سفيان : قالوا في هذا الحديث : إن جبيرا قال : " سمعتها من النبي صلى الله عليه وسلم وأنا مشرك فكاد قلبي أن يطير " ولم يقله لنا الزهري * 

நான் இணைவைப்பவனாக இருக்கும் நிலையில் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றேன். நூல் : முஸ்னது ஹுமைதி எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இணைவைப்பவர்கள் பள்ளிக்குள் வரும் நிலை இருந்துள்ளது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்யாமல் அனுமதித்து இருந்தார்கள். சகீஃப் குலத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாக பேசி இஸ்லாத்தில் இணைந்து கொள்வதற்காக வந்தனர். இன்னும் இஸ்லாத்தை ஏற்றிராத நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களை பள்ளிவாசலில் தங்க வைத்தார்கள். 

3917أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ النُّعْمَانِ بْنِ سَالِمٍ قَالَ سَمِعْتُ أَوْسًا يَقُولُ أَتَيْتُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَفْدِ ثَقِيفٍ فَكُنْتُ مَعَهُ فِي قُبَّةٍ فَنَامَ مَنْ كَانَ فِي الْقُبَّةِ غَيْرِي وَغَيْرُهُ فَجَاءَ رَجُلٌ فَسَارَّهُ فَقَالَ اذْهَبْ فَاقْتُلْهُ فَقَالَ أَلَيْسَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ قَالَ يَشْهَدُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَرْهُ ثُمَّ قَالَ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَإِذَا قَالُوهَا حَرُمَتْ دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ إِلَّا بِحَقِّهَا قَالَ مُحَمَّدٌ فَقُلْتُ لِشُعْبَةَ أَلَيْسَ فِي الْحَدِيثِ أَلَيْسَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ قَالَ أَظُنُّهَا مَعَهَا وَلَا أَدْرِي رواه النسائي 

நுஃமான் பின் சாலிம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : சகீஃப் கூட்டதாருடன் நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வந்தேன். ஒரு கூடாரத்தில் நான் அவர்களுடன் உறங்கினேன். நூல் : நஸாயீ (3917) மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலுக்கு மட்டுமே இணைவைப்பாளர்கள் வரக்கூடாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْمُشْرِكُونَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هَذَا وَإِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيكُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ إِنْ شَاءَ إِنَّ اللَّهَ عَلِيمٌ حَكِيمٌ (28)9 

நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது. அல்குர்ஆன் (9 : 28) 

இதிலிருந்து மஸ்ஜிதுல் ஹராம் அல்லாத மற்ற எந்தப் பள்ளிகளானாலும் இணைவைப்பாளர்கள் உள்ளே செல்வது குற்றமில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. முஸ்லிம் அல்லாதவர்கள் பள்ளிவாசலுக்குள் வரும் போது நல்ல விசயங்களைப் பார்க்கும் வாய்ப்பும் நல்ல விசயங்களைக் கேட்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கின்றது. இதன் மூலம் அவர்கள் முஸ்லிமாகவும் மாறலாம். எனவே மார்க்கம் அனுமதித்த இந்தக் காரியத்தை யாரும் தடை செய்யக் கூடாது 

மேலும் விபரத்துக்கு இதையும் பார்க்கவும். 

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/mulimalathavr_palliku_varala

ma/

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/
Copyright © www.onlinepj.com

தாராபுரம் கிளையின் தன்னார்வ இரத்த தான சேவையை பாராட்டி அரசு விருதுகள் _03052013

தமிழக அரசு சார்பில் 03.05.2013 அன்று திருப்பூரில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்த தான நாள்விழாவில்  TNTJ திருப்பூர் மாவட்ட தாராபுரம் கிளையின் தன்னார்வ இரத்த தான சேவையை பாராட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள்  TNTJ திருப்பூர் மாவட்டதிற்கு 2 இரத்த தான விருதுகள்    வழங்கினார்.

Friday, 3 May 2013

TNTJ திருப்பூர் மாவட்டஇரத்த தான சேவையை பாராட்டி அரசின் இரத்த தான விருதுகள் _03052013





தமிழக அரசு சார்பில் 03.05.2013 அன்று திருப்பூரில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்த தான நாள் விழாவில்  TNTJ திருப்பூர் மாவட்ட தன்னார்வ இரத்த தான சேவையை பாராட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள்  TNTJ திருப்பூர் மாவட்டதிற்கு 2 இரத்த தான விருதுகள்    வழங்கினார்.


Thursday, 2 May 2013

கடவுள் படைப்பில் ஏற்ற தாழ்வு ஏன் _ Copyright © www.onlinepj.com

அல்லாஹ் ஏன் பிறப்பால் குருடர்கள், செவிடர்கள் ஊமைகள் கை கால் ஊனமுற்றவர்கள் இப்படி ஏன் படைத்துள்ளான் தயவு செய்து விளக்குங்கள். 

நூருல் அமீன் 



பதில் : நாம் எழுதிய
அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இக்கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. 
அதையே உங்கள் கேள்விக்குக்கும் பதிலாக அளிக்கிறோம். 

மனிதர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டது போன்ற குறைகள் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. 
ஆனா
ல் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன. 
வறுமை, அழகின்மை, உடல் வலுவின்மை, குழந்தைப் பேறு இன்மை, வலிமையானவர்களின் அடக்குமுறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத் துணை, தறுதலைப் பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத் திறன் குறைவு, இப்படி ஆயிரமாயிரம் பாதகங்கள் உள்ளன. 
நீங்கள் நோயை மட்டும் பாதகமாகக் கருதுகிறீர்கள்! 
மேலே சுட்டிக்காட்டியது போன்ற 
ஏதேனும் பாதகமான அம்சங்கள் சிலவற்றைப் பெற்றே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். 
எந்தப் பாதகமும் இல்லாத ஒருவரும் உலகில் கிடையாது. 
நமக்கு இறைவன் வறுமை மற்றும் நோயைக் கொடுத்திருக்கலாம். 
ஆனால் செல்வமும், ஆரோக்கியமும் உள்ளவருக்கு வேறு ஏதேனும் குறைகள் இருக்கும். 
அவருக்கு பொருத்தமில்லாத மனைவியையோ, மக்களையோ இறைவன் கொடுத்திருப்பான். 
அல்லது வேறு ஏதேனும் குறைகளைக் கொடுத்திருப்பான். 
நீங்கள் நோயை நினைத்துக் கவலைப்படுவது போலவே அவர் குடும்பத்தை நினைத்துக் கவலைப்படுவார். 
மனதை உலுக்குகிற அழுத்தம் இல்லாததால் நீங்கள் படுத்தவுடன் தூங்கி விடுவீர்கள். 

நீங்கள் யாரைப் பார்த்து பொறாமைப் படுகிறீர்களோ அவரால் பஞ்சு மெத்தையிலும் தூங்க முடியாது. 
இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமானால் குறைகளையும், நிறைகளையும் பலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். 
எல்லோருக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் யாரும் வேலைக்குப் போக மாட்டோம். நமது நிலத்தை நாமே உழுது பயிரிட சக்தி பெறவும் மாட்டோம். அனைவரும் சோத்துக்கு இல்லாமல் செத்து விடுவோம்.
 எல்லோரிடமும் கோடி ரூபாய் இருந்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அனைவரும் அழிவது தான் நடக்கும். இதனால் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறையையும், நிறையையும் வழங்கி இறைவன் கருணை புரிந்துள்ளான். 
நோயாளியைக் கொண்டு மருத்துவரின் வாழ்க்கை ஓடுகிறது. 
மருத்துவரின் மூலம் வியாபாரியின் வாழ்க்கை ஓடுகிறது. 
வியாபாரியின் மூலம் விவசாயி, மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கை ஓடுகிறது. 
இத்தகைய சங்கிலித் தொடர் மூலம் உலகம் இயங்குவதற்காகத் தான் இறைவன் இவ்வாறு செய்துள்ளான். 
எத்தனையோ செல்வந்தர்கள் தினம் இரண்டு இட்லி தான் சாப்பிட வேண்டும்; மாமிசம், எண்ணெய் தொடக்கூடாது என்று மருத்துவர்களால் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். 
கோடி கோடியாக இருந்தும் வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடிவதில்லை. கிடைக்கிற அனைத்தையும் சாப்பிடக்கூடிய நிலையில் உள்ள ஏழை, இந்த வகையில் அவனை விடச் சிறந்தவன் இல்லையா? 
இது போல் வறுமையும், நோயும் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள நிறைகளை எண்ணிப் பார்த்தால் நிச்சயமாக நோயற்றவர்களுக்குக் கிடைக்காத ஏதோ ஒரு வசதி, வாய்ப்பு, பாக்கியம் தங்களுக்குக் கிடைத்திருப்பதை உணருவார்கள். 
அப்போது இறைவன் எத்தகைய கருணைக் கடல் என்பதை சந்தேகமற அறிவார்கள். 
மேலும் விபரமறிய இந்த இணைப்பை க்ளிக் செய்து வாசிக்கவும்

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/kadavul_irunthal_etrathazvu_en/ http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/pirachaniku_kadavul_thane_karanam/ http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/manithanin_thunbathuku_kadavul_thane_karanam/ http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/maru_piravi_unda/

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/kadavul_padaipil_etrathazvu_en/
Copyright © www.onlinepj.com

"வீட்டுவாடகையும், மனிதநேயமும்" _கோம்பைதோட்டம்கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  கோம்பைதோட்டம் கிளை சார்பாக 
 29.04.2013 அன்று திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

சகோ.பக்கீர்முஹம்மதுஅல்தாபி அவர்கள் "ஆடம்பரதிருமணமும், நபிவழியும்" எனும் தலைப்பிலும்  
சகோ.அஹமது கபீர் அவர்கள் "வீட்டுவாடகையும், மனிதநேயமும்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.
ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிற மத 6 வயது சிறுவனுக்கு மருத்துவ உதவி _ M.S. நகர்கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக 29.04.2013 அன்று M.S. நகர்பகுதியை சேர்ந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிற மத 6 வயது சிறுவனின்    மருத்துவ சிகிச்சை செலவினகளுக்காக ரூ.7002 /= வசூல் செய்து  மருத்துவ உதவி வழங்கப்பட்டது 

Wednesday, 1 May 2013

புது நகரம் பள்ளிகட்டுமான பணிகளுக்காக நிதியுதவி -உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக26.04.2013 அன்று கேரளா மாநிலம் புது நகரம்  பள்ளிகட்டுமான பணிகளுக்காக ரு.3,350/= ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டது

ஆசிட் வீச்சைத் தடுக்க என்ன வழி?


காதலிக்க மறுக்கும் பெண்மீது ஆசிட் வீசுவதைத் தடுக்க ஆசிட் கிடைக்காத வகையில் சட்டம் போடுவதும், ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதும் தீர்வாகுமா? 

அப்துல்லாஹ், கீழக்கரை 

காதலிக்கவில்லை என்ற கோபம்தான் இதற்குக் காரணம். இந்தக் கோபத்தை வெளிப்படுத்த ஒருவன் ஆசிட்டைப் பயன்படுத்துகிறான். ஆசிட் கிடைக்காவிட்டால் அரிவாளைப் பயன்படுத்துவான். அல்லது வேறு எத்தனையோ சாதனங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவான். எனவே ஆசிட் கிடைக்காமல் செய்வது இதற்கான தீர்வாகாது. 

ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும்
அவர்கள் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். 

குறிப்பிட்ட மாடலில் ஒரு சட்டை வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அது கிடைக்காவிட்டால், அல்லது கிடைத்து விலை கட்டுப்படியாகாவிட்டால், என்ன செய்கிறோம்? அதை மறந்துவிட்டு கிடைப்பதை வாங்கி அணிந்து கொள்கிறோம். 

குறிப்பிட்ட உணவுக்கு ஆசைப்படுகிறோம். அந்த உணவு கிடைக்கவில்லை எனில், அதையே ஜெபம் செய்துகொண்டு செத்துப் போகமாட்டோம். அது கிடைக்காவிட்டால் வேறு உணவைச் சாப்பிட்டுக் கொள்கிறோம். 

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால், மருத்துவக் கல்லூரிகளைக் கொளுத்துவோமா? வேறு துறையைத்தான் தேர்வு செய்வோம். இதுதான் எதார்த்தம். 

இதுதான் வேண்டும். இது தவிர வேறு எதுவும் வேண்டாம் என்பது மனநோய். 

அதுபோல் ஒரு ஆணுக்குப் பெண் தேவை. பெண்ணிற்கும் ஆண் தேவை. ஒருவனை அல்லது ஒருத்தியை விரும்புகிறோம். அவள் இன்னொருவன் மனைவியாக இருக்கலாம். இன்னொருவனை விரும்புபவளாக இருக்கலாம். அல்லது நம்மை அவளுக்குப் பிடிக்காது இருக்கலாம். அதன் காரணமாக அவள் நம்மை நிராகரித்துவிட்டால், வேறு ஒருவரைத் தேடிக் கொண்டால், அதுதான் எதார்த்தம். 

அவன்தான் வேண்டும் - அவள்தான் வேண்டும் என்று அதையே நினைத்துக் கொண்டு இருந்தால், அது மனநோய். இந்த மனநோய்தான் ஆசிட் வீச்சிற்கும் தன்னைப் பிடிக்காதவரை அழித்தொழிக்கவும் காரணம். 


இந்த மனநோயை அறிவு ஜீவிகள்(?), ஊடகங்கள் போன்ற விஷக்கிருமிகள் காதல் என்ற பெயரில் பரப்புகின்றன. இவன்தான் வேண்டும் - இவள்தான் வேண்டும் என்று உருகுவதுதான் சிறந்தது. அதுதான் தெய்வீகக் காதல் என்றெல்லாம் மக்களுக்கு மனச் சிதைவை இவர்கள் தான் ஏற்படுத்துகின்றனர். 

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிலை மாறாதவரை இதுபோன்ற எழுத்தாளர்கள் ஊடகத்துறையினரில் உள்ள விஷக்கிருமிகளை அடக்கி ஒடுக்க சட்டம் போடாதவரை இதுபோன்ற சம்பவங்களை ஒருக்காலும் தடுக்கவே முடியாது. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புவதும், ஒரு பெண் ஒரு ஆணை விரும்புவதும் தான் காதல். விருப்பம் நிறைவேறாவிட்டாலும் நான் அவளையே/அவனையே நினைத்து உருகுவேன் என்பது காதல் அல்ல - அது மனநோய்தான். தங்களது மகன் அல்லது மகளுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டு, அதையே நினைத்து உருகிக் கொண்டு இருந்தால், ஆகா தெய்வீகக் காதல் என்று ஊடகங்களின் முன்னாள் பாராட்டிக் கொண்டா இருப்பார்கள்?

தான் விரும்புவதையே மக்களுக்கும் விரும்புபவன்தான் அறிவாளி. 

தொலைக்காட்சியில் முகம் காட்ட வாய்ப்புக் கிடைக்கிறது என்பதற்காக பேசுபவன் அறிவாளி இல்லை என்ற விழிப்புணர்வை எற்படுத்தினால், இதுபோன்ற செயல்களை ஓரளவு தடுக்கமுடியாது 

(குறிப்பு :ஆசிட் வீசியவன் அவள் தனக்கு கேடு செய்தால் என்பதற்காகவோ தனது சொத்தைப் பறித்துக் கொண்டால் என்பதற்காகவோ ஆசிட் வீசவில்லை. தனக்கு அவள் கிடைக்கவில்லை என்ற வெற்தான் காரணம். அந்த வெறியை அவனுக்கு ஊட்டியவர்கள் அறிவு ஜீவிகள் எனும் விஷக்கிருமிகள் தான்.)

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/unarvuweekly/acid_veechai_thadukka_ennavazi/
Copyright © www.onlinepj.com

பெங்களூர் குண்டுவெடிப்பில் முஸ்லிம்கள் கைது சரியா?


பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன? 
இது தவறு என்றால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நடவடிக்கை என்ன? 

.....மசூது, கடையநல்லூர்......

எவ்வித அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் பொய்யாகக் கைது செய்துள்ளனர் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை. 
அத்துடன் குமரி மாவட்ட பா.ஜ.க. பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கிலும் இவ்வாறு பொய்யாகக் கைது செய்துள்ளனர். தமிழக அரசும், கர்நாடக பா.ஜ.க. அரசும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சு நடத்தி முஸ்லிம்கள் சிலரைக் கைது செய்தால், தேர்தலில் கைகொடுக்கும் என்று கள்ள ஒப்பந்தம் செய்திருப்பார்களோ என்று நினைக்கும் அளவுக்கு இந்தக் கைதுகள் அமைந்துள்ளன. 
இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஒன்றும் செய்யாமல் உள்ளே போவதைவிட எதையாவது செய்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணத்தை விதைக்கும் ...அநியாயமாகவே இதை நாம் காண்கிறோம்.
இதில் எள்முனையளவு கூட உண்மை இல்லை என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நடுநிலையாளருக்கும் தெரிகிறது. 
ஆனால் நாம் ஏன் இதற்காகப் போராட்டம் நடத்தவில்லை என்பதற்கு முன்னரே நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். சில ஆண்டுகளுக்கு முன் சிறைவாசிகளுக்காக நாம் குரல் கொடுத்த போது எங்களை வைத்து அரசியல் பண்ண வேண்டாம் என்று அவர்கள் துண்டுப் பிரசுரம் வெளியிட்டு நாடெங்கும் பரப்பினார்கள். அவர்களை வைத்து தவ்ஹீத் ஜமாஅத் அரசியல் நடத்தவில்லை. சிறைவாசிகள் பெயரைச் சொல்லி நாம் எந்த வசூலும் செய்வதில்லை. சிறைவாசிகளுக்கு உதவுகிறோம் என்பதைக்கூறி நாம் ஆள் சேர்ப்பதும் இல்லை. ஏகத்துவக் கொள்கையை மட்டுமே முன் வைத்துதான் நாம் மக்களை வென்றெடுத்து வருகிறோம். அப்படி இருந்தும் அவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று பகிரங்கமாக அறிவித்தனர். அப்போது முதல் ஏற்கனவே வழக்கில் உள்ளவர்களுக்காக போராட்டம் எதுவும் நடத்துவதில்லை. 
ஆனால் இதுபோன்ற அக்கிரமங்களை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம். அரசியல் செய்கிறோம் என்று சொல்லமுடியாத வகையில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் மனுக்கள்அளித்துள்ளோம்.  அந்த அடிப்படையில்தான் இதை இப்போது கடுமையாகக் கண்டிக்கவும் செய்கிறோம். 

கடந்த காலத்தில் தடா என்ற பொய் வழக்கை ஆரம்பித்து வைத்த தமிழக அரசின் நடவடிக்கைதான் குண்டு வெடிப்பு வரை கொண்டு போய் சேர்த்தது. அதே வழிமுறையில் செல்ல வேண்டாம். சந்தேகத்தின் பெயரில் இது போன்ற கைது நடவடிக்கை வேண்டாம். இது மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/unarvuweekly/bengalur_kunduvedippu_muslimkal_kaithu/
Copyright © www.onlinepj.com

"உலக அற்புதம் எது? " _வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை சார்பில் 
27.04.2013அன்று   வெங்கடேஸ்வராநகர் 
மதரசுதுத் தக்வா வில் பெண்கள்பயான் நடைபெற்றது.
அதில் "உலக அற்புதம் எது? " எனும் தலைப்பில் சகோ.ஷாஹிது ஒலி   அவர்கள் உரை நிகழ்த்தினார்.

Tuesday, 30 April 2013

கோடைகால பயிற்சி _ உடுமலை






TNTJ 
திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை யின் சார்பாக உடுமலை மஸ்ஜிதுத் தக்வா பள்ளி வளாகத்தில் கோடைகால பயிற்சி முகாம் 26.04.2013 முதல் நடைபெற்றுவருகிறது.


ஆண்கள் மற்றும் பெண்கள் 65 நபர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

"பித்-அத்" தாராபுரம் கிளை தெருமுனைப்பிரச்சாரம் _29042013





TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக 29.04.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் சதாம் அவர்கள் "பித்-அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது