Saturday 4 March 2017

மாநில சுற்றரிக்கை

தலைமை சுற்றறிக்கை : 67/2017

மாவட்டத் தலைவர்  &  நிர்வாகிகளுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

சமூக வலைதளங்களை சரியாகப் பயன்படுத்துவோம்.

சமூக வலைதளங்களின் தாக்கம் மிகைத்திருக்கிற காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். 
பரப்புரைக்குப் பயன்படும் இச்சாதனத்தில் நன்மைக்கு நிகராக தீமைகளும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே அவற்றை மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும்.
குறிப்பாக பொறுப்பில் இருப்பவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

எத்தனை செய்திகளைப் பதிவிட்டோம் என்பதை விட, அதன் விளைவுகள் குறித்து சிந்திந்து பதிவிடுவதே சரியாக இருக்கும்.
அதிலும் நமது ஜமாஅத் குர்ஆன், ஹதீஸ் எனும் கொள்கை சார்ந்த அமைப்பாகும். நம் பதிவுகள் எதுவும் நமது கொள்கைக்கோ, அமைப்புக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இருந்து விடக் கூடாது.

பரபரப்பான அரசியல் சூழலில், பிரச்சனைகள், போராட்டங்கள் நடக்கும் வேளையில் சிலர் தனக்குத் தோன்றியதைப் பதிவிட்டு விடுகின்றனர். பொறுப்பில் உள்ளவர்கள் இவ்வாறு நடந்தால் மக்களுக்குக் குழப்பம் ஏற்படும்.  தேவையற்ற கேள்விகளையும், விமர்சனங்களையும் ஜமாஅத் சந்திக்க வேண்டியது வரும்.
எனவே சமூக வலைதளங்களை பயன்படுத்தும் நிர்வாகிகள், பேச்சாளர்கள், உறுப்பினர்கள் கவனத்தோடு செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

M.முஹம்மது யூசுஃப்

பொதுச் செயலாளர்