Sunday 3 May 2015

இசை ஹராம் - காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 3/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் இசை ஹராம் புகாரி5590  எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

 5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார்  “அபூ ஆமிர்(ரலி)“ அல்லது “அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)“ என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை
. (அவர்கள் கூறினார்)  நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:  என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், “நாளை எங்களிடம் வா“ என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 74. குடிபானங்கள்