Saturday 4 April 2015

இறைமறுப்பாளர்களும், நயவஞ்சகர்களும் _காலேஜ்ரோடுகிளை பயான்

திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடுகிளை சார்பாக 04.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மதுசலீம் அவர்கள்  "இறை மறுப்பாளர்களும், நயவஞ்சகர்களும்(2:6-15)" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...


2: 6. (ஏகஇறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
7. அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.
439
8. "அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பினோம்'' எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர்.
9. அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே அவர்கள் ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.
10. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
11. "பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும்போது "நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.
12. கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்.
13. "இந்த மக்கள் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும்போது, "இம்மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நம்புவோமா?'' எனக் கேட்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்களே மூடர்கள். ஆயினும் அறிந்து கொள்ள மாட்டார்கள்.
14. நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும்போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன்5 தனித்திருக்கும்போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.
15. அல்லாஹ்வோ அவர்களைக் கேலி செய்கிறான்.6 அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுகிறான்.