Wednesday 29 April 2015

பாதுக்காக்கப்பட்ட ஏடு _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு



 

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 29.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 157. பாதுக்காக்கப்பட்ட ஏடு எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

157. பாதுகாக்கப்பட்ட ஏடு என்றால் என்ன

உலகைப் படைப்பதற்கு முன் அல்லாஹ் ஒரு ஏட்டைத் தயாரித்து
அதில் உலகம் அழியும் காலம் வரை நடக்க இருக்கும் அனைத்தையும் தனது கட்டளையால் பதிவு செய்தான். உலகில் எது நடந்தாலும் அந்தப் பதிவேட்டில் எழுதப்பட்டு இருக்கும். ஒரு இலை உதிர்ந்தாலும் அது எந்த நேரத்தில் விழும் என்ற விபரம் அந்தப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இந்த ஏடு லவ்ஹூல் மஹ்ஃபூல் என்று சொல்லப்படுகிறது.
"பதிவுப் புத்தகம்' "பாதுகாக்கப்பட்ட ஏடு' "மறைக்கப்பட்ட ஏடு' "தெளிவான ஏடு' என்ற வார்த்தைகளாலும் இந்தப் பதிவுப்புத்தகம் குறிப்பிடப்படுகிறது.
ஒருமனிதன் நல்லவனாக வாழ்வதும் கெட்டவனாக வாழ்வதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடிதான் நடக்கிறது. ஒருவன் பிறப்பதும் மரணிப்பதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன. ஒருவன் செல்வந்தனாவதும் ஏழையாவதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன.
6:38, 6:59, 9:36, 10:61, 11:6, 13:39, 17:58, 20:52, 22:70, 23:62, 27:75, 30:56, 33:6, 34:3, 35:11, 36:12, 43:4, 50:4, 54:43, 56:78, 57:22, 85:22 ஆகிய வசனங்கள் இது குறித்து பேசும் வசனங்களாகும்.
திருக்குர்ஆன் கூட அவனது பதிவேட்டிலிருந்து தான் எடுத்து முஹம்மது நபிக்கு அருளப்பட்டது. (பார்க்க: திருக்குர்ஆன் 85:21-22, 56:77-78)
எல்லாமே பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன என்றால் மனிதனுக்கு சுதந்திரம் கிடையாதா? ஒருவன் கெட்டவனாக இருப்பதும் விதிப்பலகையில் எழுதியபடிதான் நடக்கின்றன என்றால் அவனைத் தண்டிப்பது என்ன நியாயம் என்று இதில் கேள்விகள் எழுகின்றன.
இதற்கான விளக்கத்தை அறிந்து கொள்ள 289வது குறிப்பை வாசிக்கவும்.