Thursday 9 March 2017

சமுதாயப்பணி - அலங்கியம் கிளை

 திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிராமம் பொதுமக்களிடம் கேஸ் சிலிடர்களுக்கு தங்களிடம் பில்லுக்கு் மேலாக ரூ-50பது, ரூ-70வது ரூ-30பது இதுபோல் கூடுதல் வசூல் செய்து வருகிறார்கள், இதை கண்டித்து பொதுமக்கள் பலர் (TNTJ) தமிழ்நாடு தவ்ஹித்  ஜமாஅத் அலங்கியம் கிளைக்கு  பலர் புகார் மனுவாக அளித்தார்கள். அதன் அடிப்படையில் மாவட்ட வழிகாட்டுதலில்  ஆயில் தலைமை அலுவகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் தாராபுரம் இன்டன் கேஸ் வினியோக உரிமையாளர்கள் கிளை நிர்வாகிகளை சந்தித்து இனி கூடுதல் தொகை வாங்க மாட்டார்கள் என்று உறுதியளித்தார்கள், கிளை நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி இதை அலங்கியம் வாழ் மக்கள் மத்தியில் தெரிவிக்கும் படி கேட்டிருந்தோம் இந்த கோரிக்கையை ஏற்று கடந்ந ஞாயிறு 05-03-17 அன்று அலங்கியம் ஐடியல் பள்ளி வளாகத்தில் மாலை 5.00மணி அளவில் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் கேஸ் சம்மந்தமான சந்தேகங்களையும் மக்கள் கேட்டறிந்தனர் அதில் உள்ள விதிமுறைகள், பாதுகாப்பு,பாலிஸி அனைத்தியும் அதன் உரிமையாளர் நல்ல முறையில் மக்களுக்கு புரியும்படி விளக்கம் அளித்தார்கள். ஏதேனும் புகார் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் இனி பில்லுக்கு மேல் கூடுதல் தொகை கொடுக்ககூடாது என்றும் மக்கள் தான் பில்லுக்கு மேல் தொகை டெலிவரி பாய்ஸ் குடுத்து தவறான வழி காட்டி விட்டார்கள் என்றும் குற்றம் சாட்டினார்கள், இறுதியில் இந்த மீட்டிங்  மக்கள் மத்தியில் திருப்தி ஏற்பட்டது. குடுத்த புகாருக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது என்றும் இன்டியன் ஆயில் நிருவனத்துக்கு நன்றி மனு அளிக்கப் பட்டது. தாராபுரம் இன்டன் கேஸ் உரிமையாளர்கள் இது சம்மந்தமாக பொது மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது என்றாரகள் அவருக்கும் அலங்கியம் கிளை சார்பாக நன்றி தெறிவிக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் திருகுர்ஆன், முஸ்லிம் தீவிரவாதிகள்??? மற்றும் பொது சிவில் சட்டம் புத்தகம் வழங்கி இஸலாம் குறித்து தாவா செய்யப் பட்டது. 










இஸ்லாம் என்பது பிறர் நலம் நாடடுவது என்று நபி ஸல் அவர்கள் சொன்னதை இந்த சம்பவம் மூலம் மக்களுக்கு எடுத்துறைக்கப் பட்டது. புகழ் அனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே.