Monday 16 January 2017

மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் - கோம்பைதோட்டம் கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக அல் அமீன் பள்ளியில் நேற்று "மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் " சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..

































காலை 7.30 மணி முதலே மக்கள் வந்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொண்டனர். ஈரோடு சுதா மருத்துவமனை சார்பாக 20பேர் கொண்ட மருத்துவக் குழு உரிய உபகரணங்களுடன் காலை 8 மணிக்கே வந்துவிட்டார்கள். மதியம் 1 மணி வரை பெயர் பதிவு நடைபெற்றது. மொத்தம் 333 நபர்கள் பெயர் பதிவு செய்து சிகிச்சை பெற்றுக்கொண்டனர். இதில் BP, Sugar, E.C.G, ECHO பரிசோதனை செய்து, இறுதியில் மருத்துவரின் ஆலோசனையையும் பெற்று திருப்திகரமாக சென்றனர்.

அனைத்துவிதமான டெஸ்ட்களையும் முடித்துவிட்டு, மருத்துவர் "உங்களுக்கு ஒன்றுமில்லை எல்லாம் நார்மல் "என்ற சொல்லைக் கேட்டு முக மகிழ்ச்சியுடன் செல்லும் மக்களை காண முடிந்தது. அதே சமயம் சில நபர்களுக்கு அறுவை சிகிச்சை  செய்துகொள்ளும் நிலையில் உள்ளதையும், அதை காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்துதருகிறோம் என்ற மருத்துவரின் வார்த்தையில் ஆறுதல் அடைந்து நம்பிக்கையுடன் சென்ற மக்களையும் காண முடிந்தது.ஏழு மாத குழந்தைக்குகூட இதயத்தில் கோளாறு என்று வந்திருந்த தம்பதியைப் பார்க்கும் போது மனம் கணத்தது. இவ்வாறாக பதிவு செய்யப்பட்ட அனைத்து நபர்களுக்கும் சிகிச்சை முடிப்பதற்கு சரியாக மாலை 6.30 மணி ஆகிவிட்டது.

அதன் பிறகு மருத்துவ குழுவிலுள்ள அனைவரையும் அமர வைத்து,இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாம் என்ன சொல்கிறது? இந்த உலகத்தில் இஸ்லாம் சமுதாயத்தை எந்த அளவு  "தீவிரவாதிகள்" என முத்திரையிட்டு தனிமைபடுத்தியிருக்கிறார்கள் சமூக விரோதிகளும், ஊடகங்களும் என்பதையும் அழகான முறையில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் குழுவிலுள்ள அனைவருக்கும் தமிழ் குர்ஆனும், முஸ்லிம் தீவிரவாதி என்ற புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது. வளாகத்திற்கு வெளியே புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் நிறை குறைகளை கேட்டறிந்ததற்கு மிகவும் திருப்தியாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெற வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் எந்நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
- அபூ ஹுரைரா (ரலி)  புகாரி :5678