Tuesday 5 May 2015

தகுதியற்ற ஆட்சியாளர்களும் பாழ்படுத்தப்படும் அமானிதமும் _காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை  மர்கஸில் 5/5/15 அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் தகுதியற்ற ஆட்சியாளர்களும் பாழ்படுத்தப்படும் அமானிதமும் இறுதிநாளின் அடையாளம் (புகாரி6496)எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்... 
6496. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு கிராமவாசியிடம்), 'நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமைநாளை நீ எதிர்பார்க்கலாம்.'
என்று கூறினார்கள். அவர் 'இறைத்தூதர் அவர்களே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?' என்று கேட்டதற்கு '(ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்கத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.