Monday, 2 June 2014

"இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட வறுமை" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 02.06.2014 அன்று சகோ.சவுக்கத்அலி  அவர்கள் "இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட வறுமை " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட வறுமை

யூதர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டதாக இவ்வசனம் (3:112) கூறுகிறது.
இன்றைக்கு யூதர்கள் வறுமையில் இல்லையே? என்று சிலர் நினைக்கலாம். அதற்கு இவ்வசனத்திலேயே பதில் உள்ளது.
மற்றவர்களுடன் உடன்படிக்கைகள் செய்து தம்மைக் காத்துக் கொள்ளும் போது இந்த நிலை அவர்களுக்கு ஏற்படாது என்பது தான் அந்தப் பதில்.
ஹிட்லரால் கொன்று குவிக்கப்படும் வரை அவர்களுக்கு இழிவு தான் இருந்தது. முஸ்லிம்களாலும், பின்னர் கிறித்தவர்களாலும், பின்னர் நாஜிக்களாலும் ஏராளமான இழிவுகளைச் சுமந்தனர்.
"இயேசு தவறான முறையில் பிறந்தவர்'' என்பது இவர்களின் கொள்கை. அந்த இயேசுவை இறைமகன் என்று ஏற்றுள்ள பிரிட்டனுடன் செய்து கொண்ட உடன்படிக்கை மூலமும், அதன் பின்னர் அமெரிக்காவின் ஒத்துழைப்பு மூலமும் தான் வறுமையற்ற நிலையில் உள்ளனர்.
எனவே இந்தப் பிரகடனம் ஒரு காலத்திலும் பொய்யாகவில்லை. அதே நேரத்தில் இந்த இழிவு அனைத்து யூதர்களுக்கும் உரியது அல்ல என்பதை அடுத்த வசனத்தில் காணலாம்.
திருக்குர்ஆன் 5:14 வசனத்தில் யூதர்களுக்கும், கிறித்தவர்களுக்குமிடையே கியாமத் நாள் வரை பகைமையை ஏற்படுத்தியதாகவும், 5:64 வசனத்தில் யூதர்களுக்கிடையே கியாமத் நாள் வரை பகைமை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இன்று அவர்களிடையே பகைமை காணப்படவில்லையே என்று சிலருக்குத் தோன்றலாம். ஆயினும் இவ்வசனங்களில் கியாமத் நாள் வரை அவர்களுக்கிடையே பகைமை நிலவும் என்று கூறப்பட்டாலும் 3:112 வசனத்தில் அவர்கள் மனிதர்களோடு செய்து கொள்ளும் உடன்படிக்கையால் இது போன்ற இழிவிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கிடையே பகைமை இல்லாதிருப்பது குர்ஆனின் அறிவிப்புக்கு எதிரானது என்று கருத முடியாது.
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/99_isravelaruku_vithikaptta_varumai/