Monday, 14 July 2014

மார்க்கம் அறிவோம் : ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம்...

ஃபித்ரா – பெருநாள் தர்மம்

ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீதும் இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ‘ஸாவு’ கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரிச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி – 1503)

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்த தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரை கிலோ கொண்ட அளவாகும்.

நமது பகுதியில் உணவுப் பொருள் அரிசியாக உள்ளதால் அதனை வழங்கலாம். அல்லது அதன் பண மதிப்பையும் வழங்கலாம். தாம் உணவிற்குப் பயன்படுத்தும் தரமான அரிசியின் இரண்டரை கிலோ மதிப்பை கணக்கிட்டு, ஒருவர் தமது பராமரிப்பிலுள்ள சிறுவர், பெரியவர் அனைவருக்காகவும் இந்த தர்மத்தை வழங்க வேண்டும்.

ஃபித்ராவின் நோக்கம்

இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்த தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.

நோன்பாளியிடம் ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஃபித்ரா எனும் தர்மத்தை விதியாக்கினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னு மாஜா 1817)

நோன்பாளிகளுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோரின் சார்பில் வழங்கும்போது உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.

ஃபித்ரா கொடுக்கும் நேரம்

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டு இருந்தார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி 1530,1509)


ஃபித்ராவை ஒன்று திரட்டி வழங்குதல்

நபி (ஸல்) அவர்கள் ஃபித்ராவை ரமளான் ஜகாத் எனும் பெயரில் மூன்று நாட்களுக்கு முன்பே வசூலித்து ஓரிடத்தில் திரட்டி அதனைப் பாதுகாக்க அபூஹுரைரா(ரலி) அவர்களை நியமித்த செய்தியை புகாரியின் 3257 வது ஹதீஸ் மூலம் அறியலாம். இந்தச் செய்தியின் மூலம், பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ராவை திரட்டியுள்ளார்கள் என்பதையும் அறியலாம்.


எனவே, மேற்கண்ட நபிவழியின் அடிப்படையில் தமிழகத்தில பல வருடங்களாக ஃபித்ரா விநியோகத்தை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தி வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை சகோதரர்களிடம் தங்களது ஃபித்ராவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

சூனியம் குறித்து 10 போஸ்டர்கள் _ மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பாக 12.07.14  அன்று சூனியம் சம்பந்தமாக டிஎன்டிஜே மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சவால் விடுத்த போஸ்டர் மடத்துக்குளம் பகுதியில் பத்து (10) போஸ்டர்கள்  ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...



ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 12.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 12.07.2014  அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் முஸ்லிம்களின் பண்புகள்     என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பெரிய கடை வீதி கிளை சார்பாக கரும்பலகை தாஃவா

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக சூனியம் குறித்து பி.ஜே அவர்கால் பகிரங்கமாக சவால் விடுத்த போஸ்டர்டர்கள் ஒட்டப்பட்டன. இவ்வாறு பி.ஜே அவர்கள்  சுய விளம்பரத்துக்காகவே  அறிவித்து இருப்பதாக  மத்ஹபுவாதிகள் விமர்சனம் செய்தார்கள். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கடந்த 11.07.14 அன்று பெரிய கடை வீதி கிளை சார்பாக இது விளம்பரமல்ல; சத்தியத்தில் இருப்பதற்கான சவால் என்று அறிவிப்பு எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

பெண்களுக்கான சிறப்பு பயான் _ காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு  கிளை சார்பாக 12.07.14  அன்று பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி  ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சகோதரி. குர்ஷீத் பானு ஆலிமா அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளை சார்பாக பிறமத சகோதரருக்கு தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 20.06.14 அன்று தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. 











இதில், லாரன்ஸ் எனும் கிறிஸ்தவ சகோதரருக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்து அவருக்கு இலவசமா  குர்ஆன் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

 அல்ஹம்துலில்லாஹ்..

பெண்களுக்கான சிறப்பு பயான் _ வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் சார்பாக வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பாக 13.07.14  அன்று பெண்களுக்கான சிறப்பு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ.அஹ்மது கபீர்  அவர்கள் திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அதைத் தொடர்ந்து இப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 14.07.14 அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ.தீன் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டோர் யார் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக ஹதீஸ் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை  சார்பாக, 14.07.14 அன்று  ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் அதிக நன்மை தரும் சிறிய அமல்கள் முஸ்லிம் நூலில் 5218 எண்களில் இருக்கும் ஹதீஸ் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

ஹதீஸ் வகுப்பு _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை  சார்பாக, 13.07.14 அன்று  இஷா தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் ரமளானில் இரவு வணக்கம்  என்ற தலைப்பில் புஹாரியில் 2010,2013,3569 மற்றும் நஸயீ 1347,1587,1588 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மாநிலத் தலைமைக்கு நிதியுதவி ரூ.6200 _மங்கலம் கிளை

 திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11-07-14  அன்று, மாநிலத் தலைமைக்கு நிதியுதவியாக, ரமலான் மாதத்தின் இரண்டாவது ஜூம்மாவில் ரூ.6200  வசூல் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .

பெண்களுக்கான சிறப்பு பயான் _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 13-7-14 அன்று  பெண்களுக்கான சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், நபீலா மற்றும் ஆபிலா ஆகிய  இரு சகோதரிகள், இறையச்சம்  மற்றும் குர்ஆனின் சிறப்புகள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் 30 க்கும் மேற்ப்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 
அல்ஹம்துலில்லாஹ்.

ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி மாத இதழ்கள் விற்பனை _ மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11-7-2014 அன்று 20 ஏகத்துவ மாத இதழ்களும், 10 தீன்குலப் பெண்மணி மாத இதழ்களும்  விற்பனை செய்யப்பட்டன. 
அல்ஹம்துலில்லாஹ்...

இலவசமாக 40 உணர்வு பேப்பர்கள் விநியோகம் _ மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11.07.14 அன்று ஜுமுஆக்கு பின் 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டன.   
அல்ஹம்துலில்லாஹ்..

80 உணர்வு பேப்பர்கள் விற்பனை _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11.07.2014 அன்று ஜுமுஆக்கு பிறகு,   80 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்..

பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா _ கோம்பைத் தோட்டம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 13.07.14 அன்று பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா நடத்தப்பட்டது. இதில், சகோ.பஷீர் அலி அவர்கள் வகுப்பு நடத்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரபு பயான் _ மங்கலம் கிளை - 09.07.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக ரமலான் 09.07.14 மற்றும் 10.07.14 ஆகிய  தினங்களில் இரவுத் தொழுகைக்குப்    பின் ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், மறுமை நம்பிக்கை என்ற தலைப்பில் சகோ.அஹ்மது  கபீர்  அவர்கள் தொடர்  உரை நிகழ்த்தினார்.
 அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ மங்கலம் கிளை - 08.07.14

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக 08.07.14 அன்று, இரவுத் தொழுகைக்குப் பின் ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், “சிறிய இணைவைப்பு” என்ற தலைப்பில் சகோ. தவ்ஃபீக்  அவர்கள் தலைப்பில்  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...