Friday, 3 April 2015

புதிய ஜும்ஆ _G.K. கார்டன் கிளை


 
    திருப்பூர் மாவட்டம் G.K. கார்டன்  கிளை சார்பாக 03.04.2015 அன்று புதிய ஜும்ஆ ஆரம்பம் செய்யப்பட்டது. இதில், சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி  அவர்கள் உரை நிகழ்த்தினார். ஏராளமான சகோதர  சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.


இணைவைப்பு பொருள்கள் ( தர்ஹா படம் ) அகற்றம் _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 02.04.2015 அன்று ஒரு வீட்டில் இணைவைப்பு மிகப்பெரிய பாவம் என தாவா செய்து அவர்களிடம் இருந்த  இணைவைப்பு பொருள்கள் ( தர்ஹா படம் ) அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்

தாவா செய்து கயிறு அகற்றப்பட்டது _ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக  3.04.15 அன்று அசன் என்கின்ற சகோதரர் யிடத்தில் கையில் கயிறு கட்டியிருப்பது இணைவைப்பு என்றும் நிரந்தர நரகத்திற்கு கொண்டு செல்லும் என தாவா செய்து கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

3 இணைவைப்பு பொருள்கள் (கறுப்பு கயிறு) அகற்றம் _பெரிய தோட்டம் கிளை



திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 02.04.2015 அன்று 3சகோதரர்களுக்கு  மூடநம்பிக்கை குறித்த தாவா செய்து அவர்களிடம் இருந்த  இணைவைப்பு பொருள்கள் 3(கறுப்பு  கயிறு) அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.

4சகோதரர்களுக்கு என்னை கவர்ந்த ஏகத்துவம் DVD4 தனிநபர் தாவா -மடத்துக் குளம் கிளை




திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம்  கிளை சார்பாக 03.04.2015 அன்று   4சகோதரர்களுக்கு இஸ்லாதின் அடிப்படைகள்  குறித்து  தனிநபர் தாவா செய்து,  என்னை கவர்ந்த 
ஏகத்துவம் என்ற DVD  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்துரிமையில் ஏன் வேறுபாடு? -மடத்துக்குளம் கிளை மார்க்க விளக்க கலந்துரையாடல்


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 02.04.2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க விளக்க கலந்துரையாடல் நடைபெற்றது .. . இதில்,   இஸ்லாத்தில் பாகப்பிரிவினையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்துரிமையில் ஏன் வேறுபாடு?  எனும் தலைப்பில் கலந்துரையாடல்
 நடைபெற்றது. திருகுர்ஆன் தமிழாக்கம்   (109) விளக்கம் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்.. 

109. வாரிசுரிமையில் ஆண், பெண் வேறுபாடு

வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்குக் கிடைப்பதில் பாதி, பெண்களுக்குக் கிடைக்கும் என்று திருக்குர்ஆன் கூறுவதைப் பலரும் தவறாக எண்ணுகின்றனர். தக்க காரணங்களுடன் தான் இஸ்லாம் வேற்றுமை காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1, இஸ்லாமிய சமூக, குடும்ப அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது தான்