தயவு செய்து முழுமையாக படிக்கவும்........ அனைவருக்கும் எனது ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு............ எனதருமை கொள்கை சகோதரர்களே! குடும்பங்கள் வாயிலாகவும், இயக்கங்கள்,மற்றும் சமுதாயரீதியகவும் பல எதிர்ப்புகள் வந்தாலும் தளர்ந்து விடாமல் ஏக இறைவனின் உதவியை கொண்டு அல்லாஹ்வுடைய இந்த சத்தியமார்க்கத்தை அதன் தூயவடிவில் மக்கள் மத்தியில் கட்டுரை வழியாகவும்,மார்க்க விளக்கக் கூட்டங்கள் மூலமாகவும் கொண்டு செல்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.... இவ்வாறு வார்த்தைக்கு வார்த்தை தவ்ஹீத்,தவ்ஹீத் என்று சொல்லிய நம்கொள்கை சகோதரர்கள் சிலர் தங்களுடைய திருமண விஷயத்தில் தன் தாய் சொல்கிறார் தம் தந்தை சொல்கிறார் என்று வரதச்சனை வாங்கி திருமணம் செய்து இந்த ஏகத்துவ கொள்கையிலிருந்து தடம் புரள்வதை நாம் அவ்வப்போது கண்டுவருகிறோம்.இவர்களைப் போன்றவர்களை புறந்தள்ளிவிடுவோம். காரணம் அவர்கள் அவர்கள் உள்ளத்தில் இந்த ஏகத்துவ கொள்கையை முழுவதுமாக நுழையவில்லை என்பதுதான். அல்லாஹ்வின் கிருபையினால் சிலர் தங்களுடைய திருமண விஷயத்தில் எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் வரதட்சணை வாங்கமாட்டேன் என்றும்,மார்க்க அடிப்படையில்தான் மணப்பெண்ணை தேர்ந்தெடுப்பேன் என்றும், தாலி(கருஷமணி)கட்டுதல்,ஆலத்தி எடுத்தல்,பெண்வீட்டு விருந்து,நல்லநாள் பார்த்தல் இன்னும் இதுபோன்ற மார்க்கத்திற்கு முரணான காரியத்தை நான் ஒருபோதும் என்னுடைய திருமணத்தில் செய்யமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார்கள்.அதன்படி திருமணமும் செய்துள்ளார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!!! இதுபோன்று கொள்கையில் பிடிப்புள்ள சகோதரர்கள் மணப்பெண் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் இன்னும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் தனது வீட்டில் திருமண பேச்சை எடுத்தவுடன் நம் சகோதரன் இஸ்லாமிய திருமணத்தை பற்றி தம் பெற்றோகளுக்கு எடுத்து சொல்கிறான்.உடனே பல எதிர்ப்புகள் வருகிறது. இவற்றை எல்லாம் சரிகட்டி ஒருவழியாக தன் தாய்,தந்தையரின் அனுமதியை பெறுகிறான். அப்போது அந்த தாய் சொல்லக்கொடிய பதில் உன்விருப்பப்படி இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொள்.ஆனால், இந்த பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டுமென்று தம் குடும்பத்தில் உள்ள யாரையாவது சொல்கிறார். இதை கேட்டவுடன் நம் சகோதரன் கூறும் பதில் மணப்பெண் ஏகத்துவ கொள்கை உடையவளாக இருக்கவேண்டும் என்பதைத்தான். உடனே தன் பெற்றோரும் சரி பரவாயில்லை,நீ சொல்லும்படி இந்த பெண்ணை உன் கொள்கையை சொல்லகூடிய மதரசாவில் சேர்த்துவிடுகிறேன்.ஒருவருடம் அல்லது இரண்டுவருடம் கழித்து இந்த பெண்ணை திருமணம் செய்துகொள் என்று கூறுகிறார்கள். உடனே நம் சகோதரனும் அல்ஹம்துலில்லாஹ் இதுபோதும் என்று சொல்லிக்கொண்டு சம்மதித்து விடுகிறான். இவர்களைப்பார்த்து நான் கேட்கும் ஒரு கேள்வி என்னவென்றால், தன் பெற்றோர் நம் விருப்பப்படி இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொள்ள சம்மதத்தின் காரணத்தால் சரி என்று அந்த பெண்ணையும் மதரசாவில் சேர்த்து மார்க்கப்பற்றுள்ள பெண்ணாக மாற்றி திருமணம் செய்துகொள்கிறீர்கள்.நல்ல விசயம்தான். ஆனால் இதற்கு முன்பே இந்த ஏகத்துவ கொள்கையை ஏற்றுள்ள நம் சகோதரிகளின் நிலைமையையும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால் நான் திருமணம் முடித்தால் ஏகத்துவவாதியைத்தான் திருமணம் செய்வேன் இல்லையென்றால் அல்லாஹ்வின் பால் நோன்புநோற்று கன்னியாகவே இறப்பேன் என்று சொல்லி பெற்றோர்களையும்,குடும்பத்தில்லுள்ளவர்களையும் எதிர்த்துக் கொண்டு கொள்கையில் உறுதியாக உள்ள சகோதரிகளுக்கு அந்த வாழ்க்கையை கொடுப்பது ஏகத்துவ சிந்தனை உள்ள ஒவ்வொரு சகோதரனின் மீதும் கடைமையாகும். அதுமட்டுமல்லாமல் இவ்வாறு கொள்கைபிடிப்புள்ள சகோதரிகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்காமல் விட்டதால் எத்தனையோ சகோதரிகள் வேறுவழியின்றி ஷிர்க் வைக்கக்கொடிய,அல்லது மார்க்கப்பற்றில்லாத சகோதரனை திருமணம் முடித்துக்கொண்டு அவர்களுக்கும் எடுத்து சொல்ல முடியாமல் தானும் கடைபிடிக்க முடியாமல் கடைசியில் கணவன் எவ்வழியோ அவ்வழி என்று போய்விடுகிறார்கள். இதுக்கு நாம் காரணமாகி விடக்கூடாது........ ஆகையால் தயவு செய்து ஏற்கனவே கொள்கையை ஏற்றுள்ள சகோதரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து திருமணம் செய்து அதன் மூலம் இன்னும் அதிகமான சகோதரிகளை இந்த ஏகத்துவ கொள்கையில் இணைய உதவி செய்யுங்கள்.அதுபோன்ற எண்ணமுடையவர்களாக எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆகி அருள்புரிவானாக!!!!!! ஆமீன்..........posted by SM.YOUSUF