தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 30.06.2013 அன்று திருப்பூர் டவுன்ஹாலில் மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாலை 4.45 மணி முதல் மக்ரிப் வரை " வரதட்சணை " எனும் தலைப்பில் பொதுமக்கள் எதார்த்த வாழ்வில் வரதட்சணையின் பாதிப்புகளை அனுபவித்தாலும், வெளிப்படையாக வரதட்சணையின் இலாபங்களை மட்டுமே பேசுவதை பற்றியும், வரதட்சணை ஒழிய தீர்வு
ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுத்து நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த எளிமையான திருமணமே என்று
பெண்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி யும்
தொடர்ந்து
சகோ.M.I.சுலைமான் அவர்கள் "முஸ்லிம் பெண்ணே, உன்னில் இஸ்லாம் எங்கே?" எனும் தலைப்பிலும்,
சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் "எதிர்காலம் இஸ்லாத்திற்கே" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.
ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அனைவரும் மேடை நிகழ்சிகளை தெளிவாக பார்க்கும் வண்ணம் பிரமாண்ட LED TV உள்ளிட்ட சிறப்பான ஏற்பாடுகள் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சி உலகமெங்கும் உடனடியாக காணும் வகையில்
www. onlinepj.com இல் live செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சி பற்றி தினமணி நாளிதழ் செய்தி
அல்ஹம்துலில்லாஹ்