Saturday, 16 June 2018

பெருநாள் தொழுகை - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பெருநாள் சிறப்பு தொழுகை திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி திடலில் நடைபெற்றது.

பிறையை பார்த்து நோன்பு நோற்க வேண்டும் பிறையை பார்த்து நோன்பு விட வேண்டும் என்ற நபிகள் நாயகம் அவர்கள் சொன்ன போதனையின் அடிப்படையிலே இந்த நோன்பு பெருநாள் பண்டிகை திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி திடலில் முஸ்லிம்கள் ரமலான் பண்டிகையை கொண்டாடக்கூடிய வகையில் திடலில் பெருநாள் தொழுகை நடத்தினார்கள்.
அதிகாலையே நடத்தப்பட வேண்டும் என்ற இந்த தொழுகையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அணைவரும் பெருந்திரளாக பங்கேற்றனர்.


ஏழைகளுக்கு பெருநாள் தர்மத்தை நிறைவேற்றியவர்களாக அதன் கடைமையை நிறைவு செய்த பின் இச்சிறப்பு தொழுகையில் பங்கேற்றார்கள்.
இந்த சிறப்பு தொழுகை சகோ.சல்மான். MISc., (சென்னை) தலைமையில் நடைபெற்றது.
இச்சிறப்பு தொழுகை முடிந்து சிறப்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது . அன்பு, அறம், தர்மம், ஏழைகளுக்கு உதவி செய்வது , அனாதைகளை ஆதரிப்பது என இஸ்லாம் கூறும் நற்போதனைகள் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.
இத்தொழுகையில் மூன்று ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டதோடு புத்தாடை அணிந்து தங்களது மகிழ்ச்சியை தொழுகை முடிந்தபின் வெளிப்படுத்தி வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டார்கள்.
அமைதி சமத்துவம் சகோதரத்துவம் எல்லாம் மேலோங்கவும் வன்முறை இல்லா நாடாகவும் , வாழ்வில் வறுமை போக்கவும் என இச்சிறப்பு தொழுகையில் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.
TNTJ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருப்பூர் மாவட்டம்
7094465550
7094465551
7094465553