Friday, 7 April 2017
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 05-04-17 புதன் பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது, நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் தயமும் செய்வது எப்படி என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, கலந்துகொண்டவர்கள் 6 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு விளம்பரம் - காங்கயம் கிளை
இஸ்லாம் குறித்து தாவா - யாசின்பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக இரண்டாம் கட்டமாக 04-04-2017 அன்று குருவம் பாளையம் கிராமத்தில் பெண்கள் இரண்டு குழுக்களாக சென்று அப்பகுதிவாழ் மக்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டது,மொத்தம்.50 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அவினாசி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 05-04-17 இன்று பஜ்ர் க்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று "பல் துலக்குதல்" "பல் துலக்கும் குச்சி" என்ற தலைப்பு வாசித்து விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 04-04-17 செவ்வாய் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளுவில் மஸகு செய்வது எப்படி என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள் 3 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா - மங்கலம் கிளைகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை இந்தியன் நகர் கிளை RB.நகர் கிளை களின் சார்பாக 04/04/17/ அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு சம்பந்தமாக மங்கலம் .பல்லடம் ரோடு கடைபகுதியில் முஸ்லீம் மற்றும் # மாற்று மத சகோதர்கள் அனைவருக்கும் மாநாடு அழைப்பு கொடுத்து முஹம்மதுரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு புக் # 80 nos மற்றும் நோட்டிஸ் வினியோகம் +வசூல்# செய்யயப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
மாநாடு சம்பந்தமான செயல்வீரர்கள் கூட்டம் - ராமமூர்த்தி நகர் கிளை
திருப்பூர் மாவட்டம்,ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக மாநாடு சம்பந்தமான செயல்வீரர்கள் கூட்டம் 02/03/17அன்று நடைபெற்றது கிளை பொறுப்பாளர் சேக் பரீத் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.3 பேரை கொண்ட 3 டீம் அனைத்து மக்களிடம் சென்று நோட்டீஸ் புத்தகம்,டோர் ஸ்டிக்கர் வினியோகம் செய்து மாநாட்டிற்கு மக்களை அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.
இஸ்லாம் குறித்து தாவா குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை
கிராம தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 04-04-2017 அன்று அமராவதி நகர்,ராயல் நகர்,சத்யா காலனி கிராமத்தில் பெண்கள் இரண்டு குழுக்களாக சென்று அப்பகுதிவால் மக்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டது,மொத்தம்.47 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 04.04.2017 அன்று காலை ஃபஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. அதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயீல் அத்தியாயத்தில் 28 வது வசனத்திற்கு விளக்கம் அளித்தார்.மேலும் ஹதீஸ் சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)