மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்பாட்டம்
திருப்பூர் செப் 15 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் மத்திய மோடி அரசு ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை திறுப்பி அனுப்பும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது .
மியான்மரிலுள்ள ராகின் மஹானத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களை ராணுவமும் புத்த மதவாதிகளும் கூட்டுச்சேர்ந்து ஆயிரக்கணக்கில் இனப்படுக்கொலை செய்யப்படுகிறார்கள்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அங் சாங் சுகி என்ற பெண்ணின் தலைமையில் நடைபெறும் அரசில் இன அழிப்பு படுகொலைகள் நடத்தப்படுகின்றன.
மேலும்
சர்வதேச அகதிக்கான அடையாள அட்டையுடன் இந்தியாவில் 40 ஆயிரம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தஞ்சமடைந்துள்ளனர்
ஆனால் இந்திய அரசு முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் பொருளாதாரத்தை காரணம் காட்டி மியான்மருக்கு திருப்பி அனுப்ப போவதாக முடிவு செய்துள்ளதையும் கைவிட
வலியுறுத்தி
திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, திருப்பூர் மாநகராட்சி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார்
மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் கண்டன உரையாற்றினார்
இதில் மியான்மார் அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரும்திரளாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு மியான்மர் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தொண்டரனி செயலாளர் இர்ஷாத் தலைமையில் மாவட்ட தொண்டரனி சகோதரர்கள் சிறப்பாக எற்பாடு செய்தார்கள் .
இறுதியாக மாவட்ட பொருளாளர் ஷேக் ஜெய்லானி நன்றிகூறினார்.
அல்ஹம்துலில்லாஹ்!