Thursday, 10 October 2013

"இப்ராஹீம் நபியின் வாழ்வு தரும் படிப்பினை" -S.V. காலனி கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 09.10.2013 அன்று S.V. காலனி மஸ்ஜிதுல் அக்ஸாபள்ளியில்  "இப்ராஹீம் நபியின் வாழ்வு தரும் படிப்பினை"  எனும் தலைப்பில்  








குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஏழைகளுக்கு மட்டும்தான் " -S.V.காலனி கிளை போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 08.10.2013 அன்று  "ஏழைகளுக்கு மட்டும்தான் " என்ற போஸ்டர் ஒட்டி குர்பானி தோல் சம்பந்தமாக  தாவா  செய்யப்பட்டது

மனிதருக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 10.10.2013 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் பிற மத சகோதரர்.கோபால் அவர்களுக்கு  இரத்த தானம் வழங்க சென்றபோது அவரது உறவினருக்கு  மனிதருக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

பிற மத சகோதரர்.கோபால் -க்கு இரத்த தானம் S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 10.10.2013 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிற மத சகோதரர்.கோபால் அவர்களின் அவசர சிகிச்சைக்கு தேவைப்பட்ட இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

"மதரஸதுல்அக்ஸா" _S.V.காலனி கிளை தினசரி மக்தப் மதரசா

 






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக  S.V.காலனி கிளை மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் ஆண்,பெண் குழந்தைகளுக்கான தினசரி மக்தப் மதரசா "மதரஸதுல்அக்ஸா" தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்


தேவையற்ற இறைவனுக்கு அறுத்துப் பலியிடுவதா?

அல்லாஹ் யாரிடத்தும் தேவையற்றவன் என்று திருக்குர்ஆனில் உள்ளது. அப்படி இருக்க 'தொழு! அறுத்துப் பலியிடு' என்ற கட்டளையும் உள்ளதே? இது எப்படி?
 என்று ஒரு மாற்று மத சகோதரர் கேள்வி எழுப்புகிறார். - 
அபூ அப்துர்ரஹ்மான், ரியாத்.  
 தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?  


பதில்: அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடு என்பதில் சந்தேகமில்லை. தேவையுள்ளவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று இஸ்லாம் உறுதிபடக் கூறுகிறது. 
இறைவனைத் தொழ வேண்டும் எனவும், இறைவனுக்காக அறுத்துப் பயிட வேண்டும் எனவும் இஸ்லாம் கூறுவதால்
அல்லாஹ் தேவையுள்ளவன் என்று கருத முடியாது. 
இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை. 
இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப் போவதில்லை. 
இந்தக் கருத்தில் நபிகள் நாயகத்தின் பொன்மொழியும் உள்ளது.
 (நூல்: முஸ்லிம் 4674) 
தொழுகை உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளையிடுவது அவனுக்கு அது தேவை என்பதற்காக அல்ல. மாறாக, நிறைவேற்றும் மனிதனின் நன்மைக்காகவே. இன்னொருவரின் நன்மைக்காக அவரை ஒரு காரியத்தில் ஈடுபடுமாறு நாம் கூறினால் நமக்கு அந்தக் காரியத்தின் பால் தேவையுள்ளது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம். 
உங்கள் மகன் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள்! போட்டிகளில் அவன் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறீர்கள்! இவையெல்லாம் உங்கள் தேவைக்காக அல்ல! மாறாக உங்கள் மகனின் நன்மைக்காகவே இவ்வாறு வலியுறுத்துகிறீர்கள்! 'மகன் நல்ல நிலையில் இருந்தால் நம்மை நன்றாகக் கவனிப்பான்' என்ற எதிர்பார்ப்பாவது இதில் மறைந்து நிற்கும். அல்லாஹ், நம்மிடம் எதிர்பார்க்கும் வணக்க வழிபாடுகளில் இது போன்ற எதிர்பார்ப்புகள் கூட கிடையாது. எனவே, நமது நன்மைக்காக இடப்படும் கட்டளைகளை கட்டளை பிறப்பித்தவனின் தேவைக்காக இடப்பட்ட கட்டளை என்று கருதுவது தவறாகும்.

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/books/arthamulla_kelvikal/
Copyright © www.onlinepj.com

கடன்பட்டோருக்காக செலவிடுவோம் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 10.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் கடன்பட்டோருக்காக செலவிடுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

குர்பானியின் சட்டங்கள் _மங்கலம் கிளைபெண்கள்பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-10-2013 அன்று  மங்கலம் கிடங்குத்தோட்டத்தில் பெண்கள்பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "குர்பானியின் சட்டங்கள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _காலேஜ்ரோடுகிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை சார்பில் 09.10.2013 அன்று திருப்பூர் பகுதி  (ரயில் நிலையம் எதிரில், புஸ்பா  ரவுண்டானா, மற்றும் காலேஜ்ரோடு ) முக்கிய இடங்களில்
 

 


மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.



குர்பானி யார் மீது கடமை _மங்கலம் கிளைபயான்


திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 09.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் குர்பானி யார் மீது கடமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

"இப்ராஹீம் நபியின் வாழ்வு தரும் படிப்பினை" _மங்கலம் கிளைபெண்கள்பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-10-2013 அன்று  மங்கலம் கிடங்குத்தோட்டத்தில் பெண்கள்பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "இப்ராஹீம் நபியின் வாழ்வு தரும் படிப்பினை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.