Saturday 31 December 2011
மருத்துவ முகாம் _13.11.2011
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக கடந்த 13.11.2011 ஞாயிறு அன்று மாபெரும் இலவச எலும்பு மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் 250 நபர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ். இதில் கலந்து கொண்டவர்களுக்கு 2000 ரூ மதிப்புள்ள நரம்பு மற்றும் எலும்பு வலிமை கண்டறியும் சோதனை இலவசமாக செய்யப்பட்டது.
மேலும் இதில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவினாசி MLA கருப்பசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் 250 நபர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ். இதில் கலந்து கொண்டவர்களுக்கு 2000 ரூ மதிப்புள்ள நரம்பு மற்றும் எலும்பு வலிமை கண்டறியும் சோதனை இலவசமாக செய்யப்பட்டது.
மேலும் இதில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவினாசி MLA கருப்பசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Saturday 24 December 2011
சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இந்த ஒதுக்கீடு சலுகையை அவர்கள் பெறலாம். முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் இந்த சலுகையைப் பெறுவர். இந்த இட ஒதுக்கீடு, ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமலுக்கு வரும். மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையில், ஏக மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஜாதியினர், இந்த இட ஒதுக்கீட்டால் பலன் பெறுவர். உத்தர பிரதேச மாநில தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- தினமலர் 22-12-2011 செய்தி
இது அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
posted by SM.YOUSUF
Saturday 10 December 2011
தினமலரின் விஷமத்தனமும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் துடிப்பான செயல்பாடும்
ஊடக பயங்கரவாதமும் பார்ப்பனிய பாசிச வெறியும் கொண்ட தினமலர் நாளிதழ் எவ்வளவு தான் குட்டுப்பட்டாலும், தனது உண்மை முகத்தை, சுய ருபத்தை அடிக்கடி வெளிக்காட்டத் தவறுவதில்லை, உண்மையின் உரைகல் என்று முகப்பில் பெயர் (மட்டும்) தாங்கி வந்து கொண்டிருக்கும் இந் நாளிதழ் கடந்த 7-12-2011 புதன்னறு சென்னை பதிப்பில் வெளிவந்த செய்தியொன்று தமிழ் முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அரைகுறைகள் கொண்டாடிய முகரம் பண்டிகையை செய்தியாக வெளியிடுகிறோம் என்ரெண்ணி அனைத்து முஸ்லிம்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது. முகரம் பண்டிகையை கொண்டாடுவதன் நோக்கமாக அசன்(ரலி), உசேன் (ரலி) அவர்களின் மரணச் செய்தியை கேட்ட அவர்களுது தாயார் பாத்திமா (ரலி) அவர்கள் தீக்குளித்து இறந்ததின் நினைவாக இந்நாள் கொண்டாடப்படுகிறது என்று செய்தி வெளியிட்டிருந்தது. செய்தி குழுமங்கள் வாயிலாக பரப்பப்பட்டு நமது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டிருந்த நிலையில் நமது ஜமாத்தின் தம்மாம் மண்டல நிர்வாகிகள் தினமலரின் நிர்வாகி பாலா அவர்களைத் தொடர்பு கொண்டு நமது கண்டனத்தை பதிவு செய்ததுடன் தொடர்ந்து இது போல் முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகள் வெளியிடுவது சமுக நல்லினக்கத்தை குலைக்கும் செயலாக உள்ளதை தெளிவுபடுத்தினர் அனைத்தையும் பொறுமையாக கேட்ட நாளிதழ் நிர்வாகி தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி வெளிட்டதாகவும், உங்களது மத உணர்வுகளை மதிக்கிறோம். இச் செய்தியை உடனடியாக நிக்கிவிடுகிறோம் என்று சொல்லி 1 மணி நேரத்தில் இணைய தளத்திலிருந்து நிக்கினர் அல்ஹம்துலில்லாஹ்.
இத்தோடு சமிபத்தில் கேரளாவில் நடைபெற்ற சம்பவத்தை ஒப்பிட்டு பார்ப்பது பொருத்தமாக இருக்கும் விஷமத்தனமாக நபிகள் நாயகத்தை அவமதித்து கல்லுரியில் வினாத்தாள் தயாரித்த ஜோசப் என்கிற பேராசிரியரின் கையைதுண்டித்த இயக்கத்தினர் நினைத்துப் பார்க்க வேண்டும். சத்திய மார்க்கத்தை அதன் தூய்மையான வழியில் எடுத்துச் சொல்லும் தமிழ்நாடு தவ்ஹித் ஜாமத்தின் சீரிய வழிகாட்டுதலின் படி செயல்படும் அடிமட்ட உறுப்பினர் கூட வன்முறையை கையில் எடுப்பதில்லை அவ்வளவு தெளிவான தலைமையின் வழிகாட்டுதல்கள். புகழ் அனைத்தும் இறைவனுக்கே!
posted by SM.YOUSUF
Tuesday 6 December 2011
கொள்கை சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்???
தயவு செய்து முழுமையாக படிக்கவும்........ அனைவருக்கும் எனது ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு............ எனதருமை கொள்கை சகோதரர்களே! குடும்பங்கள் வாயிலாகவும், இயக்கங்கள்,மற்றும் சமுதாயரீதியகவும் பல எதிர்ப்புகள் வந்தாலும் தளர்ந்து விடாமல் ஏக இறைவனின் உதவியை கொண்டு அல்லாஹ்வுடைய இந்த சத்தியமார்க்கத்தை அதன் தூயவடிவில் மக்கள் மத்தியில் கட்டுரை வழியாகவும்,மார்க்க விளக்கக் கூட்டங்கள் மூலமாகவும் கொண்டு செல்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.... இவ்வாறு வார்த்தைக்கு வார்த்தை தவ்ஹீத்,தவ்ஹீத் என்று சொல்லிய நம்கொள்கை சகோதரர்கள் சிலர் தங்களுடைய திருமண விஷயத்தில் தன் தாய் சொல்கிறார் தம் தந்தை சொல்கிறார் என்று வரதச்சனை வாங்கி திருமணம் செய்து இந்த ஏகத்துவ கொள்கையிலிருந்து தடம் புரள்வதை நாம் அவ்வப்போது கண்டுவருகிறோம்.இவர்களைப் போன்றவர்களை புறந்தள்ளிவிடுவோம். காரணம் அவர்கள் அவர்கள் உள்ளத்தில் இந்த ஏகத்துவ கொள்கையை முழுவதுமாக நுழையவில்லை என்பதுதான். அல்லாஹ்வின் கிருபையினால் சிலர் தங்களுடைய திருமண விஷயத்தில் எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் வரதட்சணை வாங்கமாட்டேன் என்றும்,மார்க்க அடிப்படையில்தான் மணப்பெண்ணை தேர்ந்தெடுப்பேன் என்றும், தாலி(கருஷமணி)கட்டுதல்,ஆலத்தி எடுத்தல்,பெண்வீட்டு விருந்து,நல்லநாள் பார்த்தல் இன்னும் இதுபோன்ற மார்க்கத்திற்கு முரணான காரியத்தை நான் ஒருபோதும் என்னுடைய திருமணத்தில் செய்யமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார்கள்.அதன்படி திருமணமும் செய்துள்ளார்கள்.அல்ஹம்துலில்லா
posted by SM.YOUSUF
Monday 5 December 2011
நிரந்தர நரகை நோக்கிய பயணம்?
நிரந்தர நரகை நோக்கிய பயணம்?
கப்றும் வைபவங்களும்
==================
நபி (ஸல்) அவர்கள் தம் கப்றை பள்ளியாகத் திருப்பி விடாமலிருக்க (அதில் வைபவங்கள், கூடு, கொடிகள் எடுக்காமலிருக்கச் சொல்லியிருப்பதுடன்) தம் மரணத் தருவாயில் ‘யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். ஏனெனில் அவர்கள் தம் நபிமார்களின் கப்றுகளை பள்ளிவாசல்களாக ஆக்கி விட்டார்கள்’ என்று கூறியதாக ராவி குறிப்பிடுகிறார். இவர்கள் செய்கின்ற இந்தச் செய்கையைப் பற்றி நபியவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். (புகாரி, முஸ்லிம்)
மற்றொரு ஹதீஸில் ‘இறைவா! என்னுடைய கப்றை அனுஷ்டானங்கள் செலுத்தப்படும் பிம்பமாக ஆக்கி விடாதே! தம் நபிமார்களின் கப்றுகளில் பள்ளி வாசல்களைக் கட்டி வைத்திருக்கும் சில சமூகத்தார்கள் மீது அல்லாஹ்வின் கோபம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது’ என்று இமாம் மாலிக் தம் முவத்தா என்ற நூலில் அறிவிக்கிறார்கள்.
இன்னுமொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ‘நபி ஈஸாவை கிறிஸ்தவர்கள் வரம்பு மீறித் துதித்தது போல என்னை நீங்கள் துதிக்காதீர்கள். நான் ஒரு அடிமை. எனவே என்னைப் பற்றி அல்லாஹ்வின் அடிமை என்றும், அவன் தூதர் என்றும் கூறுங்கள்’ என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மேலும் கூறினார்கள்: ‘அல்லாஹ்வும், முஹம்மதும் நாடியவை நடக்கும் என்று கூறாமல் அல்லாஹ் நாடியவை தான் நடக்கும் என்று கூறுங்கள். அல்லாஹ் நாடியதற்குப் பின்னர்தான் முஹம்மத் நாட முடியும்’.
காட்டரபிகளில் ஒருவர் நபிகளிடம் வந்து ‘நீங்களும், அல்லாஹ்வும் நாடியவை (நடந்தது)’ என்றார். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘என்னை அல்லாஹ்வுக்கு (நிகராக்கி) இணையாக்கி விட்டீர்களா? அல்லாஹ் நாடியது மட்டும் (நடந்தது) என்று கூறும்’. என்றார்கள்.
இதைப்பற்றி இறைவன் திருமறையில் கூறுகிறான்: “நீர் கூறும்! அல்லாஹ் நாடினாலன்றி எனக்கு யாதொரு நன்மையோ, தீமையோ செய்து கொள்ள எனக்குச் சக்தியில்லை. நான் மறைவானவற்றை அறியக் கூடுமாயின் நன்மைகளையே அதிகம் தேடிக் கொண்டிருப்பேன். யாதொரு தீங்கும் என்னை அணுகியிராது”. (7:188)
மற்றொரு இடத்தில் இறைவன் கூறுகிறான்: “நீர் கூறும். அல்லாஹ் நாடியதையன்றி யாதொரு நன்மையோ, தீமையோ நான் எனக்கே தேடிக் கொள்ள சக்தியற்றவன் (10:49). மேலும் கூறினான்: “நபியே! நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்தி விட உம்மால் முடியாது. மாறாக அல்லாஹ் மட்டும் தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்” (28:56). “நபியே! இவ்விஷயத்தில் உமக்கு யாதொரு அதிகாரமுமில்லை” (3;128)
இதுவே ஏகத்துவத்தின் உண்மை நிலை. அல்லாஹ்விடத்தில் மிக்க மதிப்பிற்கும், பெருமைக்கும், கண்ணியத்திற்குமுரிய நபி (ஸல்) அவர்களின் நிலைமை இப்படி என்றால் வேறு சிருஷ்டிகளின் நிலைமை எப்படி எப்படி என்பதை சிந்தித்திப் பார்க்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
posted by SM.YOUSUF
மதுவை அளவாக குடிப்பது இதயத்திற்கு நல்லதா!?
மதுவை அளவாக குடிப்பது இதயத்திற்கு நல்லதா!?
மது என்பது மனிதனின் அறிவை இழக்க செய்து மிருகமாக மாற்றக் கூடியது. மதுவுக்கு அடிமையாகி விட்டவர்களும் மதுவை விட முடியாதவர்களும் 'நான் மருந்துக்காக பயன்படுத்துகிறேன்' என்று சப்பைக்கட்டு கட்டுவதுண்டு. சில மருத்துவர்கள் மதுவை அளவாக குடிக்கச் சொல்லி பரிந்துரைக்கிறார்கள் என்றும் கூறுவதுண்டு. ஆனால் மதுவை அளவாக அருந்தினாலும் அதிகமாக அருந்தினாலும் ஆபத்து தானே தவிர மது ஒரு மருந்து என்பது தவறான கருத்தாகும். இதை அண்மையில் நியூசிலாந்து விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
மதுவை அளவாக குடிப்பது ஆபத்தில்லை என்றும் அவ்வாறு அளவாக குடிப்பது இதய நோய்க்கு மருந்தாகும் என்றும் 1980 களில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது மது உற்பத்தியாளர்களின் ஆதரவின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும் என இந்த விஞ்ஞானிகள் குற்றம் சாட்டுகின்றனர். மதுவை அளவாக குடிப்பது என்பது இதயத்துக்கு பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்படாத கருத்தாகும். ஆனால் அது இதயத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடியது என்பது ஆய்வுகளில் அறியப்பட்ட உண்மை. எனவே மது உற்பத்தியாளர்கள் பரப்பிய பொய் செய்திகளை மக்கள் நம்பி விடக் கூடாதென்றும் ஆல்கஹாலில் இருக்கும் ஒரு சில பயன்பாடுகளை மட்டும் ஆய்வு செய்து அது முற்றிலும் நன்மையானது எனும் முடிவுக்கு வந்துவிடக் கூடாதென்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மது உற்பத்தியாளர்களின் இந்த தவறான தகவலை நம்பி ஆல்கஹால் என்பது டானிக் போன்ற சத்துள்ள உணவு என எவரும் கருதி விடக்கூடாது, அது அதிகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதென்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மருத்துவ ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்ட இந்த உண்மைகளை நியூசிலாந்து பத்திரிகைகளின் மூலம் விஞ்ஞானிகள் அம்பலப்படுத்தியதால் மது உற்பத்தியாளர்களுக்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது அருந்துபவருடைய குடும்பம் குட்டிச்சுவராகும் என்பதால் தான் மது பாட்டிலில் கூட குடி குடியை கெடுக்கும் என்ற ஸ்டிக்கரையும் அரசு ஒட்டி விற்பனை செய்கிறது. அதை கண்டுகொள்ளாத குடிமகன்கள், விஞ்ஞானிகளின் ஆய்வின் படி 'மது மருந்தல்ல விஷம்' என்பதை இனியாவது உணர்ந்து மதுவிலிருந்து மீள வேண்டும்.
மது மற்றும் சூதாட்டத்தில் பெரும் கேடும், மக்களுக்கு சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப் பெரியது.
(திருக்குர்ஆன் 2:219)
மதுவில் சிறு பயன்கள் இருந்தாலும் அதிகமான கேடுகள் இருக்கின்றன என்று இன்று விஞ்ஞானிகள் சொல்வதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் குர்ஆன் மூலமாக அறிவித்துவிட்டதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
நன்றி : உணர்வு
posted by SM.YOUSUF
Subscribe to:
Posts (Atom)