Sunday 10 May 2015
2 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-05-15 அன்று 2 பிறமத சகோதரர்களிடம் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் , இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான அமைதி மார்க்கம் என்பது பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது மேலும் 2 பேருக்கும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
"நம்பிக்கையை இறைமறுப்பாக மாற்றுவோர்" _திருப்பூர் மாவட்ட மர்கஸில் குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் சார்பாக 10.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர்.சதாம் ஹுசைன் அவர்கள் "நம்பிக்கையை இறைமறுப்பாக மாற்றுவோர்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
இதற்கு முன் மூஸாவிடம் ( கேள்வி) கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் கேட்க விரும்புகிறீர்களா?
நம்பிக்கையை (இறை)மறுப்பாக மாற்றுபவர் நேர்வழியை விட்டு விலகி விட்டார்.
அல்குர் ஆன் 2:108
இதற்கு முன் மூஸாவிடம் ( கேள்வி) கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் கேட்க விரும்புகிறீர்களா?
நம்பிக்கையை (இறை)மறுப்பாக மாற்றுபவர் நேர்வழியை விட்டு விலகி விட்டார்.
அல்குர் ஆன் 2:108
லஞ்சம் வாங்குவது குற்றம் _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை கிளை சார்பாக 9/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் லஞ்சம் வாங்குவது குற்றம் (அல்குர்ஆன்(2:188)} எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...
2:188. உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களை (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள்!
உயிர்களைக்கைப்பற்றும் வானவர்கள் _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர்மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 09.05.2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹம்மதுஅலி" அவர்கள் 165. உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் என்பதற்கு விளக்கமளித்தார்கள்
165. உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள்
"மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்ற "இஸ்ராயீல்' என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான்; என்று பரவலாக நம்புகிறார்கள்.
ஆனால்
"இஸ்ராயீல்' என்ற பெயரில் வானவர் இருக்கிறார் என்று திருக்குர்ஆனிலோ,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை
இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவருக்கு புத்தகங்கள் _ ஜின்னாமைதானம் கிளை
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 8/5/15 அன்று
சகோதரர். குரு அவர்கள் (ஒரு மாதத்திற்கு முன்பு) இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை முகமது அலி ஜின்னா என மாற்றிக்கொண்டார். அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் பற்றி தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் , மாமனிதர் நபிகள் நாயகம் , மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்....? ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக தரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Subscribe to:
Posts (Atom)