Sunday, 6 October 2019

*சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை பெற இலவச ஆன்லைன் பதிவு முகாம்*



கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியிருக்கும் சிறுபான்மையின மக்களுக்காக அரசாங்கத்தாலும், சில தொண்டு நிறுவனங்களாலும் வருடந்தோறும் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த உதவித் தொகை பெரும்பாலும் தகுதியுடைய மாணவ, மாணவியர்களுக்கு சரியாகச் சென்றடைவதில்லை. இதற்கு காரணம் இது குறித்த போதிய விழிப்புணர்வு அம்மக்களிடம் காணப்படுவதில்லை.
இதனால் வருடந்தோறும் இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை, இதை எப்படிப் பெறுவது என்ற வழிமுறைகள் தெரியாத காரணத்தால் பயன்படாமல் மீண்டும் அரசாங்கத்திடமே சென்றுவிடுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணிப் பிரிவு தமிழகம் முழுவதும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம் ஆண்டுதோறும் பல பகுதிகளில் நடத்திக்கொண்டு வருகிறது.
அந்த வரிசையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பாக மாவட்ட தலைமையகமான மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வளாகத்தில் 06.10.19 ஞாயிறு அன்று காலை 9.00 மணியளவில் இந்நிகழ்ச்சி ஆரம்பமானது.
இதில் மாணவ மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுடன் காலை 8.00 மணிக்கே வந்து ஆர்வத்துடன் அமர்ந்திருந்து தமது உரிமையை பெற பதிவு செய்தனர்.
நிகழ்ச்சி ஆரம்பமானதும் மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, ஆன்லைன் பதிவுகள் வேகமாக நடைபெற்றன. இதில் அதிவேக இன்டர்நெட் இணைப்புடன் ஐந்து கணிணிகள் மூலம் இதில் அனுபவமுள்ள மாணவரணியைச் சேர்ந்த நிர்வாகிகள் பதிவு செய்து கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சி இந்நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் நூர்தீன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாவட்ட மாணவரணிச் செயலாளர் இம்ரான் அவர்கள் தலைமையிலும், மாவட்ட துணைச் செயலாளர் ஹனிபா,இந்தியன் நகர் ரஜாக் , கோம்பைத்தோட்டம் அப்துல்லாஹ் MISc., MSநகர் சிராஜ், பெரியதோட்டம் பசீர் அலி, மற்றும் மாணவரணி சகோதரர்கள் பதிவு செய்யும் பணிகளை செய்து வருகின்றனர்.
தொண்டரணிச் செயலாளர் சித்திக் அவர்கள் தலைமையில் தொண்டரணி சகோதரர்கள் வந்திருந்த பொதுமக்களுக்கும் பணியாற்றும் சகோதரர்களுக்கும் தேவையான உதவிகளை செய்தனர்.
மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அராபத், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் ரஷீத், ரபீக், ஷேக் பரீத், மருத்துவரணிச் செயலாளர் ஜாகிர், மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
பல மாணவ மாணவியர்களுக்கு வங்கிக்கணக்கு மற்றும், பள்ளியில் கடந்த வருட மதிப்பெண் சான்று பெறாமல் இருந்தனர்.
அவர்களுக்கு ஆவணங்களை முறையாக பெறும் வழிமுறைகளை விளக்கப்பட்டது.
ஆவணங்களை முறையாக பெற்று வருபவர்களுக்காகவும், இன்று பதிவு செய்ய இயலாதவர்களுக்கும்
இன்ஷாஅல்லாஹ் அடுத்த வாரமும் இதே இடத்தில் முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
என்றும் சமுதாய மற்றும் சமூக சேவை பணிகளில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம்.