தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 05/07/2019 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்,மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் ரஷீத், ரபீக், சேக் பரீத், அனிபா, மற்றும் மாபு பாஷா , மாவட்ட அணிச் செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் சகோதரர். ஜமால் உஸ்மானி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
அதில், மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்றும்,
சொந்த நாட்டு குடிமக்கள் காட்டுமிராண்டிகளால் அடித்துக் கொல்லப்பட்டு வருகிறார்கள்,
உ.பி-யில் முஹம்மது அஹ்லாக் தொடங்கி ஜார்கண்ட் தப்ரேஸ் அன்சாரி வரை நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். என்பதையும்
சட்ட ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கும் ஜார்கண்ட் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
இதில் தொடர்புடையவர்கள், இதன் பின்னணியில்
இருப்பவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி,
இருப்பவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி,
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.