திருப்பூர் மாவட்டம் சார்பாக 03-10-2016 அன்று கோவை கலவரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது ,சமீபத்தில் கோவையில் இந்து முன்னனி பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டார் உடனே முஸ்லிம்கள் தான் இந்த கொலையை செய்தார்கள் என்று கூறி கலவரத்தை ஏற்படுத்தி ,கடைகளை அடித்து நொறுக்கி,வழிபாட்டு தலங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர் இதனால் கோடிக்கனக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது,மேலும் திருப்பூர் மவட்டத்திலும் முஸ்லிம் சமுதாய மக்களை விசாரனை என்ற பெயரில் திருப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் ,இதனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக பொதுமக்களை திரட்டி கோவையில் பாதிக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கவேண்டும்,மற்றும் விசாரனை என்ற பெயரில் காவல்துறை அழைத்து செல்வதையும் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது..இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்குகொண்டனர்..அல்ஹம்துலில்லாஹ்...