Tuesday, 10 September 2013

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம்" கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம் _ தீர்மானங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்ஷாஅல்லாஹ் வருகிற ஜனவரி 28  அன்று  கோவை,சென்னை, திருச்சி,நெல்லை ஆகிய 4 மண்டலங்களில் முஸ்லிம் சமுதாயதிற்கு தனி இடஒதுக்கீடு கேட்டு   சிறை செல்லும் போராட்டம்  நடைபெற உள்ளது.  

கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு  கூட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ்  தலைமையில் மாநில செயலாளர் அப்துர்ரஹீம் மற்றும் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக்  முன்னிலையில் கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு, நாமக்கல்,திண்டுக்கல்,சேலம்,தர்மபுரி ,மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு  கூட்டம்   09.09.2013 அன்று திருப்பூர் பெரியகடைவீதி மர்கசில் நடைபெற்றது. 

கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

1.சிறை செல்லும் போராட்டம்

  தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கா3.5%இடஒதுக்கீடு போதுமானதல்ல. அதை அதிகரித்து தருவோம் என முதல்அமைச்சர்.ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், இந்தியஅளவில் முஸ்லிம்களுக்கு தனியாக 10% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என நீதிபதி.ரங்கநாத்மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற கோரி மத்தியஅரசை வலியுறித்தியும் இன்ஷாஅல்லாஹ் வருகிற ஜனவரி 28 செவ்வாய்கிழமை கோவையில் நடைபெறும் சிறை செல்லும் போராட்டத்திற்கு, 8 மாவட்டங்களில் இருந்து 4 இலட்சம் முஸ்லிம்களை திரட்டி செல்லவேண்டும்..என்றும்

2.வக்ப் வாரியத்தை முற்றாக கலக்க வேண்டும் 

கிருத்துவ சமுதாயத்தின் அறப்பணிகளுக்கான சொத்துகளை அரசு தலையீடு இல்லாமல் கிருத்துவ சமுதாயம் மட்டுமே நிர்வகித்து வருகிறது.இதனால் அவர்களின் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப் படாமல் பாதுகாப்பாக இருந்துவருகிறது.ஆனால்,முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசின் வக்ப் வாரியம் நிர்வகிக்கிறது.இதனால்,அரசியல்வாதிகளும், சுரண்டல் பேர்வழிகளும், கொள்ளையடிக்க வாய்ப்பாக இருந்துவருகிறது.எனவே முஸ்லிம் சமுதாய சொத்துகளை  அரசு தலையீடு இல்லாமல் முஸ்லிம் சமுதாயமே நிர்வகிக்கும் வகையில் வக்ப் வாரியத்தை முற்றிலுமாக கலைத்து  விடவேண்டும் ....என்றும் 

3.திருமண பதிவுகளில் கெடுபிடி நீக்கவேண்டும்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருமணங்களை பதிவு செய்யவேண்டும் என தமிழகஅரசு சட்டம் இயற்றியது.திருமணத்தை பதிவு செய்ய போகும்போது முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சனை களை எதிர் கொள்கின்றனர்.தற்காலத்தில் முஸ்லிம்கள் திருமண பத்திரிக்கை கூட அடிக்காமல் எளிமையாக திருமணம் செய்கின்றனர்.அனால் அதிகாரிகள் திருமண பத்திரிக்கை கொண்டு வர நிர்பந்தப்படுத்து கின்றனர். மேலும் இது போன்ற கெடுபிடிகளை நீக்கவேண்டும்.... என்றும் 

4. மின்வெட்டை சீர்செய்ய வேண்டும்.


குழந்தைகள்,மாணவ மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பதிக்கும் வகையில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும் ..என்றும் 

தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன