"ஐயா, நானே ஓர் இந்து. என் சமூகத்தை நானே இழிவாகக் காட்டுவேனா? மதத்தின் பெயரால் நடத்தப்பட்டுள்ள படுபாதகக் குற்றங்கள்தான் இங்கே விசாரிக்கப்படவேண்டும். என் மத விருப்பங்களை அல்ல.’- ஆஷிஷ் கேத்தன்
பாசிசத்தின் காரிருள் இந்நாட்டின் ஆட்சி, அதிகார, நீதி, ஊடக துறைகளையெல்லாம் சூறையாடி வரும் வேளையிலும் நீதியை நிலைநாட்டும் உறுதியுடன் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களில் ஒருவர் தாம் ஆஷிஷ் கேத்தன். எந்தவொரு முஸ்லிம் அமைப்புகளும் செய்ய இயலாத அர்ப்பணிப்புமிக்க காரியங்களை உயிரை பணயம் வைத்து 6 மாத காலம் டெஹல்காவுக்காக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை நேரடியாக சந்தித்து பேட்டியெடுத்து உலகிற்கு அவர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்திய ஆஷிஷ் கேதான் என்ற பத்திரிகையாளரை இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
இன்று பிழைப்புக்காய் மாறடித்து, எந்த அறமும் இல்லாது ஊடகங்களை கழிவறைகளாக மாற்றும் பத்திரிகையாளர் மத்தியில் எந்த சமரசமும் இல்லாமல் ஆஷிஷ் கேத்தன் செய்ததை நாங்கள் நன்றியுடன் நினைவுகூறுகிறோம்.
அவரது 60 மணி நேரப் வீடியோ பதிவுகளில் கொலைகாரர்கள், காவல்துறை உயரதிகாரிகள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், அரசு வழக்கறிஞர்கள் என பலர் தோன்றி தங்களின் வீரதீரச் செயல்களை விரிவாக வர்ணித்தார்கள் .கோத்ராவில் ரயிலை எப்படி எரித்தார்கள், அதில் இருந்த கரசேவகர்களை எல்லாம் எப்படி நம் என் உயிர் தோழன் படத்தில் வரும் நாயகனைப் போல சங் பரிவார் ஆட்களே பலி கொடுத்தார்கள் என்பதையும் ஆதாரங் களுடன் மிக துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டினார் ஆஷிஷ் கேத்தன். அதன் பின் சிலரைப் பிடித்து மிரட்டி எப்படி எல்லாம் தவறான வாக்குமூலங்களைப் பதிவு செய்து கோத்ராவின் மிகவும் மதிக்கத்தக்க இஸ்லாமியத் தலைவர்களை சிறையில் அடைத்தார்கள் என்பதையும் இந்த வீடியோ பதிவுகள் உறுதிப்படுத்தின.
பாபு பஜ்ரங்கி பல கொலைகளைச் செய்துவிட்டு நான் அவர்களை எல்லாம் கொன்ற பிறகு மகாராணா பிரதாப் ஆக உணர்ந்தேன் என்கிறான். மதன் சாவல், தான் எப்படி காங்கிரஸ் எம்.பி இஷான் ஜாப்ரியைத் தரை-யில் எட்டி உதைத்து, அவரைத் துண்டு துண்டாக வெட்டி, உயிருடன் தீயிட்டுக் கொளுத்தினோம் என்பதைத் துல்லியமாகக் கூறுகிறான். இன்னும் மூன்று மணி நேரம் மட்டுமே உள்ளது காரியத்தை முடிக்க என்பதை எப்படிக் கொலை-காரர்களுக்குத் தெரிவித்தான் என்பதை மங்கிலால் ஜெயின் பரபரப்புடன் விவரிக்கிறான். இது வரலாறு காணாததாக இருக்க வேண்டும் என்று தங்களின் தலைமை எப்படி உத்தரவிட்டது என்பதைப் பதிவு செய்கிறான் தீபக் ஷா. ராக்கெட் செலுத்தும் கருவியைத் தயாரித்ததை ஒரு விஞ்ஞானியைப் போல் விளக்கும் ஹரேஷ் பட்டுக்குப் பின்னர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி கொடுத்து அழகு பார்த்தான் நரேந்திர மோடி. நாங்கள் கொடுத்த ஆயுதங்களின் எண்ணிக்கையைப் பார்த்து எங்கள் ஆட்களே திகைத்துப் போனார்கள் என்று மேலும் கூறுகிறான் ஹரேஷ் பட். எப்படி இந்த இனப்படுகொலையின்போது குஜராத் காவல்துறையினரின் கண்களும் வாயும் மூடப்பட்டிருந்தது என்கிறான் பாபு பஜ்ரங்கி. நரேந்திர மோடி காவல்துறையை எங்களுக்காகப் பணிபுரியச் செய்தார் என்கிறான் வி.எச்.பி. தலைவர் ராஜேந்திர வியாஸ். ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தபோது எப்படி கொலைகாரர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி இருந்தது என்பதைக் கூறுகிறான் திமந்த் பட். காவல் துறையினரே எப்படி 70-&80 பேரைக் கொன்றார்கள் என்பதை சுரேஷ் ரிச்சர்ட் நினைவு கூர்கிறான். என்னை வெளியே கொண்டு வர நரேந்திர மோடி மூன்று முறை நீதிபதிகளை மாற்றினார் என காலரைத் தூக்கி விட்டுச் சொல்கிறான் பாபு பஜ்ரங்கி. இதே பாபு பஜ்ரங்கியைத்தான் நரேந்திர மோடி பல மாதங்கள் ராஜஸ்தானின் மௌண்ட் அபுபில் உள்ள பெரும் சொகுசு மாளிகையில் மறைத்து வைத்திருந்தான். கொலைகளைச் செய்தவர்கள் மீதான சில வழக்குகள் வலிமையற்றவை. கடவுளின் ஆசிர்வாதத்தால் சமாளித்தோம் என பெருமூச்சு விடுகிறான் மூத்த வழக்கறிஞரும் வி.எச்.பி. பொதுச்செயலாளருமான திலிப் திரிவேதி. மேலும் நீதிபதி கே.ஜி.ஷா நம்முடைய ஆள், நீதிபதி நானாவதிக்குப் பணம்தான் குறி என்கிறான் குஜராத் மாநில வழக்கறிஞர் அரவிந்த பாண்டியா.
சிறப்புப் புலனாய்வுக் குழு முன்னால் தான் ஆஜராக விரும்புவதாக ஆஷிஷ் கேத்தன் தானே மனு செய்தார். அவர் அழைக்கப்பட்டார். அவர் தனது விரிவான வாக்குமூலங்களையும் 60 மணி நேர காட்சிக் கோப்புக ளையும் அந்தக் குழுவிற்குக் கொடுத்தார். அதன் பின் தொடர்ந்து பல முறை சென்று வாக்குமூலங்கள் அளித்தார். அதில் பாபு பஜ்ரங்கி, மாயா கோட்னானிக்கு எதிராகப் பல நுணுக்கமான தகவல்களை வழங்கினார் ஆஷிஷ். நீதிமன்றங்களில் தொடர்ந்து ஆஜராகிக் கொண்டேயிருந்தார் ஆஷிஷ். பல முறை அவரிடம் வேண்டாத கேள்விகள், குதர்க்கமான கேள்விகள் என அவரை ஆத்திரப்படுத்தும் விதமாகவே நீதிபதிகளும், அரசு வழக்கறிஞர்களும் நடந்து கொண்டார்கள். இப்ப கூட நீங்க ரகசிய காமிரா வச்சிருக்கீங்களா என்றார் நீதிபதி ஜோஷி. அவர் எல்லா குற்றவாளிகளின் முன்னணியில் ஆஷிஷிடம் அவரது குடும்பத்தார், அவரது வீடு, அது வாடகை வீடா, எத்தனை ஆண்டுக-ளாக இந்த விலாசத்தில் குடியிருக்கிறார் என அங்கு நீதிமன்ற அறையில் இருக்கும் கொலைகாரர்களுக்குத் தகவல் தருவதற்காகவே விசாரனையை நடத்தினார். டெல்லியில் ஒரு புகழ்பெற்ற பெரிய பத்திரிகையில் பணியாற்றும் ஒரு பத்திரிகையாளனுக்கே இப்படிப்பட்ட மரியாதை என்றால், பாதிக்கப்பட்ட ஏழை சாட்சிகளை எப்படி நடத்தியிருப்பார்கள்.
”ஒரு சாதாரண, எளிய நிருபனாகிய என்னால் இவ்வளவு முக்கிய ஆதாரங்களைத் திரட்டி வர முடிந்தால், சர்வ அதிகாரமும் கொண்ட உங்கள் அணியால் அனைத்தையும் கொண்டுவரமுடியும் என்றேன் இந்த ஸ்டிங் ஆபரேஷனை நான் மேற்கொண்டதன் நோக்கம் என்ன? இந்துக்களைத் தவறானவர்கள் என்று காட்டுவதா? என்று அதிகாரி கேட்டார் .நான் சொன்னேன். ‘ஐயா, நானே ஓர் இந்து. என் சமூகத்தை நானே இழிவாகக் காட்டுவேனா? மதத்தின் பெயரால் நடத்தப்பட்டுள்ள படுபாதகக் குற்றங்கள்தான் இங்கே விசாரிக்கப்படவேண்டும். என் மத விருப்பங்களை அல்ல.’
.எடிட் செய்யப்படாத 60 நிமிட வீடியோ இந்த ஆதாரம் நாடு முழுவதையும் உலுக்கியெடுக்கும். மோடி பதவி விலகவேண்டியிருக்கும் கொலைகாரர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று நாங்கள் நம்பினோம்.ஆனால் நடக்கவில்லை. என்று வருத்ததுடன் கூறுகிறார் ஆஷிஷ் கேத்தன்
பாதிக்கப்பட்ட ஆதரவற்ற சமுதாயத்திற்காக உயிரை பணயம் வைத்து நீதிக்காக போராடிய ஆஷிஷ் கேத்தன் அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக .நேர்வழி காட்டுவானாக
thanks : https://www.facebook.com/BeliversNampikkaiyalarkal?hc_location=timeline