Thursday, 17 January 2013

"இஸ்லாத்திற்கு விரோதமாக இஸ்லாமிய கூட்டமைப்பு"

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வருடம் நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்ப்பட்டு பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இஸ்லாமிய பெயர் வைத்துள்ள அமைப்புகள், கட்சிகள், ( தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தவிர)  அனைத்து இயக்கங்கள் ஒன்றிணைத்து மக்களிடம் பொருளாதாரத்தை வசூலித்து இஸ்லாமிய மக்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்லி "இஸ்லாமிய கூட்டமைப்பு" என்று ஏற்படுத்தினர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனித்து களமிறங்கி  ( 1 ) ( 2 ) ( 3 ) பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய அடிப்படை இன்றி அமைக்கப்பட்ட
இந்த கூட்டமைப்பினர் "இலவச திருமண திட்டம் "என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்து திருப்பூர் சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் பேனர் வைத்து வசூல் செய்து வருகின்றனர்.

இந்த திட்டத்தில் ஏழை பெண்களுக்கு உதவுகிறோம் என சொல்லி,
வழங்க உள்ளதாக அவர்கள் கூறுவது .....
மணமகனுக்கு வரதட்சணையாக 2 பவுண் தங்கம் , சீர் வரிசையாக பாத்திரம்கள் , ஒருமாத உணவுப்பொருள்கள் என பட்டியல் நீளுகிறது .

இஸ்லாமிய திருமணம் என்றால் மணமகன் ,மணமகளுக்கு மஹர்வழங்க வேண்டும் என சட்டம் உள்ள நிலையில்
இஸ்லாமிய சட்டதிற்க்கு மாற்றமாக மணமகனுக்கு வரதட்சிணை வழங்கி ,  மணமகளுக்குஉதவுகிறோம் .என்று இஸ்லாத்திற்கு விரோதமான நிலைபாட்டை எடுத்துள்ளனர்.

 இஸ்லாமிய அடிப்படையில் மக்களுக்கு உதவுதல் நன்மை என்று மக்களும் இந்த காரியதிற்கு தமது பொருளாதாரத்தை வழங்கினால்,
இறைவனின் கோபத்திற்கும்,பாவத்தையும் பெற்றுத்தரும் காரியமாக அமையும் என்பதை விளக்க  
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் முடிவு செய்துள்ளது.