Saturday, 18 June 2011

செக்ஸ் புகாரில் சிக்கிய ஊட்டி பாதிரியார் அமெரிக்கா செல்ல பிஷப் உத்தரவ


செக்ஸ் புகாரில் சிக்கிய ஊட்டி பாதிரியார் அமெரிக்கா செல்ல பிஷப் உத்தரவு சென்னை: அமெரிக்காவில் பாலியல் புகாரில் சிக்கிய, ஊட்டி பாதிரியார் முறைப்படி விசாரணையை எதிர்கொள்ளுமாறும், இதற்காக அமெரிக்காவுக்குச் செல்லுமாறும் பிஷப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள மின்னசோடா மாகாணத்தில் கத்தோலிக்க பாதிரியாராக இருந்தவர் ஜோசப் பழனிவேல் ஜெயபால். வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜெயபால் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் வாட்டிகனை எட்டியதும், பாதிரியார் ஜோசப் பழனிவேலுக்கு சிறிய அளவிலான தண்டனை கொடுக்கப்பட்டது. தற்போது அவர், ஊட்டியில் உள்ள அமல்ராஜ் என்ற பிஷப்பின் கீழ் பணியாற்றி வருவதாகவும், கிறிஸ்தவ பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்களை அவர் தான் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயபாலால் பாதிக்கப்பட்டோர், மின்னசோடாவில் ஒன்று கூடி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் சர்ச் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர். ஆனால், 'பாதிரியாரை எளிதாக நாங்கள் விரட்டிவிட முடியாது. அவர் பிஷப் இல்லத்திலேயே தங்கி இருக்கிறார். ஆசிரியர்கள் நியமனத்தில் எனக்கு உதவியாக இருக்கிறார். இதுபற்றி அவரிடம் விசாரித்த போது தான் குற்றமற்றவன் எனக் கூறுகிறார். எனக்கு வேறு வழி தெரியவில்லை' என்றார். இந்நிலையில், பாதிரியார் ஜெயபால் அமெரிக்கா சென்று வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை உயர் மறைமாவட்ட ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா உத்தரவிட்டிருக்கிறார். பாதிரியார் ஜெயபாலை வழக்கு விசாரணைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்குமாறு ஊட்டி பிஷப்பிடம் பேசியிருப்பதாகவும் பேராயர் சின்னப்பா கூறினார். Source : http://thatstamil.oneindia.in/news/2010/04/07/accused-abuse-catholic-priest-ask.html
posted by SM.YOUSUF