Pages
▼
Wednesday, 26 October 2016
கந்தூரி என்ற பித்அத் நோட்டிஸ் வினியோகம் - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 23-10-2016 ஞாயிறு அன்று தாராபுரத்தில் ஜின்னாமைதானம் என்ற பகுதியில் மார்க்கத்திற்கு மாற்றமான கந்தூரி என்ற பித்அத் நடக்கவிருப்பதால் கந்தூரி நபிவழியா? என்ற தலைப்பில் 2000 நோட்டிஸ் அடிக்கப்பட்டு முஸ்லிம்கள் வசிக்கப்படக்கூடிய பகுதியில் தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை தாராபுரம் ஜின்னாமைதானம் என்ற பகுதியில் மார்க்கத்திற்கு மாற்றமான கந்தூரி என்ற பித்அத் நடக்கவிருப்பதால் 23-10-2016 ஞாயிறு அன்று அஸர் முதல் இஷா வரை ஐந்து இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. ஜின்னாமைதானம் மற்றும் அரசமரம் என்ற பகுதியில் சகோ:முகமது சலீம்(மங்களம்) ஐந்துமணி திண்ணை மற்றும் ராஜவாய்க்கால் பகுதியில் சகோ:சேக்அப்துல்லா(தாராபுரம்) சிந்தாமணி பகுதியில் சகோ:நூர்முகமது(தாராபுரம்) ஆகியோர் "முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லஹ்.
உணர்வு விற்பனை - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 23-10-2016 அன்று இந்த வார உணர்வு பேப்பர் மொத்தம் - 40 விநியோகம்செய்யப்பட்டது. சலூன் கடை, சங்கம், பேக்கரி மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 (இலவசமாக),பிற மத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 ( இலவசமாக ),விற்பனை செய்யப்பட்டது - 15,மொத்தம் - 40, அல்ஹம்துலில்லாஹ்.
" பள்ளிவாசலை சுத்தப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் " குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி சார்பாக 16-10-2016 அன்று காலை 11 மணியளவில் கிளை மர்கஸில் மாணவரனி சகோதரர்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " பள்ளிவாசலை சுத்தப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - தீபாவளி பிறமதகலாச்சாரமே -தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு 23-10-2016 ஞாயிறு இரவு 6:15 மணி முதல் 8:00 மணி வரை மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது. நபிவழியில் இல்லாத தீபாவளி பிற மதக்கலாச்சாரமே என்ற தலைப்பில் சகோ: பிலால் மற்றும் ஜபருல்லாஹ் ஆகியோர் . ஜம்ஜம் இரக்கம், காயிதே மில்லத் நகர் , சொர்னபுரி லே அவுட் , பழகுடோன் ஆகிய 4 இடங்களில் உரை நிகழ்த்தினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்,அல்ஹம்துலில்லாஹ்.