Pages

Friday, 30 December 2016

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக  25-12-2016 அன்று காலை 11 மணிக்கு  மஸ்ஜிதுல் ஹக் பள்ளியில்   "இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்"முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி  பதில்  நிகழ்ச்சி  நடைபெற்றது.  எழுபதுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும்  கலந்து கொண்டனர்.
சகோ. அபூபக்கர் சித்தீக் சஆதி  அவர்கள்  கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் .....


 1⃣. நபி ஆதம் (அலை) இறைவனை நேரில் பார்த்தார்களா ?.

2⃣. பில்லி சூனியத்தினால் பாதிப்பு ஏற்படுமா ?
.
3⃣. பெண்கள் காது குத்தலாமா ?

4⃣. அரசாங்கத்திற்கு செலுத்தும் வரி ஜகாத்  ஆகுமா ?

5⃣. பள்ளிவாசல் அல்லாஹ்விற்கு உரியது என்பதற்கு அளவுகோல் என்ன ?.

6⃣. நபிகள் நாயகம் ( ஸல் )  அவர்களையும் ,  குர்ஆனை யும்  முஸ்லிம்களுக்குரியது   என்று  சொல்வது   சரியா ?

7⃣. புதுமனை புகுவிழா  பாத்தியா ஓதுவது சரியா ?.

8⃣. பைத்தியம் சைத்தானின் வேலையா ?.

9⃣. பெண்கள் மெட்டி அணியலாமா ?.

🔟. நபியவர்கள் பெயர் கேட்கும் போது ஸலவாத்தை கூறுவது  கடமையா ?.

1⃣1⃣. இறைவனுக்கு உருவம் உண்டா ?.

1⃣2⃣. குர்ஆன் ஓதும் போது ஸஜ்தா வசனங்கள்  ஓதப்பட்டால் ஸஜ்தா செய்வது கடமையா ?.

1⃣3⃣. மண்டப திருமணங்களுக்கு  போகலாமா ?.

1⃣4⃣. ஜூம்ஆ நேரத்தில் வேறோருவரை வைத்து வியாபாரம் செய்யலாமா ?