Pages

Tuesday, 4 October 2016

சமுதாயப்பணி -நிலவேம்பு கசாயம் - ஹவுசிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 25-09-2016 அன்று காலை முதல் மதியம் வரை டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது.

 ஹவுசிங் யூனிட் ரேஷன் கடை அருகே சாமியானா போடப்பட்டு வழங்கப்பட்டது.

பிறகு வீதிகளில் சென்று வீடு வீடாகவும் வழங்கப்பட்டது.
 இந்நிகழ்ச்சியின் மூலம் ஏறத்தாழ 2000 முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத பொது மக்கள் பயன்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்ச்சியின் போது நடந்த சில சம்பவங்கள் ....

 அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஓட்டுனர் நம் அழைப்பை ஏற்று பேருந்தை நிறுத்தி அவரும் நடத்துனரும் நிலவேம்பு கசாயம் அருந்தியதோடு அல்லாமல் பயணிகள் அருந்தும் வரை வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தால்...... அந்நேரம் சிலரது உள்ளத்தில் எழுந்து வார்த்தையாக வெளியே வந்த சிந்தனை....
"இந்து முன்னணி அமைப்பினர் பேருந்தை நிறுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பேருந்தை கொளுத்தினர். ஆனால் நீங்கள் (முஸ்லீம்கள்) பேருந்தை நிறுத்தி மக்களுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றீர்கள்"

வீதிகளில் சென்று வீடு வீடாக நிலவேம்பு கசாயம் வழங்கும் போது ஒரு முஸ்லீம் அல்லாத பெரியவர் அவரது கருத்தாக பதிவு செய்தார்.
"நீங்கள் நிறைய நல்ல பணிகள் செய்கிறீர்கள். ஆனால் வெளியே தெரிவதில்லை. உங்கள் பணிகளை லோகத்துல தெரிவிக்க வேண்டும் "என்று கூறி தனது செல்போனில் புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் மற்றும் வாட்ஸ் அப்பீல் பகிர்ந்து கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்.