திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 10/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.சையது அலி அவர்கள் 367. அச்சம் தீர வழி எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்
367. அச்சம் தீர வழி
இவ்வசனங்களில் (28:31, 32) மூன்று அற்புதங்களைக் கூறிவிட்டு "இவ்விரண்டும்
அற்புதங்கள்' என்று கூறப்பட்டுள்ளது.
அச்சம்
ஏற்படும் போது கைகளை ஒடுக்கிக் கொள்ள வேண்டும் என்பது மூஸா நபிக்கு
வழங்கப்பட்ட அற்புதம் அல்ல. அனைவருக்கும் பொதுவானது என்பதால் தான் இரண்டு
அற்புதங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
அச்சம்
ஏற்படும் போது இதயம் கடுமையாக வேலை செய்யும். படபடப்பு அதிகரிக்கும். இதைத்
தவிர்க்க நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளாமல் பறவை போல கைகளை ஒடுக்கி தொய்வாக
வைத்துக் கொண்டால் இதயத்திற்கு அதிக இடம் கிடைக்கின்றது. நெருக்கடி இன்றி
அது வேலை செய்யும். படபடப்பு குறைந்து அச்சம் விலகும்.
அது
மட்டுமின்றி கைகளை ஒடுக்கிக் கொள்ளும் போது யாரோ நம்மை அரவணைப்பது போன்ற
எண்ணம் ஏற்பட்டு மேலும் சகஜ நிலைக்கு நம்மைக் கொண்டு வரும்.
இந்த மாபெரும் அனுபவ உண்மையைத்தான் இவ்வசனம் கூறுகிறது.