Pages

Tuesday, 7 April 2015

இல்லிய்யீன்,ஸிஜ்ஜீன் என்பது என்ன ? (83; 8, 19) _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  07/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.சையது அலி அவர்கள் இல்லிய்யீன்,ஸிஜ்ஜீன் என்பது என்ன ? (83; 8, 19) எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் 

83; 8. ஸிஜ்ஜீன் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
9. அது எழுதப்பட்ட ஏடாகும்.
10. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
11. அவர்கள் தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதினர்.
12. வரம்பு மீறும் ஒவ்வொரு பாவியையும் தவிர வேறு எவரும் அதைப் பொய்யெனக் கருத மாட்டார்கள்.
13. நமது வசனங்கள் அவனுக்குக் கூறப்பட்டால் "இது முன்னோர்களின் கட்டுக் கதைகள்'' எனக் கூறுகிறான்.
14. அவ்வாறில்லை! மாறாக அவர்கள் செய்தது அவர்களது உள்ளங்களில் துருவாகப் படிந்து விட்டது.
15. அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்.21
16. பின்னர் அவர்கள் நரகில் கருகுவார்கள்.
17. "நீங்கள் பொய்யெனக் கருதியது இதுவே'' என்று பின்னர் கூறப்படும்.
18. அவ்வாறில்லை! நல்லோரின் ஏடு இல்லிய்யீனில் இருக்கும்.
19. இல்லிய்யீன் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
20. அது எழுதப்பட்ட ஏடாகும்.
21. நெருக்கமான(வான)வர்கள் அதைப் பார்ப்பார்கள்.