Pages

Tuesday, 29 July 2014

மார்க்கம் அறிவோம் : நோன்பு பெருநாள் சட்டங்கள்


நோன்பு பெருநாள் சட்டங்கள் 


*   காலையில் விரைவாக தொழுகையை நிறைவேற்றி விட வேண்டும்.


*   ஏதாவதொன்றை சாப்பிட்டுவிட்டு தொழுகைக்கு செல்ல வேண்டும்.


*   பள்ளிவாசலில் தொழாமல் திடலில் தொழ வேண்டும்.


* ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் தொழுகை திடலுக்கு செல்ல வேண்டும். 


*   முன், பின் சுன்னத்துகள் பெருநாள் தொழுகைக்கு இல்லை.


*   பாங்கோ இகாமத்தோ இல்லை.


* இரண்டு ரக்அத் தொழுகையில் முதல் ரக்அத்தில் கூடுதலாக 7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் கூடுதலாக 5 தக்பீர்களும் சொல்ல வேண்டும்.


* கூடுதல் தக்பீர்கள் சொல்லும் போது கைகளை உயர்த்துவதோ, அவிழ்த்து கட்டவோ கூடாது.


*    தொழுகைக்குப் பிறகு இருக்கும் உரையில் கலந்து கொள்ள வேண்டும்.


*    மிம்பரில் நின்று உரை நிகழ்த்தக் கூடாது.


* எந்த வழியில் தொழுகைக்கு சென்றோமோ அதற்கு மாற்றமான வழியில் வீடு திரும்ப வேண்டும்.


* பெருநாள் தினத்தன்று அல்லாஹ்வை அதிகம் அதிகமாக பெருமைப்படுத்த வேண்டும். துதிக்க வேண்டும். அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.