Pages

Saturday, 24 May 2014

தவ்ராத்தில் யூதர்களின் கைவரிசை _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 24.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "தவ்ராத்தில் யூதர்களின் கைவரிசை"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
97.தவ்ராத்தில் யூதர்களின் கைவரிசை
தவ்ராத் என்பது யூதர்களின் வேதமாகும். அது ஹிப்ரு மொழியில் இருந்தது. அன்றைய யூத மக்கள் கூட அதை முழுமையாக அறிந்திருக்கவில்லை. சில பண்டிதர்கள் மட்டுமே அந்த வேதத்தை அறிந்து வைத்திருந்தார்கள். தமக்குச் சாதகமான விஷயங்களை மட்டும் மக்களுக்குக் கூறிவிட்டு மற்றவைகளை யூதப் பண்டிதர்கள் மறைத்தும் வந்தனர்.
இந்த நிலையில் தமது வேதத்தில் இருப்பதாக அவர்கள் கூறிய பல விஷயங்கள் அவர்களின் வேதத்தில் இல்லை என்றும், தமது வேதத்தில் இல்லை என்று அவர்கள் கூறிய பல விஷயங்கள் அவர்களது வேதத்தில் உள்ளன என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அறைகூவல் விடச் செய்தான்.
அரபுமொழியே எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஹிப்ரு மொழியில் அமைந்த தவ்ராத்தின் வசனங்களை எடுத்துக் காட்டி, "இதில் இன்ன குறை உள்ளது'' என்று அறைகூவல் விடச் செய்த காரணத்தால் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகிறது.
இறைவனால் அறிவிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இது நபிகள் நாயகத்துக்குத் தெரிந்திருக்க முடியும்.
(இக்குறிப்புக்கான வசனங்கள்: 3:93, 5:15)
தவ்ராத் பற்றி மேலும் அறிய 491வது குறிப்பை வாசிக்கவும்.