Pages

Wednesday, 6 April 2011

தவ்ஹீத் சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ABCD (SDPI PFI etc..) ரவுடி கும்பல்



ஜிஹாத் எனும் பெயரால் இளைஞர்களை வழிகெடுத்து வரும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் போக்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் குமரி மாவட்ட நிர்வாகிகள் நோட்டீஸ் விநியோகம் செய்து வந்தனர்.


அந்த நோட்டீஸில் உள்ள உண்மைச் செய்திகள் மக்களுக்கு சென்று விட்டால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ என பலர் பெயர்களில் உலா வரும் இவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடுமென்பதால் வெலவெலத்துப் போன அவர்கள் டி.என்.டி.ஜே நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்டு நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
நோட்டீஸ் விநியோகிக்க சென்றவர்கள் இரண்டே இரண்டு பேர் தான். இரண்டு பேர் மட்டும் தான் நோட்டீஸ் கொடுப்பதை அறிந்து கொண்ட இந்த ரவுடிகள் கூட்டமாக சேர்ந்து இருவரை கோழைத்தனமாக தாக்கி உள்ளனர்.
விமர்சனத்தை விமர்சனத்தால் எதிர்கொள்ள தயங்கும் இந்த கோழைகள், அந்த இரண்டு நிர்வாகிக்ளையும் அடித்து உதைத்த பின்னர் இறந்து விட்டதாக நினைத்தார்களோ அல்லது இறந்துவிட்டால் பிரச்சனையாகிவிடும் என நினைத்தார்களோ அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர்.
கொலைவெறி தாக்குதலுக்குள்ளான இரண்டு முஸ்லிம் சகோதரர்களும் நாகர்கோவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிட்சை பெற்று வருகின்றனர்.இறைவனின் கருணையால் ஜாஃபர், நாசர் என்ற அவர்கள் இருவரின் உயிருக்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை. அல்ஹம்துலில்லாஹ்!
ஆனால் கொலைமுயற்சியில் ஈடுபட்ட ரவுடிகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் கொள்கைவாதிகள் இப்போது தலைமறைவாகி விட்டனர்.
டி.என்.டி.ஜே நிர்வாகிகள் வெளியிட்ட அந்த நோட்டீஸில் ‘இவர்கள் முஸ்லிம் சகோதரன் என்று கூட பார்க்காமல் அடிப்பார்கள், தாக்குவார்கள். ஆனால் பாதிப்படைந்தவர் புகார் கொடுத்தால் அதை எதிர்கொள்ள திராணியின்றி தலைமறைவாகி விடுவர்’ என்று போடப்பட்டிருந்தது. அதை இவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.
இவர்களின் இந்த கீழ்த்தரமான செயலினால் குமரி மாவட்ட முஸ்லிம்கள் ‘சொந்த சகோதரனை கொல்ல துடிக்கும் இவர்கள் ரவுடிகக் கும்பல் தான் என்று உணர ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் பிற மாவட்டங்களில் முஸ்லிம்களை கொல்வதும் அடித்து உதைப்பதும் அராஜக செயல்கள் செய்வதும் குமரி மாவட்ட முஸ்லிம்களுக்கு இதுநாள் வரை தெரியாமல் இருந்தது.
இந்த சம்பவத்தின் மூலம் இவர்கள் முஸ்லிம்களுக்கு பகிரங்க எதிரிகள், இவர்கள் தீவிரவாதிகள் தான் என்பதை ஊருக்கு காண்பித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
குறிப்பு : கொலைவெறி தாக்குதலுக்குள்ளாகி மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நிலை சற்று தேறிவரும் அந்த இரண்டு சகோதரர்களுக்காக துஆ செய்யவும்.