Pages
▼
Thursday, 9 March 2017
தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 08-03-2017 அன்று மூண்று இடங்களில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் மதரஸத்துத் தக்வா மதரஸா மாணவிகள் சகோதரி - ஷன்ஷிதா அவர்கள்**நபிகளாரின் பண்பு** என்ற தலைப்பிலும் TNTJ பேச்சாளர் சகோ-அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள்**நபிகளாரின் வாழ்க்கை முறை** என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
பிறமத தாவா - அவினாசி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 06-03-17 அன்று மாற்று மத சகோதரர்-Keerthana Tyre owner, Sri Ram என்பவர், குர்ஆன் விருப்பத்துடன் கேட்டார்.அவருக்கு குர்ஆனை புரிந்து கொள்ளும் முறை பற்றியும், மேலும் சந்தேகங்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளும்படி குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இதர சேவைகள் - மங்கலம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக வாரந்தோறும் உணர்வு வார இதழ் பொது வணிகத்துறை மற்றும் மளிகை கடைகள் மற்றும் இயக்கம் சார்ந்த கட்சி ஆபிஸ் மற்றும் சலூன் கடைகள் மற்றும் காவல்துறை நிலையம் மற்றும் மாற்று கொள்கையை சார்ந்த பலருக்கும் வாரந்தோறும் 40 நாற்பது உணர்வு இதழ் இலவசமாக வழங்கப்படுகிறது,அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை
குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 08-03-17 அன்று தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"அல் பாத்திஹா"அத்தியாயம் 1-7 வசனங்கள் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 08/03/17_ ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு நபி ( ஸல்) வரலாறு என்ற தலைப்பில் சகோ. அபூபக்கர் சித்திக் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ். குறிப்பு:( போட்டோ எடுக்கவில்லை)
தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக 07-03-2017 அன்று தெருமுனைபிரச்சாரம் ரேணுகா கார்டன் வேலன் ஹோட்டல் பின்புறம் நடைபெற்றது ,இதில் மதரஸா மாணவிகள் சகோதரி் - தாஹீரா தன்வீர் அவர்கள்** விதியை நம்புதல்** என்ற தலைப்பிலும் , சகோதரி- ஆஷிகா அவர்கள்** நபிகளாரின் நற்பண்புகள்** தலைப்பிலும் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
சமுதாயப்பணி - அலங்கியம் கிளை
திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிராமம் பொதுமக்களிடம் கேஸ் சிலிடர்களுக்கு தங்களிடம் பில்லுக்கு் மேலாக ரூ-50பது, ரூ-70வது ரூ-30பது இதுபோல் கூடுதல் வசூல் செய்து வருகிறார்கள், இதை கண்டித்து பொதுமக்கள் பலர் (TNTJ) தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அலங்கியம் கிளைக்கு பலர் புகார் மனுவாக அளித்தார்கள். அதன் அடிப்படையில் மாவட்ட வழிகாட்டுதலில் ஆயில் தலைமை அலுவகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் தாராபுரம் இன்டன் கேஸ் வினியோக உரிமையாளர்கள் கிளை நிர்வாகிகளை சந்தித்து இனி கூடுதல் தொகை வாங்க மாட்டார்கள் என்று உறுதியளித்தார்கள், கிளை நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி இதை அலங்கியம் வாழ் மக்கள் மத்தியில் தெரிவிக்கும் படி கேட்டிருந்தோம் இந்த கோரிக்கையை ஏற்று கடந்ந ஞாயிறு 05-03-17 அன்று அலங்கியம் ஐடியல் பள்ளி வளாகத்தில் மாலை 5.00மணி அளவில் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் கேஸ் சம்மந்தமான சந்தேகங்களையும் மக்கள் கேட்டறிந்தனர் அதில் உள்ள விதிமுறைகள், பாதுகாப்பு,பாலிஸி அனைத்தியும் அதன் உரிமையாளர் நல்ல முறையில் மக்களுக்கு புரியும்படி விளக்கம் அளித்தார்கள். ஏதேனும் புகார் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் இனி பில்லுக்கு மேல் கூடுதல் தொகை கொடுக்ககூடாது என்றும் மக்கள் தான் பில்லுக்கு மேல் தொகை டெலிவரி பாய்ஸ் குடுத்து தவறான வழி காட்டி விட்டார்கள் என்றும் குற்றம் சாட்டினார்கள், இறுதியில் இந்த மீட்டிங் மக்கள் மத்தியில் திருப்தி ஏற்பட்டது. குடுத்த புகாருக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது என்றும் இன்டியன் ஆயில் நிருவனத்துக்கு நன்றி மனு அளிக்கப் பட்டது. தாராபுரம் இன்டன் கேஸ் உரிமையாளர்கள் இது சம்மந்தமாக பொது மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது என்றாரகள் அவருக்கும் அலங்கியம் கிளை சார்பாக நன்றி தெறிவிக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் திருகுர்ஆன், முஸ்லிம் தீவிரவாதிகள்??? மற்றும் பொது சிவில் சட்டம் புத்தகம் வழங்கி இஸலாம் குறித்து தாவா செய்யப் பட்டது.