Pages
▼
Thursday, 2 April 2015
வேறுவானங்களும், வேறுபூமியும் _மடத்துக் குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம் கிளை சார்பாக 02.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் சையதுஅலி அவர்கள் 225. வேறுவானங்களும், வேறுபூமியும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
225. வேறு வானங்களும், வேறு பூமியும் உருவாக்கப்படும்
இவ்வசனங்களில்
(11:107,108) "வானங்களும் பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம்
நல்லவர்கள் சொர்க்கத்திலும், கெட்டவர்கள் நரகத்திலும் இருப்பார்கள்' என்று
சொல்லப்படுகிறது.
அதாவது வானம், பூமி எப்படி அழியாதோ அவ்வாறு சொர்க்கவாசிகளுக்கும் நரகவாசிகளுக்கும் அழிவில்லை என்ற கருத்தை இது தருகிறது.
உலகம் அழிக்கப்படும் போது வானங்கள், பூமி உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டு விடும் என்று திருக்குர்ஆன் (55:26, 27) கூறுகிறது.
வானமும்
பூமியும் அழிக்கப்பட இருக்கும்போது வானமும் பூமியும் நிலையாக இருக்கும்
காலமெல்லாம் என்று எப்படி கூற முடியும் என்ற சந்தேகம் இதனால் ஏற்படலாம்.
இன்னும் சில வசனங்களை நாம் ஆய்வு செய்தால் அவை இந்த முரண்பாட்டை நீக்கும் வகையில் அமைந்துள்ளதைக் காண முடிகின்றது.
இந்தப் பூமி
வேறு பூமியாகவும், வானங்கள் வேறு வானங்களாகவும் மாற்றப்படும் என்ற
கருத்தில் அமைந்த வசனங்களே அவை. (பார்க்க: திருக்குர்ஆன் 14:48, 21:104,
39:67)
இப்போதுள்ள
வானம், பூமி ஆகியவை அழிக்கப்பட்ட பின், மீண்டும் உருவாக்கப்படும் வானம்,
பூமி நிலையானதாக இருக்கும். அந்த வானம், பூமி நிலையாக இருக்கும்
காலமெல்லாம் சொர்க்கம், நரகமும் நிலையாக இருக்கும் என்பதையே இவ்வசனங்கள்
(11:107, 108) கூறுகின்றன.
மேலும் விபரத்துக்கு 453வது குறிப்பைப் பார்க்கவும்
அல்லாஹ்வுக்குக்கடனா? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 02.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 75. அல்லாஹ்வுக்கு க்கடனா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
75. அழகிய கடன் என்றால் என்ன?
இவ்வசனங்களில்
(2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20) அல்லாஹ்வுக்கு அழகிய கடன்
கொடுக்குமாறு கூறப்படுகிறது. இஸ்லாம் அல்லாத மதங்களில் கடவுளுக்குக்
கொடுப்பது என்றால் வழிபாட்டுத் தலங்களில் உள்ள உண்டியலில் காணிக்கை
செலுத்துதல் அல்லது பூசாரிகளின் கையில் கொடுத்தல் என்ற கருத்தில்
சொல்லப்படுகிறது.
ஆனால்
இஸ்லாத்தில் அல்லாஹ்வுக்குக் கொடுத்தல் என்பது ஏழைகளுக்குக் கொடுத்தல் என்ற
பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பள்ளிவாசல் உண்டியலில் போடுவது என்று
பொருளில்லை. பொருளாதாரம் சம்பந்தமாக அல்லாஹ்வுடன் தொடர்புபடுத்திக் கூறும்
கட்டளைகள் அனைத்துக்கும் தேவையுடைய மனிதர்களுக்கு வழங்குவது என்பதே
பொருளாகும்.
அல்லாஹ்வுக்காக
ஆயிரம் ரூபாய் செலவு செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவர் அதை
ஏழைகளுக்குத்தான் அளிக்க வேண்டும். அழகிய கடன் என்பதும் இது தான்.
இச்சொற்பிரயோகத்தின்
மூலம் இறைவன் இரண்டு செய்திகளைக் கூறுகிறான். "நீங்கள் ஏழைகளுக்காக
உதவினால் அதற்கான பிரதிபலனை நான் உங்களுக்குத் தருவேன்; பல மடங்காகப்
பெருக்கித் தருவேன்'' என்பது முதலாவது செய்தி.
சிலர், ஒரு
ஏழைகளுக்கு உதவி விட்டு அவர்களிடம் நன்றிக் கடன் எதிர்பார்ப்பர்; செய்த
உதவிகளைச் சொல்லிக் காட்டுவர்; உதவி பெற்றவனை மட்டமாகக் கருதுவர். இது
தவறாகும்.
நாம்
உண்மையில் ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை; அல்லாஹ்வுக்குத் தான் கொடுத்தோம்
என்ற எண்ணம் வேரூன்றும் போது இந்தத் தீய எண்ணங்கள் விலகும் என்பது மற்றொரு
நன்மையாகும்.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20) http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/75_azakiya_kadan_enral_enna/
பிறமத சகோதர்.காளிதாஸ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தனி நபர் தாவா _செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 01.04.2015அன்று பிறமத சகோதர்.காளிதாஸ் அவர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும், இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது, மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள்.... ? " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
அன்னூர் புத்தா ரெடிமேட்கெளதம் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 01.04.2015 அன்று அன்னூர் பிறமத சகோதரர். புத்தா ரெடிமேட் கடை உரிமையாளர் கெளதம் அவர்களுக்கு இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாத்தை ஆதரித்தது இல்லை இனி எந்தவொரு சூழ்நிலையிலும் தீவிரவாத்தை ஆதரிக்காது என்று தாவா செய்து முஸ்லிம்தீவிரவாதிகள்...? புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
ஜனாஸாவின் சட்டங்கள் என்ன? _மடத்துக்குளம் கிளை மார்க்க விளக்க கலந்துரையாடல்
திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் கிளை 01/04/2015 அன்று மஃஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மார்க்க விளக்க கலந்துரையாடல் நடைபெற்றது .. ஜனாஸாவின் சட்டங்கள் என்ன? என்பதை ஒருவருக்கு ஒருவர் தனக்கு தெரிந்ததை கூறுங்கள் என கூறி அதில் இருந்த தவறுகளை திருத்தம் செய்துகொண்டோம். மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்
3பிறமத சகோதர்களுக்கு இஸ்லாம் பற்றி தனித்தனியாக தனிநபர்தாவா & 2புத்தகம் _செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 01.04.2015அன்று 3பிறமத சகோதர் களுக்கு இஸ்லாமிய கடவுள்
கொள்கை குறித்தும், இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான
விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும், 3,நபர்க்கு தனித்தனியாக தனி நபர் தாவா செய்யப்பட்டது,மேலும் முஸ்லிம்
தீவிரவாதிகள்.... ? " புத்தகம்2, அன்பளிப்பாக வழங்கப்பட்டது